Wednesday 15 July 2015

காலனால் அழிக்க இயலாத காவியம்.


       கண்ணீர் அஞ்சலி                                          



                                                        M.S.விஸ்வநாதன்                      
                                                               1928 - 2015

கலைகளுக்குரிய சுக்கிரனின் துலாம் ராசிக்குள் எப்போது சனி பகவான் பிரவேசித்தாரோ அப்போதிருந்தே துலாம் ராசி குறிப்பிடும்  நீதித்துறையும், பெண்களின் பாதுகாப்பும், கலைத்துறையும் கடுமையான பல சோதனைகளையும் இழப்புகளை சந்தித்துவருகிறது. உச்ச சனியுடன் ராகுவும் துலாம் ராசிக்குள் சென்று இணைந்ததிலிருந்து காலம் தனது கோரதாண்டவத்தை ஆடிவருகிறது. இப்போது சனியும் ராகுவும் துலாம்  ராசியை விட்டு விலகிவிட்டாலும் துலாம் ராசிக்கு இருபுறமும் அவை நிற்பதால் கடுமையான பாவகர்த்தாரி யோகத்தில் துலாம் ராசி அகப்பட்டுக்கொண்டுள்ளது. தராசுத்தட்டு தடுமாரிக்கொண்டிருக்கிறது.நீதி சாமான்யனுக்கல்ல என்ற நிலை தோன்றிவிட்டது குறித்த விரக்தி அடித்தட்டு மக்களிடையே பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இந்தியத் திருநாட்டில் நீதித்துறை மீது சாமான்ய மக்கள் நம்பிக்கை இழந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் தங்களது குடும்பம் மற்றும் பெண்கள் குறித்த அச்சத்திற்கு இடையே வாழ்ந்துவருகிறான் இந்தியப் பாமரன். 

துலாம் ராசி குறிக்கும் தமிழகத்து மக்களுக்கு இந்த காலகட்டத்தை கடந்து வருவது பெரிய வேதனை.நல்ல கலைகளில் மனிதன் தனது வேதனைகளை மறக்கிறான்.  திரைத்துறையில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுவரும் இழப்புகள் அதீதமானவை. 

தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், தாங்கள் பால்யத்தில் கேட்டு பார்த்து மகிழ்ந்த நல்லிசையை மனதில் அசைபோடுவதுதான்.  நல்ல திரைப்படங்களை, நல்ல கலைஞர்களை போற்றும் தமிழன் அத்தகைய கலைஞர்களின் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என மகிழ்கின்றான். 

இறைவனின் ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு காரணம் இருக்கும் என எனது பதிவுகளில் அடிக்கடி குறிப்பிடுவேன்.  நான்கு வயதில் தந்தையை இழந்து வறுமையின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க இயலாமல் சிறுவயதில் தாயுடன் உயிரை நீர்நிலையில் குதித்து மாய்த்துக்கொள்ள இருந்த நிலையில் கடைசி வினாடியில் காப்பாற்றப்பட்டனர் M.S.விஸ்வநாதனும் அவரது தாயாரும். காரணம் காலம் அவருக்கு அளித்திருந்த கடமை. 

இப்போது படைப்பின் காரணத்தை நிறைவு செய்து மீண்டும் இறைவனின் பொற்பாதங்களில் சென்று சேர இருக்கிறது M.S.V. யின் ஆன்மா. 

காலம் அவரது உயிரை பறித்துவிட்டது.

 ஆனால் அவரது இசை தமிழ் சினிமா வாழும்வரை உயிரோடிருக்கும்.
அதை காலனால் அளிக்க இயலாது.

ஆம் M.S.V காலனால் அளிக்க இயலாத காவியம்.


கனத்த இதயத்துடன்,

அன்பன்,
பழனியப்பன்.

Sunday 12 July 2015

உப நட்சத்திராதிகள் புரியும் உன்னதங்கள்

கடும் பணிச்சூழல் காரணமாக தாமதமாகவும் அறிவிக்கப்பட்ட தலைப்புக்கு மாறுபட்ட ஆய்வுக்கட்டுரை வெளியாகிறது. அறிவிக்கப்பட்ட தலைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு எனது மன்னிப்பைக் கோருகிறேன். 

ஒவ்வொரு மனிதனின் படைப்பிற்கும் ஒரு காரணம் உண்டு. இறைவனின் படைப்பில் யார் எப்போது எந்த நிலையில் இருந்து செயல்படவேண்டும் என்பதெல்லாம் மனிதர்களுக்கு மட்டுமல்ல உயிரினங்களுக்கும் பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்டது. படைப்பின் காரணங்களை ஆன்மிகம் மூலமும் ஜோதிடம் மூலமும் ஆழ்ந்து அறிந்தவர்கள், எல்லாம் அவன் செயல் என்று அமைதிபெறுகிறார்கள். இயற்கை எனும் இறைவன் வகுத்த நியதிகளை மீற முயல்கிறான் மனிதன். முடியாதபோது சோர்வுறுகிறான் அல்லது தனது ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் பிற மனிதனையும் நாசம் செய்யத்துணிகிறான். இன்றைய உலக வன்முறைகளுக்கும் தீவிரவாதத்திற்கும் இதுவே அடிப்படை. 

கே.பி. முறை ஜோதிடத்தில் நட்சத்திராதிபதிகள், உப நட்சத்திராதிபதிகள் மற்றும் உப உப நட்சத்திராதிபதிகள் முறையானது மிகவும் நுணுக்கமான பல விஷயங்களை அறிய உதவுகிறது. ஒருவரது வாழ்வில் என்ன சம்பவங்கள் நடக்கும் என்பதையும் அவை எப்போது நடக்கும் என்பதையும் அறிய உப நட்சத்திராதிபதிகளை ஆராய வேண்டியது அவசியம். அஷ்ட வர்க்கம், யோகங்கள், ஷட்பலம், ஷோடஷாம்சம் போன்றவை பாரம்பரிய ஜோதிடத்தின் பலம் எனில் நட்சத்திராதிபதி, உப நட்சத்திராதிபதி, உப உப நட்சத்திராதிபதி போன்றவை  கே.பி முறையின் முக்கிய பலம் எனலாம்.

நட்சத்திராதிபதி கிரகம் ஒரு வேலைக்குப் பொறுப்பாளி என்றால் உப நட்சத்திராதிபகி கிரகமே அக்குறிப்பிட்ட பணியை செய்யும் கிரகமாகும். உப உப நட்சத்திராதிபதி கிரகம் அக்குறிப்பிட்ட பணிக்கு உறுதுணையாக இருக்கும் கிரகமாகும். 


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். பெரும்பாலான ஜோதிட ஆய்வாளர்களுக்குத் தெரிந்த ஜாதகம் இது.  





 உப நட்சத்திராதிபதி உச்சமாக வந்துவிட்டால் அக்கிரகம் உச்ச பலனை தனது திசா - புக்திகளில் தரவேண்டும்.இந்த ஜாதகத்தில் லக்னாதிபதியே உச்சமாகியுள்ளார்.   அப்படி   உச்சமான   லக்னாதிபதி   புதன்  ஐந்து கிரகங்களுக்கு   உப   நட்சத்திரமாகியுள்ளது   இந்த ஜாதகத்தின் ராஜ யோகங்களுக்கு காரணமாகிறது.  

வித்யாகாரனான லக்னாதிபதி புதன் லக்னத்தில் உச்சம். லக்னத்தில் நீசமான வாக்கு ஸ்தானாதிபதி சுக்கிரனையும் புதன் தனது உச்ச பலத்தால் நீச பங்கப்படுத்துகிறார்.சுக்கிரனின் உப நட்சத்திராதிபதியும் புதன் என்பது இங்கு சுக்கிரனுக்கு கூடுதல் பலம். உச்சனுடன்  இணையும் நீச கிரகம் நீச பங்கப்படும் என்பதோடு உச்சனை உப நட்சத்திராதிபதியாகக் கொண்ட நீச நிலையிலிருக்கும் கிரகங்களும் நீச பங்கமடையும் ராஜ யோகத்தை தரும் என்பது ஒரு முக்கிய விதி. (K.P முறையில் ஜோதிட ஆய்வு செய்பவர்கள் இதை நன்கு உணரலாம்.) லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி சூரியன் என்பதும் அதன் உப நட்சத்திராதிபதி புதன் என்பதும் ஜாதகர் தம் வாழ்வில் ஒரு சிறந்த தலைவராக பின்னாளில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது ஜாதகருக்கு இறைவன் நிர்ணயித்த கர்மா என்பதை அறியலாம்.   

லாப ஸ்தானமான 11 ஆமிடத்தில் சனியுடன் இணைந்து நின்ற ராகு சனியைப் போன்று செயல்படுபவர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் ராகுவின் நட்சத்திராதிபதி சனி என்பதும் உப நட்சத்திராதிபதி உச்சனான புதன் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

வித்யாகாரகன் புதன் உச்சமானதால், ஜாதகர் புதனின் அம்சமாகவே - ஆசிரியராக வாழ்ந்து அத்தொழிலுக்கு சிறப்பு செய்தார். லக்னாதிபதியும் உச்சனுமான புதனை உப நட்சத்திரமாகக்கொண்ட ராகு திசையின் இறுதியில் ஜாதகர் சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பத்தாண்டுகள் (1952 - 1962) அப்பணிக்கு சிறப்பு சேர்த்தார். பிறகு இந்தியாவில் இரண்டாவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு (1962 - 1967) போற்றுதலுக்குரிய ஜனாதிபதியாக அறியப்பட்டார். ராகு திசையை அடுத்து வந்த பரம சுபக்கிரகமான குரு திசை ஜாதகரின் அறிவை உலகிற்குப் பறைசாற்றி புகழடையச் செய்தது. குருவின் உப நட்சத்திராதிபதியும் லக்னாதிபதியான உச்ச புதனே என்பதும் இங்கு முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.  

கால சர்ப்ப யோகத்தின் விளைவுகளை எடைபோட இன்றும் ஜோதிட ஆய்வாளர்கள் ஆராய்ந்துகொண்டிருக்கும் ஜாதகம் இது. 

விரையாதிபதி கிரகமானாலும் சூரியன் ராசிக்கு அதிபதியாக வந்துவிட்டதால் தனது காரகப்படி ஜாதகரை தலைமைப்பதவிக்கு உயர்த்தவேண்டும் எனும் விதிப்படி சூரியனும் ஜாதகர் தனது வாழ்வின் மிக உயர்ந்த பதவியை எட்ட உதவினார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 



ஜாதகர் நம் மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா, இந்தியாவின் தலைசிறந்த தத்துவஞானி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆவார். ஆசிரியர் தொழிலுக்குச் சிறப்பு செய்ததால் அவரது பிறந்த நாளை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம் என்பதும் நாமனைவரும் அறிந்ததே. 

கீழே மற்றொரு ஆணின் ஜாதகம். 



ஒருவர் விளையாட்டுத் துறையில் ஜொலிக்க வேண்டும் எனில் மூன்றாவது பாவம், அதன் அதிபதி, விரைவாக சிந்தித்து செயல்பட சந்திரனின் பலமும், சாதுரியமான செயல்பாட்டிற்கு புதனின் பலமும் அவசியம்.  

ஜாதகத்தில் சந்திரனும் புதனும் உச்சம். லக்னம் உச்ச புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. அதன் உப நட்சத்திராதிபதியும் புதனே என்பது மிகச் சிறப்பு. லக்னாதிபதி செவ்வாய் புத்திகாரகன் புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் அமைந்தது ஒருவகையில் சிறப்பென்றாலும் இரண்டும் பகைக் கிரகங்கள் என்பது மறுவகையில் குறையே. ஜாதகத்தில் மூன்றாமதிபதி சனி நீசமடைந்து வக்ரமானதால் நீச பலம் குறைகிறது. முக்கியமாக சனியின் உப நட்சத்திராதிபதி உச்ச சந்திரன் என்பதால் சனி முழுமையாக நீசபங்கமடைந்து ராஜயோகத்தை தரவேண்டியவராகிறார். ஒரு விளைடாட்டு வீரனுக்குரிய அமைப்புகள் அனைத்தும் ஜாதகத்தில் உள்ளன.

ஜாதகர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி பல சாதனைகளைப் புரிந்தவர். முக்கியமாக ஒரே இன்னிங்க்ஸில் 1௦ விக்கெட்டையும் வீழ்த்தி பிரம்மிக்கத்தக்க உலக சாதனை படைத்தவர்.

ஏழாமிடத்தில் உச்சமான சந்திரனின் உப நட்சத்திராதிபதி ராகு என்பதாலும் 7 ஆமிடாதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரனின் உப நட்சத்திராதிபதியும் ராகு என்பதாலும் ஜாதகர் குழந்தையுடன் விவாகரத்தான பெண்ணை மறுமணம் செய்து வாழ்வளித்தார். சந்திரன் 7 ஆமிடத்தில் உச்சமானாலும் அவர் களங்கத்தைக் குறிக்கும் தேய்பிறைச் சந்திரன் என்பது இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.  

ராகுவின் காரகத்துவங்களுள் களங்கம் மற்றும் விவாகரத்து போன்றவற்றை முக்கியமானவையாகும். (ஜோதிடர்கள் மறுமணங்கள் சாதாரணமாக நடக்கும் இன்றைய கால கட்டத்தில் இத்தகைய அமைப்புகளை பொருத்தம் பார்க்கும்போது ஆராய்வது அவசியம்). சுகஸ்தானமான நான்கமிடத்தில் ராகு நின்று குடும்ப காரகன் குரு விரையத்தில் அமைந்து சனியால் பார்க்கப்படுவது போன்றவை ஜாதகரின் திருமண நிகழ்வை படம் பிடித்துக் காட்டுகின்றன.

லக்னாதிபதி செவ்வாய் தலைமைப் பண்புகளுக்குரிய சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமைந்து உச்ச புதனுடன் இணைந்ததால் அணியை வழிநடத்தும் தலைமைப் பதவிக்கும் உயர்ந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.




ஜாதகர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அணில் கும்ப்ளே. 

மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி: 7871244501