Sunday 4 June 2017

கிரகங்களின் உச்சநிலை வக்கிரம் & நீசநிலை வக்கிரம் – செயல்பாடு எப்படி?

கிரகங்களில் சூரிய - சந்திரர்கள் மற்றும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள் ஆகியவை தவிர ஏனைய அனைத்து கிரகங்களுக்கும் வக்கிர மற்றும் அதிசார இயக்கங்கள் உண்டு.

பூமி தனது சஞ்சாச விதிகளின்படி குறிப்பிட்ட கிரகங்களை முந்திச் செல்கையில் குறிப்பிட்ட அக்கிரகங்களுக்கும் பூமிக்குமிடையேயான ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாறுதலான தோற்ற நிலையே வக்கிரம் எனப்படும்.

இத்தகைய நிலையில் கிரகங்கள்  தாங்கள் நிலைகொண்டுள்ள பாகைக்கு முன்னதாக இருப்பதுபோன்ற நிலைக்கு அதிசாரம் என்றும் பின்னதாக இருப்பது போன்ற நிலைக்கு வக்கிரம் என்றும் பெயர்.
    
வக்கிர அதிசார நிலையை அடையும் கிரகம் பொதுவாக அதன் சுபாவ தன்மைகளை இழந்ததாக கருதப்பட வேண்டும். எனவே ஜனன ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் வக்ரமடைந்திருக்கக்கூடாது. அப்படி ஜனன ஜாதகத்தில் வக்கிரமடைந்த சுப கிரகங்கள் கோட்சாரத்தில் வக்ரமடைந்தால் கெடு பலன்களை அதிகம் தரும்.

பாவ கிரகங்கள் இதற்கு எதிர்மறை. ஜனன ஜாதகத்தில் வக்கிரமடைந்த பாவ கிரகம் கோட்சாரத்தில் வக்ரமடைந்தால் நல்ல பலன்களையே தர முற்படும்.

கீழே உதாரண ஜாதகம்


உச்சனுடன் கூடும் நீசன் நீச பங்கமடைய வேண்டும் என்பது ஜோதிட விதி. 6 ஆமதிபதி சனி  உச்சமடைந்த 12 ஆமதிபதி சூரியனுடன் 8 ஆமிடத்தில் கூடியது ஒருவகையில் விபரீத ராஜ யோகமே. 6 ஆமதிபதி சனி அஸ்தங்கமடைந்ததும் பெரிய பாதகமில்லை. உண்மையில் ஜீவனகாரகன் இப்படி சூரியனுடனும் வித்யகாரகனான லக்னாதிபதி புதனுடன் கூடியதால் ஜாதகருக்கு அரசுப்பள்ளி ஆசிரியராக பணி வாய்த்தது.  

ஆனால் தன காரகன் குரு வக்ர நிலையில் லக்னத்தில் அமைந்துள்ளார். பாதகாதிபதி லக்னத்தில் அமைவது பாதகாதிபதியின் காரகங்கள் சார்ந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது ஜோதிட விதி. தன ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்ச நிலையை அடைந்து வக்ரமாகிவிட்டது. உச்சமடைந்து வக்கிரமான கிரகம் நீச பலனையே தரவேண்டும். எனவே இந்த ஜாதகருக்கு பொருளாதாரம் சார்ந்த வகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதை அறிய முடிகிறது.

ஜாதகர் சனி திசையில் ஏறக்குறைய 22 லட்சத்திற்கும் அதிகமான அளவில் கடும் பொருளாதார இழப்பை சந்தித்தார்.

கீழ மற்றொரு பெண்மணியின் ஜாதகம்


ஜாதகிக்கு புத்திர பாக்யத்தை தரவேண்டிய குரு ஆறில் மறைவு.

நீசமடைந்து வக்கிரமடைந்த கிரகம் உச்சபலனை தரும் என்ற விதிப்படி குரு 6 ஆமிடத்தில் வலு குறையவில்லை. மேலும் குரு அமைந்த பாவாதிபதி சனி உச்சமடைந்துவிட்டதால் குருவும் உச்சமாக உள்ளதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.  இந்த ஜாதகத்தில் குரு 6 ல் மறைந்த தோஷம் ஜாதகிக்கு புத்திர பாக்கியம் அமைய தடைகளை மட்டுமே ஏற்படுத்தவேண்டும்.

பொதுவாக உச்சமடைந்த கிரகங்கள் சந்தோஷமான மனநிலையில் இருக்கும். எனவே குரு சனி வீட்டில் 6 ல் அமைந்து வலுவடைந்ததால்  சனியின் இயல்புப்படி தாமதமாக புத்திர பாக்கியம் அமையும்.

ஜாதகியின் ராசிக்கு 1௦ ஆமிடத்தில் குருவும் ராசியிலேயே சனியும் உச்சமடைந்த காலத்தில் ஜாதகியின் 29 ஆவது வயதில் பெண் குழந்தை பிறந்தது.  

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501.

No comments:

Post a Comment