என்ன படிக்க வைக்கலாம்?
பகுதி – 2
முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
ஆசிரியர் பணி
இன்று பெரும்பாலோர் விரும்பும் பணியாக
ஆசிரியர் பணி உள்ளது.
அதுவும் அரசுப் பள்ளி ஆசிரியராக பணி
அமைந்துவிட்டால் ஒருவரது ஜென்மம் கடைத்தேறிவிடும் என இன்று பெரும்பாலோனோர் எண்ணுகின்றனர்.
பணிகளிலே புனிதமான பணி என ஆசிரியர் பணியைக்
கூறலாம்.
அரசுப்பணி (GOVT. JOB)
ஒருவருக்கு அரசுப்பணி அமைய வேண்டுமெனில்
அவருடைய ஜாதகத்தில் சூரியன் வலுவாக அமைந்திருக்க வேண்டும். இரண்டாமிடம்,
பத்தாமிடம் அல்லது குறைந்தபட்சம் ஆறாமிடத்துடனாவது சூரியன் தொடர்பு கொண்டிருக்க
வேண்டும். சூரியன் வலுவாக அமைந்திருந்தால்தான் ஒருவர் அரசுத் துறையில் ஜொலிக்க
முடியும்.
பத்தாமிடத்துடன் சூரியன் தொடர்பு
கொண்டிருந்ததால் அரசுப் பணி அமைந்து ஆனால் அதே சூரியன் வலுவாக அமையாமல் பாவிகள்
பார்வையில் இருப்பதால் 20 ஆண்டுகளுக்கு மேலாக
பணி உயர்வைப் பெற இயலாமல் துறை மேலிடத்தின் மீது நீதி மன்றத்தில் வழக்கு போட்டு நீதிமன்றம்
சென்று வருபவரை நானறிவேன். எனவே அரசுப்பணி மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்வில் ஒருவர்
உயர வேண்டுமென்றால் கூட சூரியன்
ஜாதகத்தில் நன்றாக அமைந்திருக்க வேண்டும்.
ஆசிரியர் பணி அரசுத் துறையிலா அல்லது
தனியார் துறையிலா?
ஆசிரியர் பணி ஒருவருக்கு அமைய வித்யா
காரகன் புதன் மற்றும் நற்போதனைகளுக்கு காரகத்துவம் வகிக்கும் குரு ஆகிய இரண்டு
கிரகங்களின் பங்கு மிக அவசியம். இவ்விரண்டு கிரகங்களும் தன (2 ஆமிடம்), ஜீவன (10 ஆமிடம்) ஆகிய
பாவங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அல்லது அடிமைத்தொழிலைக் குறிக்கும் 6 ஆம்
பாவத்துடன் குருவும் புதனும் தொடர்பில் இருக்க வேண்டும். இந்த இரு கிரகங்களுடன்
சூரியன் தொடர்பு கொண்டிருந்தால் அரசுப்பள்ளி ஆசிரியர் பணி அமையும். சூரியன்
அல்லாமல் வேறு கிரகங்கள் தொடர்பு கொண்டிருந்தால் அந்த கிரகங்களுக்கேற்ற
சூழ்நிலையில் செயல்படும் தனியார் பள்ளி அல்லது கல்லூரியில் ஆசிரியர் பணி அமையும்
எனக் கொள்ளலாம்.
ஒருவரது ஜாதகத்தில் புத்திகாரகன் புதனும் தனகாரகன்
குருவும் கெட்டிருந்தால் அவர் கற்கும் கல்வி அவருக்கு பொருளீட்ட பயன்படாது.
அத்தகைய அமைப்பு ஜாதகத்தில் அமையப்பெற்றவர்கள் உத்தியோக ரீதியான (professional)
துறையைத் தேர்ந்தெடுத்து உயர்கல்வி
பெறுவதைவிடுத்து BBA, MBA, B.E (HONORS) போன்ற பொதுவான
துறைகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். ஜாதகர்
அரசுப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்த ஜாதகத்தில் லக்னமே குருவினுடைய
தனுசுதான். குருவானவர் வித்யாகாரனும் ஒருவரது தொடர்புகளைக் குறிக்கும் 7 மற்றும் ஜீவனத்தைக் குறிக்கும் 10 ஆமிடத்து
அதிபதியான புதனின் வீட்டில் இருப்பதைக் கவனியுங்கள். குரு வக்ரகதியில் நின்றதால்
குருவுக்கு ஏற்பட்ட கேந்திராதிபத்திய தோஷம் குறைந்துவிட்டது. மேலும் வருமானத்தைக்
குறிக்கும் 2 ஆமிடத்தில் அரச கிரகம் சூரியன் கல்விக்கு
காரகம் வகிக்கும் புதனுடம் சேர்ந்து அமைந்திருப்பதை கவனியுங்கள். கல்வியை போதித்து
அரசு மூலம் வருமானம் ஈட்டுவதை இந்த அமைப்பு காட்டுகிறது.
சுவாதி நக்ஷத்திரத்தில்
பிறந்த ஜாதகரது பால்ய வயதுக் கல்வி, 2 ஆமிடத்தில்
பாவக்கிரகம் சூரியன் அமைந்ததாலும் 2 ஆமதிபதி சனி கெட்டதாலும்
ராகுதிசையின் இறுதியில் ஏழ்மையால் தடைபட்டது.
எனினும் அடுத்து வந்த லக்னாதிபதி குருவினது திசை 2 வருட
இடைவெளிக்குப் பிறகு கல்வியைத் தொடர வழிசெய்தது. குரு, சூரியன் மற்றும் புதனின்
அமைப்பினால் ஜாதகர் ஆசிரியர் பயிற்சி முடித்து அரசுப் பணியில் அமர்ந்தார். லக்னத்தை
தனது நேரடிப் பார்வையில் வைத்திருக்கும் லக்னாதிபதி குரு ஜாதகரை தனது அம்சமாகவே
மாற்றினார்.ஜாதகரை தலைமை ஆசிரியர் நிலைக்கு உயர்த்தினார். அவரை நல்லாசிரியர் விருது பெறவைத்து பெருமைப்படுத்தினார். தற்போதும்
தகுதி உடைய எளியோர்களுக்கு அரசு உதவித் தொகைகளை
பெற உதவிகள் புரிந்து தனது வாழ்வை பயனுள்ளதாகப் பேணி வருகிறார். இவரிடம் எனது
பால்ய வயதுக் கல்வியைக் கற்றது எனது பாக்யமே.
கீழே மற்றொரு ஆசிரியரின் ஜாதகத்தை கவனியுங்கள்.
கன்னி லக்னமாக அமைந்து அதில் உச்சகதியில்
அமைந்த லக்னாதிபதி புதன் குருவோடு சேர்ந்து புனிதமடைந்தார். ஆனால் இந்தக் கூட்டணியில்
கேதுவும் சேர்ந்து லக்னத்தை வலுவடையவிடாமல் கெடுத்துவிட்டார். லக்னாதிபதி புதன் ஜீவனஸ்தானாதிபதியுமாக ஆகிறார்.
மேலும் புதன் வித்யாகாரகன் என்பதோடு குறிப்பாக கணிதத் திறமைக்கு காரண
கர்த்தாவாகிறார். அதனால் ஜாதகர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப்
பணியாற்றுகிறார். சூரியன் ராசியில் நீசம் கூடவே குரு அம்சத்தில் நீசமாகியிருப்பதைக்
கவனியுங்கள். மேலும் இரண்டாமதிபதி சுக்கிரன் மூன்றில் மறைந்து குரு அம்சத்தில்
நீசமாகியிருப்பது ஜாதகர் வாழ்வில் நிறைய பொருளாதாரச் சிரமங்களையும் பொருளாதார
இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைக் குறிப்பிடுகிறது.
சூரியன் தனஸ்தானத்தில்
நீசமானதால் தன் தந்தை தேடிவைத்த பொருளாதாரத்தை அழித்து தந்தையின் ஆயுளுக்கு தனது
ஜாதக அமைப்பினால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்துவிட்டார். ஜீவன காரகன் சனி
அம்சத்தில் நீச குருவுடன் பரிவர்த்தனையில் இருப்பதைக் கவனியுங்கள். இந்த அமைப்புகளெல்லாம்
ஜாதகருக்கு அரசு(சூரியன்) ஆசிரியர்(குரு)
பணி அமையாது என்பதைக் குறிக்கிறது. ஆனால் அரசு ஆசிரியர் பணி அமையும் என்ற
எண்ணத்தில் தனது வாழ்வின் பெரும்பகுதியை வீணடித்துவிட்டார். இன்றைய சூழலில் அரசுப்பணி
அமைந்துவிட்டால்தான் பொருளாதாரச் சிரமங்களிளிருந்து விடுபட்டுவிடலாமே. முதலில்
நாம் ஆராய்ந்த ஜாதகரது புதல்வர் இரண்டாம் ஜாதகத்தவர். இருவருமே ஆசிரியர்கள். ஆனால்
யார் எங்கு எத்தகைய பணியாற்றுவது என்பதை ஒருவரது ஜனன நேரம் மூலமாக இறைவனே
நிர்ணயிக்கிறான்.
ஒருவரது ஜாதக அமைப்பை ஆராய்ந்து அவருக்கு ஒவ்வாத
துறைகளை விலக்கி பொருத்தமான துறைகளை தேர்ந்தெடுக்க மகத்தான வழிகாட்டுதல்களை
ஜோதிடத்தால் அளிக்க இயலும். நமது வாழ்வை செம்மையுற அமைத்துக்கொள்ள நமது இந்து தர்மம் அளித்துள்ள மகத்தான பொக்கிஷம் ஜோதிடமாகும்.
மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.
பத்தாம் அதிபதிக்கும் ஐந்து ஒன்பதாம் அதிபதிக்கும் தொடர்பு இருந்தால் ஒருவர் ஆசிரியராக போவார் , இதில் சாரா பலனும் முக்கியம் .
ReplyDeleteமுதல் ஜாதகத்தில் 10 குடைய புதன் வக்கிரம் பெற்று லக்கினத்தை பாக்கிறார் அங்கே ஐந்தாம் அதிபதி உள்ளார் . ஆகவே தான் ஆசிரியர் பனி .
இரண்டாம் ஜாதகதில் 10ஆம் அதிபதி வக்கிரம் ஆகி உள்ளார் ,அவர் இரண்டாம் வீட்டை பாக்கிறார் , இதில் 9கும் 5 கும் சம்பந்தம் இல்லைம் , அனால் வேறு சில சேர்க்கை , பாத சரத்தால் ஏற்பட்டு இருக்கும் ... ராசி பிசிடி 10 கூடிய சுக்ரன் 4 ல் அவனை 9 குடைய அங்காரகன் பாக்கிறான் . ஆகா இரண்டு ஜாதகத்திலும் 9 5 தொடர்பு தேவை ...