Sunday 30 July 2017

நித்ராதேவி!

தூக்கமும் கண்களை தழுவட்டுமே!
அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே

என்று தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாடினர் கவிஞர்கள். தூக்கத்தைப் பற்றி ஜோதிட ரீதியாக ஆராய்ந்தவர்கள் குறைவே.

ஆனால் தூக்கம் மனித வாழ்வில் ஒரு முக்கிய அங்கம். சராசரியாக ஒருவர் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் என அறிவியல் கூறுகிறது. உறக்கம் சரியாக இருக்கும்போது உடல் தனக்கேற்படும் உடல் மற்றும் மன ரீதியான  குறைகளை தானே நிவர்த்தி செய்துகொள்ள முனைகிறது. சரியான உறக்கம் உடலையும் மனதையும் சீரான இயக்கத்தில் ஆரோக்கியமாக வைக்கிறது.

இன்றைய அவசர உலகம் உறக்கம் மற்றும் உண்ணும் நேரத்தையும் குறைத்துவிட்டது. உழைக்கும் நேரம் இன்று அதிகம் உறங்கும் நேரம் குறைவு. பசியெடுத்து சத்தாக நிதானமாக உணவுண்ட காலம் போய் ருசிக்காக அவசர கதியில் உணவை வாயில் திணித்துக்கொள்ளும் காலமாக இன்றைய காலச் சூழல் மனிதனை மாற்றிவிட்டது.  இதுவே இன்று மருத்துவமனைகள் ஜனத்திரளால் நிரம்பி வழிய முக்கிய காரணம்.

மருத்துவ மனைக்கு சென்றால் மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வி “நன்கு சாப்பிட முடிகிறதா? தூங்கமுடிகிறதா? என்பதுதான். இவ்விரண்டும் கெட்டுவிட்டால் உடலியக்கம் கெட்டுவிடுகிறது.



ஜோதிடத்தில் 12 ஆம் பாவம் உறக்கத்தைப்பற்றி தெரிவிக்கும். 12 ஆம் பாவாதிபதி,  அதில்; அமர்ந்த மற்றும் பார்த்த  பாவத்தின் அடிப்படையில் ஒருவரது உறக்க நிலையை பற்றி சொல்லலாம். போக பாக்கியத்தை தெரிவிக்கும் இடம் என்பதால் இவ்விடத்தை ஆராய்ந்தால் ஒருவரது பள்ளியறையில் தாம்பத்யம் நடக்குமா அல்லது சண்டை நடக்குமா என்பதையும் கூறிவிடலாம். 12 ஆம் பாவத்தில் நல்ல பாவாதிபத்யம் பெற்ற வளர்பிறை சந்திரன் அமர்ந்து ஒருவர் படுத்தால் உடனே உறங்கிவிடுவார்.


இதற்கு மாறான பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜாதகர் ஓரளவு வசதியானவர். நல்ல அமைப்பான மாடி வீட்டில்தான் வசிக்கிறார். ஆனாலும் உறக்கத்தை குறிக்கும் 12 ஆம் பாவத்தை நீச கிரகமான சந்திரன் பார்ப்பதால் மெத்தையை தவிர்த்து தரையில் படுத்தால்தான் நன்றாக உறங்க முடிகிறது என்கிறார்.

ஜோதிடத்தில் புதுமையான அனைத்து விஷயங்களுக்கும் ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் என்றால் அது ராகுவும் கேதுவும்தான்.  இந்த கிரகங்கள் 12 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்ளும்போது ஒருவரது உறக்கம் பாதிக்கிறது. அதை மீறி சில விஷயங்களும் நடக்கிறது என்பதையும் அவை என்ன என்பதையும் பின்வரும் ஜாதகம் கொண்டு ஆராய்வோம்.

ஜாதகிக்கு 12 ஆமிடத்தில் வளர்பிறை சந்திரன் உள்ளது அதுவும் வர்கோத்தமத்தில் உள்ளது. அதன் பாவாதிபதி செவ்வாய் வக்கிரமடைந்து ராகுவுடன் இணைந்துவிட்டாலும் செவ்வாய் உச்சன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்ததாலும் நவாம்சத்திலும் சிம்மத்தையே அடைந்து  வர்கோத்தமம் பெற்றுவிட்டதாலும் வலுவாகவே உள்ளது. குருவின் மீனத்தில் ஒரு உச்சன் அமர்ந்ததாலும் குருவும் உச்சன் சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் அமர்ந்து வலுவடைந்து 12 ஆமிடத்தை தனது 9 ஆம் பார்வையால் புனிதப்படுத்துகிறார். இதனால் ஜாதகிக்கு ராகே-கேதுக்களின் தொடர்பையும் மீறி நல்ல உறக்கம் கிடைக்கிறது.

சந்திரன் கேதுவில் அஸ்வினி – 1 ல் உள்ளது. கேது பனிரெண்டாம்  பாவத்தையும் அதில் உள்ள சந்திரனையும் அந்த பாவாதிபதி வக்கிர செவ்வாயையும் தனது பார்வையால் கட்டுப்படுத்துகிறார். நூதன மற்றும் தீவிர விஷயங்களுக்குரிய ராகு-கேதுக்கள் மேற்படி 12 ஆம் பாவத்துடன் தொடர்புகொண்டுள்ளனர்.

இத்தகைய கிரக அமைப்பின் காரணமாக ஜாதகிக்கு நெருங்கிய தொடர்புடைய நபர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கனவிலும் சில சமயம் உடனேயும் யூகித்தறியும் ஆற்றல் ஏற்பட்டு அதனால் சிரமங்களையும் வேதனைகளையும் எதிர்கொண்டு வருவதாக கூறுகிறார். பெரும்பாலான சம்பவங்கள் விபத்து மரணம் போன்றவைகளே.

ஜாதகிக்கு இது போன்ற சம்பவங்களை  கனவில் காணும்போது உடல் முறுக்கி வலியில் தவிப்பதாக கூறுகிறார்.

ஜாதகியின் ஜனன நாளை கவனித்தால் இவரது உடல் எண் சந்திரனை குறிக்கும் 2 ஆகவும் உயிர் எண் ராகுவை குறிக்கும் 4 ஆகவும் உள்ளது மனதை குறிக்கும் சந்திரனுடன் ராகு இணைந்து ஆதிக்கம் செலுத்துவது எண்ணியல் ரீதியாக ஆய்வுக்கு உரியது.

ஜாதகிக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் கீழே.

2008 ஜூன்-ஜூலை – ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் அமைந்த  சூரிய திசையின் குரு புக்தியில் உறவுப்பாட்டியின் வீட்டில் உணவுண்டபின் பாட்டியின் மருமகள் அவரை சரியாக கவனித்துக்கொள்ளாததன் விளைவாக மருமகளின் காலில் விபத்தால் அடிபடும் என்று கணித்து ஆறரை மாதம் கழித்து நடந்தது. திடீரென மனதில் ஏற்பட்ட உள்ளுணர்வால் இதை கூறியதாக ஜாதகி கூறுகிறார்.

தனது சித்தப்பாவுக்கு காரில் விபத்து நேரும் என்று 2008 துவக்கத்தில் எச்சரித்துள்ளார். 2009 மே மாதம்  நடந்த கார் விபத்தில் சித்தப்பா குடும்பத்துடன் காரின் சென்ற அவரது சகலை விபத்து ஏற்பட்டு ஸ்தலத்திலேயே மரணமடைந்தார்.

2009 ஜனவரியில் ஒருநாள் இரவு 9.35 அளவில் ஒரு பிணம் எரிவதாக கனவு கண்டுள்ளார். அதே 9.35 மணி அளவில் தனது தாய் மாமா இரயில் விபத்தில் மரணமடைந்ததாக சற்று நேரத்தில் தகவல் வந்ததாக கூறுகிறார்.

02.03.2010 தந்தை வழி உறவில் தாத்தா இறந்து 12  வது நாளில் பாட்டியும் மரணமடைவார் என்று காதருகில் ஒரு குரல் கூறியதாக கூறினார். சரியாக அதே 12 வது நாளான 07.03.2010 அன்று பாட்டியும் மரணமடைந்தார்.

2010 ஜூன் மாதத்தில் கருவுற்றிருந்த தனது குழந்தையை பிரகாசமாக மிகுந்த ஒளியுடன் கனவில் கண்டதாக கூறினார்.

இதனை அடுத்து சில நாட்களில் இறந்த தனது மாமியார் தன்னுடன் கனவில்  வந்து பேசியதாகவும் அவரது உடல் சூட்டை கையில் பிடித்து தான் உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

2016 ஜனவரியில் கனவில் தானும் மற்றொரு பெண்ணும் மாடியில் நின்றுகொண்டிருந்தபோது  தெரிந்த கர்பிணி பெண் மாடிக்கு வரமுற்பட்டுள்ளார். அவரை வரவேண்டாம் என உரத்த குரலில் கூறியதாகவும் அதை மீறி வந்ததால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார். கனவில் கண்ட கருச்சிதைவு உண்மையில் அந்த அறிந்த பெண்ணுக்கு மார்ச் மாதம் நடந்ததாகவும் ஆனால் கரு வளர்ச்சி ஜனவரியில் தான் கனவு கண்ட காலத்திலேயே நின்றுவிட்டதாகவும் மருத்துவர் கூறியதாக கூறுகிறார்.

அடியேனது ஆய்வு இந்த ஜாதகத்தில் இன்னும் தொடர்கிறது

மீண்டும் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501.

1 comment:

  1. அய்யா வணக்கம் 05 /08 /2017

    " நித்ரா தேவி " ஜோதிட பதிவில் தூக்கத்தின் முக்கியத்துவம் , தூக்கமின்மையால் ஆரோக்கியம் பாதிக்கப்படுதல் என்பது முற்றிலும் உண்மையே .

    பிறவி எண் = 2 ( சந்திரன் ) விதி எண் = 4 ( ராகு ) மனோகாரகன் சந்திரனுடன் ராகு தொடர்பு இருப்பதாலும் ஜாதக ரீதியில் கேது தொடர்பு இருப்பதாலும் அடுத்து நடக்கவிருக்கும் நிகழவுகளை முன்னரே அறிந்து கொள்ளும் அமானுஷ்யம் இருப்பதாக எண்ணுகிறேன் .

    12 ம் இடத்துடன் ராகு , கேது தொடர்பு, நீச சந்திரன் பார்வை , வளர்பிறை சந்திரன் இருக்க ஏற்படும் உண்மைகளை அறிந்து கொண்டேன் .

    ஜாதகியின் பல உண்மை அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .

    உங்கள் ஆய்வு தொடர வாழ்த்துக்கள் .

    என்றும் அன்புடன்
    சோமசுந்தரம் பழனியப்பன்
    மஸ்கட்

    NOTE : நல்ல உறக்கம் நமக்கு கிடைக்க
    ‘ஓம் ஸுத்தே ஸுத்தே மஹா யோகினி மஹா நித்ரே ஸ்வாஹா’.

    ReplyDelete