Sunday, 16 July 2017

வரலாற்றுப்போர்கள்!

போர் கிரகம் செவ்வாய் கடகத்தில் நீசமாகியுள்ள தற்போதைய நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர்வருமா என “பெட்டிங்” நடந்துகொண்டிருக்கும் வேளையில் கடந்த கால போர் நிலைகளை ஜோதிட ரீதியாக ஆராய்ந்து எழுத வாசகர் ஒருவர் தூண்டியதன் விழைவே இப்பதிவு.  

ஒற்றுமையில்லாத இந்தியர்களை அந்நிய மண்ணிலிருந்து வந்த மொகலாயர்கள் வென்று ஆட்சி செய்தனர் என்றாலும் அவர்களால் இந்திய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள இயலவில்லை என்பதுதான் நிதர்சனம். குறிப்பாக பாபரின் காபூல்படை வீரர்களை டெல்லி வெயில் இந்தியாவிலிருந்து விரட்ட முனைந்தது என்பதுதான் வரலாறு.

ஒருவரின் பிறந்த நேரம் அவரது இயல்பை காட்டிவிடும் என்றாலும் ஒருவரது இயல்பு (சுபாவம்) நடத்தையில் வெளிப்பட்டுவிடும். இளம் வயதிலேயே கடும் போராட்டங்களை சந்தித்தவர்களையும் கடும் போர்களில் ஈடுபட்டவர்களையும் முழுமையான செவ்வாயின் அம்சமாக ஜோதிடத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் ஜாதகம் இல்லாதவர்களுக்குக்கூட அவர்களின் அம்சங்களுக்குரிய காரக கிரகங்களின் நிலையைக்கொண்டு அவர்கள் கோட்சாரத்தில் எதிர்கொள்ளும் நிலைகளை ஆராயலாம்.  உதாரணமாக ஜோதிடன் எனில் புதன், பிராமணன் எனில் குரு, செவ்வாய் எனில் போர்வீரன் இப்படி.


                                  பாபர். நன்றி விக்கிபீடியா

இந்தவகையில் போரில் ஈடுபடும் இரு அரசர்களும் செவ்வாயின் அம்சங்களாக கருதப்பட்டாலும் அவ்விருவரில் யாரிடம் செவ்வாயின் காரக குணம் தூக்கலாக தெரிகிறதோ அவர்களே இருவரில் செவ்வாயின் முழுமையான அம்சம் எனலாம். மிகச்சிறந்த போர் வீரர்கள் செவ்வாயின் முழுமையான அம்சமே.


பாபரின் ஜாதகம் நம்மிடம் கிடையாது. ஆனால் பிறந்த தேதி தெரியும். இன்றைய உஜ்பெகிஸ்தானிலுள்ள அன்டிஜனில் 14.02.1483ல் பிறந்தார். லக்னம் தெரியாவிட்டால்  ராசி, ராசியாதிபதி மற்றும் சூரியனின் நிலையைக்கொண்டே ஜாதகத்தை ஆய்வு செய்ய வேண்டும். எதிரியின் ஜாதகம் இல்லாதபோது ஆறாவது பாவத்தைக்கொண்டு எதிரியின் நிலையை ஜோதிட ரீதியாக அளவிடவேண்டும்.



பாபர் பிறந்தநாள் முழுதும் சந்திரன் மகரத்தில்தான் உள்ளது. எனவே எந்த நேரத்தில் பிறந்திருந்தாலும் ராசி மகரம்தான்.  

மகர ராசி ஜாதகத்தில் ராசியாதிபதி சனி ராஜ்ய ஸ்தானமான 10 ஆமிடத்தில் உச்சம். உச்சம் பெற்ற ஒரு கிரகம் தான் நின்ற பாவத்தையும் அதன் அதிபதியையும், தனது சுய பாவங்களையும் அதில் அமர்ந்த கிரகங்களையும், தான் அமர்ந்த நட்சத்திராதிபதி மற்றும் அதன் பாவங்களையும் வலுவடையச் செய்யும்.

இவ்விதிப்படி சூரிய சந்திரர்கள் வலுவடைந்ததால் பாபர் ஒரு ராஜ வம்சத்தை சார்ந்தவர் என்பது ஜாதகப்படி தெளிவாகின்றது. ராசியதிபதி சனியும் சுக்கிரனும் சஷ்டாஷ்டகத்தில் அமைந்து சுகிரனுக்கு பாவகர்த்தாரி யோகமும் ஏற்பட்டுவிட்டது. எனவே இல்லறத்தில் பெரிய நாட்டமில்லை. பாபருக்கு ஏழு மனைவிகள், முதலாமவள் இவரின் ஈடுபாடின்மை காரணமாக ஓடிவிட்டாள். தனது சுயசைதையான பாபர் நாமாவில் இது விஷயத்தில் தனக்கிருந்த கூச்ச சுபாவத்தை குறிபிட்டுள்ளார். தைரிய ஸ்தானமான 3 ஆம் பாவத்தில் ஒரு உச்ச கிரகம் சுக்கிரன் நிற்பது ஜாதகரின் சிறப்பான வீரத்தை குறிப்பிடுகிறது. சதுர்த்த கேந்திரத்தில் போர் கிரகமான செவ்வாய் ராகுவுடன் கூடி நின்று சனி பார்வை பெறுவது போரில் ஈடுபடும் ஜாதகரின் கர்ம வினையை குறிப்பிடுகிறது. 

இனி பாபருக்கும் இப்ராகிம் லோடிக்கும் நடந்த முதல் பானிபட் போர் தினமான   21.04.1526 க்கு வருவோம்.  


பாபரின் மகர ராசியிலிருந்து எதிரியை குறிப்பிடும் 6 ஆம் பாவாதிபதி புதன் மீனத்தில் நீச்சம். எதிரி கிரகம் நீசமாகிறது எனில் போரில் எதிரி உயிரிழக்கிறான் என்று அர்த்தம். வீரம் வெற்றியை குறிக்கும் மூன்றாமிட அதிபதி குரு அதிஷ்ட ஸ்தானமான ஐந்தாமிடத்தில் அதன் அதிபதி சுக்கிரனுடன் இணைந்துள்ளார். இது வீரமும் அதிஷ்டமும் இணைந்து செயல்படும் என்பதை குறிக்கிறது. ராசியாதிபதி சனி வெற்றி ஸ்தானமான மூன்றாமிடத்தில் நின்று அங்கு நீசமான ஆறாமதிபதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது மிகச் சிறப்பு. பாபரின் ஜனன நாளில் தனது வீட்டில் ஆட்சியில்  அமைந்திருந்த போர் கிரகமான செவ்வாய் உச்ச கிரகமான சூரியனுடன் கோட்சாரத்தில் சேர்ந்து நான்காவது கேந்திரத்தில் நின்று அதீத வலு பெற்றுள்ளது. எட்டாமதிபதி சூரியன் வலுவடைந்தால் ஜாதகரின் ஆயுளுக்கு தோஷமில்லை மேலும் திடீர் மற்றும் எதிர்பாராத வெற்றியை உச்சமடைந்த எட்டாமதிபதி கொடுப்பார் என்பது ஜோதிட விதி.  

இப்போது பாபரின் பிறந்த நாள் கூட தெரியாது என எடுத்துக்கொள்வோம். மிகச்சிறந்த வீரன் என்பதால் செவ்வாயின் முழுமையான அம்சமான பாபரை எடுத்துக்கொள்ளலாம். தற்போது பாபரின் கோட்சார ஜாதக லக்னமாக செவ்வாய் இருக்கும் இடத்தையே எடுத்துக்கொண்டு போர் நடக்கும் நாளின் சூழ்நிலைகளையும் வெற்றி தோல்விகளையும் ஆராயவேண்டும்.

இவ்விதிப்படி ஆராய்ந்தாலும் செவ்வாய் கோட்சாரத்தில் மேஷத்தில் ஆட்சி பெற்று உச்சநிலையிலுள்ள ராஜ கிரகம் சூரியனுடனும் நட்பு கிரகம் சந்திரனுடனும் இணைந்ததால் செவ்வாய் அதீத வலுவாகவே உள்ளார். செவ்வாய் உள்ள மேஷத்தையே லக்னமாககொண்டு எதிரியை குறிப்பிடும் ஆறாவது பாவத்தை ஆராய்ந்தால் 6 ஆம் பாவாதிபதி மீனத்தில் நீசம். இந்தவகையிலும் எதிரி உயிரிழக்கிறான் பாபர் வெற்றி பெறுகிறார் என்பதே தெளிவாகத்தெரிகிறது.

போர் நாள் ஒரு அமாவாசை என்பதை கவனிக்கவும். அமாவாசையில் போரை முதலில் துவங்கியவருக்கே வெற்றி ஏற்படும் என்பது நமது மகாபாரத புராணத்திலேயே ஜோதிடக்குறிப்பாக உள்ளது.

அதிகாலை ஆறு மணிக்கு துவங்கிய போர் மதியம் சூரியன் உச்சிக்கு வந்தவுடன் 6 மணி நேரத்தில் நிறைவடைந்துவிட்டது. ஒரு லட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான வில் மற்றும் வாலேந்திய படைவீரர்களை கொண்ட இப்ராகிம் லோடியின் படையை வெறும் பணிரெண்டாயிரம் வீரர்களை கொண்ட பாபரின் படை சிதறடித்தது. நவீன தொழில்நுட்ப வரவான துப்பாக்கியை லோடி அறிந்து வைதிருக்கவில்லை. பாபரின் சில நூறு வீரர்கள் துப்பாக்கியை பயன்படுத்தினர் என்பது ஒரு முக்கிய காரணம். அதிகாரப்பூர்வமாக லோடியின் படையில் லோடியையும் சேர்த்து பதினைந்தாயிரம் வீரர்களும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி சுமார் ஐம்பதாயிரம் வீரர்களும் மரணமடைந்ததாக வரலாறு.


மீண்டும் மற்றொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501.

Thursday, 29 June 2017

நீ வருவாயென...


வாழ்க்கைத்துணை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு ஒரு ஆசை இருக்கும். ஆசைக்கும் கொடுப்பினைக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கையும் அதன் போராட்டமும்..


பொதுவாக வாழ்க்கைத்துணையின் திசையை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர் என்பதை தவிர இப்பதிவில் ஜாதக அமைப்பை வைத்து ஒருவரது வாழ்க்கைதுனைவரின் அம்சங்களை கண்டுகொள்ளது பற்றி அலசியிருக்கிறேன். 


மேற்கண்ட ஜாதகத்தில் வாழ்க்கைத்துணைவரை குறிக்கும் ஏழாமிடத்தில் குரு இருக்கிறார். ஏழாமதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் சூரியனுடன் இணைந்திருக்கிறார்.

ஜாதகரின் மனைவி அரசு வங்கியில் பணி புரிகிறார். குடும்ப பாவம் குருவினுடையதாக இருப்பதால் குடும்ப உறவில் இணையும் மனைவி குருவின் காரகங்களுள் ஒன்றான தனம் புழங்கும் துறை சார்ந்தவர் என எடுத்துக்கொள்ளலாம். ஏழாமதிபதி சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்ததால் ஜாதகரின் மனைவி அரசுப்பணியில் இருப்பார் என அனுமானிக்கலாம்.

நவாம்சம் திருமண பந்ததிற்காகவே விசேஷமாக ஆராயப்பட வேண்டும். ராசியில் 7 ஆமிடம் என்றால் நவாம்சத்தில் 9 ஆம் பாவம் கவனிக்கப்படவேண்டும். ஏனெனில் ராசியில் ஒருவருக்கு அளிக்கப்படும் பாக்கியங்களை தெளிவாக கண்டுகொள்ளவே நவாம்சம். நவாம்சம் பாக்கியஸ்தானத்தின் நீட்சி என்றால் அது மிகையல்ல. அந்தவகையில் மேற்கண்ட ஜாதகத்தில் ஒன்பதாமிடத்தில் சூரியன் நிற்பதால் வாழ்க்கைத்துணை சூரியனோடு தொடர்புடையவர். அதாவது அரசுப்பணியில் உள்ளவர் என்பதை அறுதியிட்டு காட்டுகிறது.  

இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜல ராசியான விருச்சிகம் ஏழாமிடமாகி அதன் அதிபதி செவ்வாய் மற்றோர் ஜல ராசியான கடகத்தில் நீச நிலையில் உள்ளார். அதனை நீசமாகி வக்கிரமடைந்த ஜலக்கோளான குரு பார்வை செய்கிறார். எனவே ஜாதகிக்கு வாய்க்கும் கணவர் வெளிநாடு தொடர்புடையவர் என அனுமானிக்கலாம். செவ்வாய் நீசமும் குரு ராசியில் வலுவடைந்து நவாம்சத்தில் பலவீனமடைந்ததும்  ஜாதகிக்கு திருமணத்தில் ஏற்பட்ட தாமதத்தை குறிப்பிடுகின்றன.

நவாம்சத்தில் ஒன்பதாம் பாவத்தில் அமைந்த கேது ஒரு ஜலக்கோள் அத்துடன் ஒன்பதாம் பாவாதிபதி செவ்வாயும் வெளிநாட்டை குறிக்கும் ராகுவோடு தொடர்பில் இருப்பது கவனிக்கத்தக்கது. குடும்ப ஸ்தானமான 2 ஆமிடத்தில் ஜலக்கோள் சந்திரன் நிற்பது ஜாதகியின் குடும்ப வாழ்வு வெனிநாட்டில் என எடுத்துக்கொள்ளலாம்.

ராசியில் 7 (வாழ்க்கைத் துணை) ஆம் அதிபதியும் 12 (தாம்பத்யம் மற்றும் வெளிநாடு)  ஆம் அதிபதியுமான செவ்வாயின் திசையில் ஜாதகி திருமணம் முடிந்து வெளிநாடு சென்றார். ஜல ராசியான கடகத்தில் வெளிநாடு செல்வதை குறிக்கும் ஒன்பதாம் அதிபதி சனியின் பூசம்-3 ல் நிற்கிறார் என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக மற்றொரு பெண்மணியின் ஜாதகம்.


ஜாதகி ஒரு மருத்துவர்.

ஜீவனத்தை குறிக்கும் 1௦ ஆமதிபதி புதன் சூரியன் மற்றும் செவ்வாயுடன் 9ல் கூடியுள்ளது. இம்மூன்றும் மருத்துவத்துடன் தொடர்புடைய கிரகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தன, குடும்ப பாவாதிபதியும் ஜீவன காரகனுமான சனி 7ல் மருத்துவ கிரகமான புதன் வீட்டில் நின்றது ஜாதகியின் ஜீவனம் மருத்துவம் மூலம் ஏற்படும் என்பதோடு குடும்பத்திற்கு வரும் கணவனும் மருத்துவனே என்பதை குறிப்பிடுகிறது.

ராசியில் ஏழாமதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்ந்ததும் கணவரும் மருத்துவர் என்பதை உறுதி செய்கிறது. புதன், சூரியன், செவ்வாய் மூன்றும் மருத்துவத்தோடு தொடர்புடைய கிரகங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜாதகியின் கணவர் புகழ் பெற்ற மருத்துவர்.

நவாம்சத்தில் லக்னத்திலேயே மருத்துவக கிரகங்களுள் ஒன்றான செவ்வாய் நின்று ஒன்பதாம் பாவாதிபதியும் ஒளஷத காரகன் எனப்படும் புதனாகி தன்வந்திரி எனப்படும் பிரதான மருத்துவ கிரகமான சூரியனுடன் இணைந்து 7 ல் நின்றது ஜாதகியின் கணவர் மருத்துவர் என்பதை தெளிவாக்குகிறது.

விரைவில் மற்றொரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501

Sunday, 4 June 2017

கிரகங்களின் உச்சநிலை வக்கிரம் & நீசநிலை வக்கிரம் – செயல்பாடு எப்படி?

கிரகங்களில் சூரிய - சந்திரர்கள் மற்றும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள் ஆகியவை தவிர ஏனைய அனைத்து கிரகங்களுக்கும் வக்கிர மற்றும் அதிசார இயக்கங்கள் உண்டு.

பூமி தனது சஞ்சாச விதிகளின்படி குறிப்பிட்ட கிரகங்களை முந்திச் செல்கையில் குறிப்பிட்ட அக்கிரகங்களுக்கும் பூமிக்குமிடையேயான ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாறுதலான தோற்ற நிலையே வக்கிரம் எனப்படும்.

இத்தகைய நிலையில் கிரகங்கள்  தாங்கள் நிலைகொண்டுள்ள பாகைக்கு முன்னதாக இருப்பதுபோன்ற நிலைக்கு அதிசாரம் என்றும் பின்னதாக இருப்பது போன்ற நிலைக்கு வக்கிரம் என்றும் பெயர்.
    
வக்கிர அதிசார நிலையை அடையும் கிரகம் பொதுவாக அதன் சுபாவ தன்மைகளை இழந்ததாக கருதப்பட வேண்டும். எனவே ஜனன ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் வக்ரமடைந்திருக்கக்கூடாது. அப்படி ஜனன ஜாதகத்தில் வக்கிரமடைந்த சுப கிரகங்கள் கோட்சாரத்தில் வக்ரமடைந்தால் கெடு பலன்களை அதிகம் தரும்.

பாவ கிரகங்கள் இதற்கு எதிர்மறை. ஜனன ஜாதகத்தில் வக்கிரமடைந்த பாவ கிரகம் கோட்சாரத்தில் வக்ரமடைந்தால் நல்ல பலன்களையே தர முற்படும்.

கீழே உதாரண ஜாதகம்


உச்சனுடன் கூடும் நீசன் நீச பங்கமடைய வேண்டும் என்பது ஜோதிட விதி. 6 ஆமதிபதி சனி  உச்சமடைந்த 12 ஆமதிபதி சூரியனுடன் 8 ஆமிடத்தில் கூடியது ஒருவகையில் விபரீத ராஜ யோகமே. 6 ஆமதிபதி சனி அஸ்தங்கமடைந்ததும் பெரிய பாதகமில்லை. உண்மையில் ஜீவனகாரகன் இப்படி சூரியனுடனும் வித்யகாரகனான லக்னாதிபதி புதனுடன் கூடியதால் ஜாதகருக்கு அரசுப்பள்ளி ஆசிரியராக பணி வாய்த்தது.  

ஆனால் தன காரகன் குரு வக்ர நிலையில் லக்னத்தில் அமைந்துள்ளார். பாதகாதிபதி லக்னத்தில் அமைவது பாதகாதிபதியின் காரகங்கள் சார்ந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது ஜோதிட விதி. தன ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்ச நிலையை அடைந்து வக்ரமாகிவிட்டது. உச்சமடைந்து வக்கிரமான கிரகம் நீச பலனையே தரவேண்டும். எனவே இந்த ஜாதகருக்கு பொருளாதாரம் சார்ந்த வகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதை அறிய முடிகிறது.

ஜாதகர் சனி திசையில் ஏறக்குறைய 22 லட்சத்திற்கும் அதிகமான அளவில் கடும் பொருளாதார இழப்பை சந்தித்தார்.

கீழ மற்றொரு பெண்மணியின் ஜாதகம்


ஜாதகிக்கு புத்திர பாக்யத்தை தரவேண்டிய குரு ஆறில் மறைவு.

நீசமடைந்து வக்கிரமடைந்த கிரகம் உச்சபலனை தரும் என்ற விதிப்படி குரு 6 ஆமிடத்தில் வலு குறையவில்லை. மேலும் குரு அமைந்த பாவாதிபதி சனி உச்சமடைந்துவிட்டதால் குருவும் உச்சமாக உள்ளதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.  இந்த ஜாதகத்தில் குரு 6 ல் மறைந்த தோஷம் ஜாதகிக்கு புத்திர பாக்கியம் அமைய தடைகளை மட்டுமே ஏற்படுத்தவேண்டும்.

பொதுவாக உச்சமடைந்த கிரகங்கள் சந்தோஷமான மனநிலையில் இருக்கும். எனவே குரு சனி வீட்டில் 6 ல் அமைந்து வலுவடைந்ததால்  சனியின் இயல்புப்படி தாமதமாக புத்திர பாக்கியம் அமையும்.

ஜாதகியின் ராசிக்கு 1௦ ஆமிடத்தில் குருவும் ராசியிலேயே சனியும் உச்சமடைந்த காலத்தில் ஜாதகியின் 29 ஆவது வயதில் பெண் குழந்தை பிறந்தது.  

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501.