நமது முன்னோர்கள் நமக்களித்த அறிய பொக்கிஷமான ஜோதிடக்கலையை எப்படி பயன்படுத்துவது
என்பதை தற்கால ஜோதிடர்கள் கூட ஓரளவே அறிவார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.
ஜோதிடர்களே இப்படி என்றால் மக்களின் நிலை இன்னும் பரிதாபம்தான். ஜோதிடம் எனும் அரிய
கலையின் வெற்றி என்பது அதை மிகச்சரியாகக் கையாண்டு நமது வாழ்வை செம்மைப்படுத்திக்
கொள்வதில்தான் உள்ளது. அதற்காகத்தான் நமது முன்னோர்கள் இக்கலையை நமக்கு அருளியுள்ளார்கள்.
அதிலும் குழந்தைக்கு ஜனன நேரம் குறித்தலில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்கின்றன.
நமது சனாதன வேத தர்மம் (இந்து என்பது மதத்தின் பெயரல்ல நம்மை
குறிப்பிட இதர வகையினர் அழைத்த பெயரே ஆகும்) கிருத யுகத்தில் நிச்சயதார்த்த
லக்னமே ஜனன லக்னம் என்றும் திரேதா யுகத்தில் திருமண லக்னமே ஜனன லக்னம் என்றும் துவாபர
யுகத்தில் தாயின் யோனியில் இருந்து குழந்தை
வெளிப்படும் நேரமே ஜனன லக்னம் எனவும் கலியுகத்தில் குழந்தை ஜனனமாகி
பூமியில் முழுமையாக விழும் நேரமே ஜனன லக்னம் எனவும் கூறுகிறது (பல்வேறு புராண இதிகாசங்கள்,
உபநிஷத்துக்கள், ஜோதிட நூல்களில் இதில் சில வேறுபாடுகளும் காணக் கிடைக்கின்றன).
ஆனால் தற்போதைய
காலகட்டத்தில் பெரும்பாலான ஜோதிட அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை என்பது சுகப்பிரசவமானால்
குழந்தையின் கண்கள் வெளியே தெரியும் நேரமாகும். இதுவே சிஷேரியனானால் கத்தி
மூலம் வயிற்றைக் கிழித்த பிறகு தெரியும் குழந்தையின் முதல் தரிசன (பார்வை) நேரமே (First sight of child) ஆகும்.
பிற்சேர்க்கை:
இரண்டு கடிகாரங்கள் எப்படி ஒரே நேரத்தைக் காட்டதோ அதேபோல் இரு
ஜோதிடர்கள் ஒரே மாதிரியான பலன்களை கூறமாட்டார்கள் என வேடிக்கையாகக்
கூறப்படுவதுண்டு.
கடிகார நேர வேறுபாட்டைத் தவிர்க்க டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பிரசவ அறைக்
கடிகாரத்தை பிரசவ அறைக்கு தாயை அழைத்துச் செல்லுமுன்
ஒரே நேரம் காட்டுவதை உறுதி செய்து கொள்வது உதவும்.
(இது சொந்த அனுபவம். அதற்க்கு எங்கள் டாக்டர் டென்ஷன்
ஆனது தனிக்கதை)
வாழ்வின் பொக்கிஷமான தருணங்களில் ஒன்று மருத்துவரிடமிருந்து நமது மழலையை ஈரமான பச்சை வாசனையுடன் வாங்கும் நேரமும் ஆகும். ஒரு தந்தை எனும் முறையில் ஒரு ஆண்மகன் தவறவிடாது அனுபவித்து உணரவேண்டிய தருணம் அது. எனவே ஒருபோதும் அத்தருணத்தை தவறவிடாதீர்கள்.
வாழ்துக்களுடன்,
ஜோதிடர்.