Sunday, 30 June 2013

பஞ்ச பூதங்கள்


               
காலையில் நான் எழும் முன்பே அவன் தன் பணியைத் துவங்கிவிட்டான்.
நெருப்பாய்ச் சுடும் அவனால் மதியம் உடம்பெல்லாம் வியர்வை
மாலை ஆறுமணிவரை அவனுடனான கோபம் தீரவில்லை
அந்திச் சூரியன் சாயுமுன் அளவில்லா இதம்!

சைக்கிளோடு என்னை தூக்கிக் கடாசிவிடுவானா?
அவ்வளவு பலசாலியா அவன்?
நான் பலசாலியா அவன் பலசாலியா பார்த்துவிடுவோம்
இந்தக் காற்றுக்காலம் ஒரே தொல்லை!

மனசும் உடலும் மட்டற்ற சுகம்
மாலை நேர நதி மனதை அள்ளுகிறது 
எழுந்து வீட்டிற்குச் செல்லவே மனசில்லை
இந்தக் காவிரியில் வருஷமெல்லாம் நீர்வறாதா?

இந்த மண்தான் என்னை மனிதனாக்கியது
நல்ல சில மனிதர்களோடு வாழும் வாய்ப்பைத் தந்தது
இப்போது அது வேறு உலகமாகத் தெரிகிறது!
எண்பதுகளின் எங்கள் அக்ரஹாரம் தற்போது அடியோடு மாறிவிட்டது

எண்ணில்லா நட்சத்திரங்கள் இந்த ஆகாயத்தில்
எவ்வளவு பிரம்மாண்டம் இந்தப் பிரபஞ்சம்?
எனது வாழ்நாளில் இவற்றின் சூச்சுமத்தை அறிந்துவிடுவேனா?
முடியாது என்கிறது மனம் இருந்தாலும் பேராசைதான்?

அன்பன்,

பழனியப்பன்.

1 comment: