Sunday 8 December 2013

ஜாதகத்தில் கிரகங்களின் சூட்சும வலுவை அளவிடுவது எப்படி?


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.




மிருகசீரிஷம் – 4 ல் லக்னம்
ஆயில்யம் – 2 ல் சூரியன்
மகம் - 2 ல் சந்திரன்
பூராடம் - 2 ல் செவ்வாய் (வக்ரம்)
புனர்பூசம் – 4 ல் புதன்
பூரட்டதி - 3 ல் குரு (வக்ரம்)
உத்திரம் -  3 ல் சுக்கிரன்
அனுஷம் – 2 ல் சனி
அஸ்வினி – 1 ல் ராகு
சித்திரை – 3 ல் கேது
புனர்பூஷம் – 1 ல் மாந்தி

கேது திசை இருப்பு 5 வருடம் 1 மாதம் 12 நாட்கள்.

Ø  மேற்கண்ட ஜாதகத்தில் 2 ல் சூரியன் நின்று இரண்டாம் பாவத்தை கெடுத்தார்.

Ø  7 ஆம் பாவத்தில் மிதுன லக்னத்திற்கு சத்துருவான செவ்வாய் நின்று 7 ஆம் பாவத்தைக் கெடுத்தார்.

Ø  5 ஆமிடத்தில் கேது நின்று 5, 12 க்குரிய சுக்கிரன் நீசம் பெற்று 5,12 ஆம் பாவங்களும் கெட்டுவிட்டன.

Ø  குடும்ப, புத்திர காரகன் குருவும் தனது சம வீட்டில் வக்கிர கதியில் வலுவில்லாமல் அமைந்துவிட்டார்.

மேற்குறிப்பிட்ட விதத்தில் இந்த ஜாதகத்தை ஆராய்ந்தால்,

இந்த ஜாதகிக்கு திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் அமைவது சிரமமே எனத்தோன்றும்.

பல்வேறு ஜோதிடர்களால் திருமண விஷயத்தில் இப்படி ஒதுக்கித் தள்ளப்பட்ட ஜாதகம் இது.
என்னிடம் 2011 துவக்கத்தில் இந்த ஜாதகம் வந்த போது 7 1/2 விலகும் 2011 இறுதியை ஒட்டி ஜாதகிக்கு திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியமும் தவறாமல் கிடைக்கும் என்றேன்.

2011 செப்டம்பரில் ஜாதகிக்கு திருமணம் நடந்து 2013 மத்தியில் குழந்தையைப் பெற்றார்.

நான் இந்த ஜாதகத்தை ஆராய்ந்த விதம் பின்வருமாறு.

எவ்வளவு கடுமையான தோஷங்களைக் கொண்டிருக்கும் ஜாதகங்களிலும் அந்த தோஷங்களின் தீவிர காலம் ஒரு கட்டத்தில் நிறைவைப் பெறும்.
சில சாபக்கேடான ஜாதகங்கள் இவற்றிற்கு விதி விளக்காக அமையும்.  

குறிப்பிட்ட தோஷங்களின் தீவிரம் எப்போது தணியும் என்பதை திசா-புக்தி, கோட்சாரத்தில் சனி மற்றும் குருவின் நிலையைக் கொண்டு துல்லியமாக அறிய இயலும். அதற்கான மிகச்சிறந்த குறிப்புகள் பண்டைய நமது ஜோதிட நூல்களில் உள்ளன. தேவை பொறுமையும் நிதானமுமே.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் தனது நண்பனான சூரியனுடன் 2 ஆம் பாவத்தில் இணைந்து அஸ்தங்கமடையாமல் வர்கோத்தமும் பெற்று 7 ஆம் அதிபதியான குரு சாரத்தில் நின்று நல்ல நிலையில் உள்ளார்.

2 ஆம் பாவத்தில் லக்னாதிபதி சாரத்தில் (ஆயில்யம் – 2 ல்) நின்ற சூரியன் அந்த பாவ அதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்று சிறப்பான யோகத்தை தர வேண்டியவராகிறார்.

2 ஆம் பாபத்தை லக்னாதிபதி வலுப்படுத்துவதோடு பரிவர்த்தனையான சூரிய- சந்திரர்களால் 2 மற்றும் 3 ஆம் பாவங்களும் வலுவடைந்தன.

2 ஆமதிபதி சந்திரன் அம்சத்தில் உச்சமடைந்து அதீத வலுவுடனே உள்ளார். இது ஜாதகியின் வெளிநாட்டு வாசத்தைக் குறிப்பிடுகிறது.

சூரியனும் சூரியனது பாவமான சிம்ம ராசியும் வலுவடைந்ததால் சூரியனின் நட்சத்திரத்தில் (உத்திரம் - 3 ) நின்ற சுக்கிரனும் வலுவடைந்து நீச பங்கம் பெற்றார்.

மேலும் சுக்கிரனது உப நட்சத்திராதிபதி புதனாக அமைந்தது கூடுதல் சிறப்பு.

ஒரு கிரகமும் அதன் பாவமும் வலுவடையும்போது அந்த கிரகத்தின் சாரத்தில் நிற்கும் கிரகங்களும் வலுவடையும் என்பது ஒரு முக்கிய ஜோதிட விதி.

பகை வீட்டில் வக்கிரமடையும் கிரகங்கள் நல்ல பலனைத் தரவேண்டும் என்ற அடிப்படையில் சனி 6 ஆவது பாவத்தில் தனது சுய சாரத்தில் (அனுஷம் – 2) ல் நன்றாக அமைந்துள்ளார். மேலும் 6 ஆமதிபதி 8 ல் அமைவது விபரீத ராஜ யோகங்களில் ஒரு வகை என்பதோடு சனி போன்ற சுபாவ பாவிகளுக்கு 6 ஆமிடம் மிகச் சிறப்பானது.

இதன் பொருட்டு சனி தனது சுய பாவங்களையும் அவற்றில் அமைந்த கிரகங்களையும் வலுப்படுத்த வேண்டும்.

எனவே சனி வீட்டில் வக்கிர கதியில் இருந்தாலும் குரு வலுவாக உள்ளதாகவே கொள்ளவேண்டும். மேலும் தனது சுய சாரத்தில் (பூரட்டதி – 3) ல் குரு அமைந்துள்ளது கூடுதல் சிறப்பே. மேலும் குரு 1,5,9 ஆம் பாவங்களில் அமைவது மிகச் சிறப்பானது  ஆகும்.

7 ல் நின்ற செவ்வயாலும் 2 ல் நின்ற சூரியனும் கன்னியில் அமைந்த சுக்கிரனும் திருமணத்தை தாமதப்படுத்தினார்களே தவிர சிறப்பானதொரு வெளிநாட்டு வரனுக்கு ஜாதகியை மனம் முடிக்க வைத்தனர்.

முந்தைய சச்சின் பற்றிய பதிவில் குறிப்பிட்டதுபோல் 5 ஆம் இடத்தில் நிற்கும் ராகு-கேதுக்கள் அவை நிற்கும் பாவதிபதியை சார்ந்தே பலனளிக்கும் என்பதால் இங்கு நீச பங்கமடைந்த சுக்கிரனின் வீடான ஐந்தாம் பாவத்தில் நின்று குருவால் பார்க்கப்படும் கேது புத்திர பாக்கியத்தை தடை செய்யவில்லை.



இப்படி கிரகங்களையும் அவற்றின் பாவங்களின் வலுவையும் அவை நிற்கும்  சாரத்தின் அடிப்படையில் உள்ளார்ந்து ஆராய்ந்து கணக்கிடுவதையே ஜோதிடத்தில் சூட்சும வலு என்கிறோம்.

மற்றும் ஒரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.