எச்சரிக்கை
இது ஜோதிடப் பதிவு அல்ல.
இந்தியாவை ஆட்டுவிப்பது சுதந்திர இந்தியாவின்
ஜனன காலத்தில் லக்னத்தில் வலுவாக அமைந்துவிட்ட ராகு பகவான்தான். இந்தியாவைப்
பொறுத்தவரை அரசியல்வாதிகள் அணைவருமே ஒருவகையில் ராகுவின் அம்சம்தான் எனலாம். இதில்
மாறுபட்ட அம்சமுடைய அரசியல்வாதிகள் அதாவது ராகுவின் குணாதிசயத்திற்கு மாறுபட்ட
குணாதிசயமுடைய அரசியல்வாதிகள் இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது. இந்தியா சுதந்திரமடைந்து
இன்றுவரை இந்தியாவை ஆள்பவர்களின் ஜாதகங்களை ஆராய்ந்தால் இந்த உண்மையை தெளிவாக
உணரலாம்.
சரி, ராகுவின் அம்சங்கள்தான் என்ன?
அணைத்து தீவிரமான துர்நடத்தைகளுக்குமே ராகுவே காரணம்.
பிரிவினை, நம்பிக்கைத் துரோகம், ஏமாற்றுதல், பழிவாங்கல்,
போதை, கள்ளக்கடத்தல், பின்னணியிலிருந்து இயக்குவது, சூழ்ச்சி, சதிவேலை, நாச வேலை, பேச்சுவன்மை
இன்னும் பல.
பல மத,மொழி,இன,கலாசார மாறுதல்களைக் கொண்ட இந்தியாவை
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும் தருவாயில் இந்தியாவின் மீதான அவர்களின்
பிடி நழுவிக்கொண்டிருப்பதை உணர்ந்தார்கள். அதைச்சமாளிக்க பல்வேறு யுக்திகள்
ஆலோசிக்கப்பட்டன. அப்போதுதான் நமது சுவாசமான இந்திய வேதத்திலேயே அதற்கான உபாயம்
ஒன்றும் இருந்ததை அறிந்து மகிழ்ந்தார்கள். அந்த வேதக் குறிப்பு என்ன?
பகைவனை வழிக்குக்கொண்டுவர வேதம் வகுத்துள்ள
விதி.
1.சாம -
சமாதான உடன்படிக்கை
2.பேத - பகைவனின் கூட்டத்திற்குள் யார் பெரியவர் என்ற உயர்வு தாழ்வு சொல்லிப் பிரித்து பிறகு அவர்களை வெற்றிகொள்வது
3.தான -
பணத்தைக் கொடுத்து பகைவனை வழிக்குக் கொண்டு வருவது.
4.தண்டம் - சண்டையிட்டு பகைவனை வெற்றி காண்பது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஆங்கிலேயர்களுக்கு மேற்குறிப்பிட்டவற்றில்
சாம, தான, தண்டங்கள் அதிக அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் பேதம் கைகொடுத்தது. ஆம்
பல மத,மொழி,இன,கலாசார மாறுதல்களைக் கொண்ட இந்தியாவை பேதப்படுத்தித்தான் அவர்களால்
கட்டுப்படுத்த முடிந்தது.ஒற்றுமையாய் இருந்த இந்தியாவை முதலில் மத அடிப்படையிலும்
பிறகு மொழி, ஜாதி அடிப்படையிலும் பேதங்களை பரப்பி. மக்களை பிளவு படுத்தி
கட்டுப்படுத்தினார்கள். ஆங்கிலேயர்கள் மிகச் சிறப்பாகக் கையாண்ட நமது பண்டைய (ஆனால் இன்றும் கை கொடுக்கும்) யுக்தி இது.
ஆங்கிலேயர்கள் நமது தேசத்தை விட்டுச்
சென்றுவிட்டாலும் அவர்களுக்கு சிறப்பாகக் கைகொடுத்த இந்த யுக்தியை ஆட்டுமந்தைகளான
இந்த பாவப்பட்ட தேச மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற நமது அரசியல்வாதிகள் மேலும்
விரிவுபடுத்தி சிறப்பாகவே செயல்படுத்தி வருகிறார்கள்.
பால்யக் கல்வியில் ஒரு பாடம் அனைவரும்
படித்திருப்போம்.
ஒற்றுமையாக கூட்டணியாக இணைந்து செயல்படும்
மாடுகளை வேட்டையாட முடியாத காட்டு விலங்குகள். மாடுகளுக்குள் நிறம், வண்ணம், கொம்பு,
வலிமை போன்ற உயர்வு தாழ்வுகளைக் கூறி சிறு சிறு குழுவாகப் பிரித்து பின்னர் எளிதாக
அவற்றை வேட்டையாடிவிடும்.
இந்தக் கதையை பள்ளியில் படிக்காது
விட்டுவிட்டவன் கூட அரசியல்வாதி ஆனவுடன் அரசியலில்
பால பாடமாகப் பயின்றிருப்பான்.
தமிழர்களால் பேதப்படுத்தி நிராகரிக்கப்பட்ட
பெரும்செல்வம் பெருந்தலைவர் காமராஜர்.
தன் இனம் என்பதற்காகவே தீவிரவாத அமைப்புகளுக்கு
ஆதரவு கொடுத்து அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளால் பிறகு தன் இனம் அழிவதை தடுக்கத்
திராணியின்றி வேடிக்கை பார்த்த வெக்கங்கெட்ட ஜென்மங்கள் உங்களைத் தேடிவருகிறார்கள்
இப்போது.
லட்சக்கணக்கான யூதர்களின் உயிரைப் பறித்த
ஹிட்லர் போன்ற பல நாசகாரர்களையும் அவர்களின் தீவிரவாத அமைப்புகளுக்கு ஏற்பட்ட கதியை
வரலாற்றில் பார்த்த பிறகும் இவர்களுக்கு ஏன் இந்த சிந்தனை வந்தது?
ஆங்கிலேயர்கள் தங்கள் தேசத்திற்கு செல்வங்களை
கொள்ளையடித்துச் செல்ல இந்தியாவை ஆட்சி செய்தனர். இவர்கள் (தமிழக அரசியல்வாதிகள்) தன்
இனம் அழிந்தாலும் தாங்கள் அதிகாரத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்ற அரசியல் வெறி
இந்தக் கயவர்களை இப்படி உந்துகிறது. அதுமட்டுமல்ல இன்னும் கொஞ்சம் தமிழர்கள் எஞ்சியிருக்கிறார்கள் இலங்கையில். இந்தப்
பிரச்சிசையை ஆற விட்டால் தங்களை தமிழக மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் இன்னும் இலங்கைத்
தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிகள் தாங்கள்தான் என்று கூறிவருகின்றனர். இந்தக்
கயவர்களின் இத்தகைய அரசியலால் நமது மீனவர்கள் நாள்தோறும் செத்துமடிகின்றனர்,
நிம்மதியை இழந்துவிட்டனர். இலங்கைவாழ் தமிழர்களின் அடுத்த தலைமுறை இருந்தால்தானே
இனி போராடுவார்கள் என்பதால் அங்கிருக்கும் தமிழச்சிகளின் கருப்பைகள் கசக்கி
எறியப்படுகின்றன இந்த மாபாதகர்களின் அரசியலால்.
ராகுவால் ஆட்சி செய்யப்படும் இந்தியா உலகை இயக்கம் சக்திகளுள் ஒன்றாக மாறிவிட்டதை கடந்த வருட குருப்பெயர்ச்சி பற்றிய பதிவிலேயே பார்த்தோம். அதனால் இந்தியத் தலைமையை மீறி தமிழகத்து அரசியல்வாதிகளால் இலங்கை விஷயத்தில் எந்த ஐ.நா சபையிலும் சென்று எதுவும் செய்ய முடியாது என்பதே யதார்த்தமான உண்மை. தமிழகத்து அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இலங்கை
பிரச்சனை ஒரு நாட்டாமைச் சொம்பு. தற்போது அது ஜெயலலிதாவின் கையில் இருக்கிறது.
அதை ஜெயலலிதா கீழே வைத்துவிட்டால் கருணாநிதி எடுத்துக் கொண்டுவிடுவார் என்பது தெளிவு.
இந்த மானங்கெட்ட தமிழக அரசியல்வாதிகளின் கோமாளித்தனங்களை
தேசிய கட்சிகள் எப்படி பார்க்கின்றன என்பதற்கு சமீபத்திய உதாரணம். தாங்கள்
வெற்றிபெற்றுவிட்டால் தேசத்தின் பெயரை மாற்றுவோம் (தேசத்தின் தலைஎழுத்தை மாற்ற
முடியாது என்பதை நினைத்தார்களோ என்னவோ) என்று கூறி வைத்தனர். ஆனால் இவர்கள்
கூட்டணி வைத்த தேசியக் கட்சி இப்படி லூசுத்தனமாகவெல்லாம் பேசாதீர்கள் என்று
கூறிவிட்டது. அது மட்டுமல்ல இலங்கையின் இறையாண்மையில் தலையிட மாட்டோம் என்பதையும்
தெளிவாகவே அறிவித்துவிட்டது அனைவரும் அறிந்ததே. பொது சிவில் சட்டமும் கொண்டு
வருவோம் என்று கூட அந்த தேசியக் கட்சி அறிவித்து விட்டது. இதிலெல்லாம் உடன்பாடில்லாத
இந்தப் பிரிவினைவாதிகள் எதற்காக இன்னும் கூட்டணியில் நீடிக்கிறார்கள். காரணம் முன்
சொன்னதே. வயிற்றுப் பிழைப்பல்ல அரசியலில் பிழைத்திருக்க வேண்டும் என்பதே.
இப்படிப்பட்ட தவறான அரசியல்வாதிகளைத் தவிர்த்து தேச மக்களின் ஒற்றுமையில் உண்மையான நலத்தில் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள்.
விஜய் T.V. இல் ஜோதிடம் தொடர்பான ஒருநீயா நானா நிகழ்ச்சியில் அடுத்த பிதமர் யார் என்ற கேள்விக்கு வந்திருந்த ஜோதிடர்கள் அனைவரும் ஒரு துண்டு சீட்டில் பதில் எழுதி ஒரு பெட்டிக்குள் வைத்துள்ளார்கள். ஜெயலலிதா முதன்முதலில் முதலமைச்சராக ஆனபோது பிரபல ஜோதிடர் திரு.நம்புங்கள் நாராயணன் அவர்கள் ஜெயலலிதா,அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் ஆகியோரது ஜாதகங்களை ஆய்வு செய்து ஜெயலலிதா எத்தனை ஓட்டுகள் பெறுவார் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் என்பது போன்ற துல்லியமான விபரங்களை ஓட்டு எண்ணிக்கைக்கு முன் INDIAN EXPRESS ல் பிரசுரித்திருந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். தேர்தல் முடிவில் அது எப்படி துல்லியமாகப் பலித்தது என்பதும் அனைவுரும் அறிந்ததே.
ஆனால் விஜய் T.V. ல் கேள்வி எழுந்தவுடன் ஜோதிடர்கள் துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்தது ஆச்சரியம் மட்டுமல்ல. வேதனையும் கூட. ஜோதிடத்தை இப்படிக் கேவலப்படுத்தக் கூடாது. எத்தனை பேர் அதில் மோடியின் ஜாதகத்தையாவது ஆய்வு செய்திருப்பர் என்பது தெரியவில்லை.
செப்டம்பர் 17 1950 ல் பிறந்த மோடியின் ஜாதகம் என
வலையுலகில் உலாவரும் ஜாதகத்தில் ஜனன நேரம் துல்லியமானதல்ல என்பது எனது எண்ணம். அது
தெரியாமல் முடிவைக் கூற இயலாது. எனினும் மோடி 17 ஆம் தேதி
பிறந்ததால் சனியின் அம்சம். ராகு சனியைப்போல் செயல்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
அதனடிப்படையில் மோடிக்கு பிரதமராக வாய்ப்பு உண்டு. ராகுல் காந்தியும் மோடியும் ஒரே
ராசியானாலும் ராகுலின் ஜாதகத்தில் மக்கள் செல்வாக்கைக் குறிக்கும் சனி நீச்சம்
என்பதால் மக்கள் செல்வாக்கில்லாது நாட்டை ஆள முடியாது. அப்படி ஆனாலும் நீடிக்க
முடியாது என்பது உறுதி.
சரி எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது?
எனது தனிப்பட்ட கருத்துக்களை வாசகர்களின் மீது திணிக்க விரும்பவில்லை எனினும் தற்போதைய நிலையில் மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவதே தேச நலனுக்கு உகந்தது. எனினும் தமிழகத்தில் பி.ஜே.பி கூட்டணிக்கு வாக்களிப்பது உகந்ததல்ல. தமிழகத்தில் அ.தி.மு.கவிற்கு வாக்களிப்பதே சிறந்தது. காரணம், காங்கிரஸ் ஆனாலும் பி.ஜே.பி ஆனாலும் தமிழகக் கட்சிகளை கோமாளிக் கூட்டங்களாகவே பார்க்கின்றன என்பது எனது கண்ணோட்டமல்ல, நடந்துகொண்டிருக்கும் உண்மை. தவறான பாதைக்குச் சென்றுவிட்ட தமிழக அரசியலில் அதன் மதிப்பை உயர்த்த முயன்றுகொண்டிருப்பவர் ஜெயலலிதா என்றால் அது மிகையல்ல.
கற்பனை செய்து பாருங்கள். பி.ஜே.பி கூட்டணியிலுள்ள கட்சிகள் அதிக இடங்களில் வென்று அவர்களின் தயவு இன்றி ஆட்சி நடத்த முடியாது எனும் சூழ்நிலையில் இந்தக் கோமாளிகள் தங்கள் ஜாதிகளுக்கு ஒரு நாடு மொழிக்கு ஒரு தேசம் மதத்திற்கு ஒரு மாநிலம் என்று இந்த தேசத்தை துண்டாட முயல்வார்கள் என்பது உறுதி. இத்தகைய கோமாளிக் கூட்டங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுதான் இந்த தேசத்தை காங்கிரஸ் கட்சி வெற்றிகரமாகச் சமாளித்துவந்தது. நாட்டின் வளர்ச்சியிலும் வெளியுறவுத் துறை, பாதுகாப்பு போன்ற விஷயங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிகரமாகவே செயல்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டில் இந்தக் கோமாளிக் கூட்டங்களின் தயவு வேண்டியிருந்ததால் செய்துகொண்ட சமரசத்தால் அது அனுபவித்த அவஸ்தைகள் ஒருபுறம் தனது கட்சிக் கயவர்களின் சுரண்டல்களால் பட்ட அவஸ்தைகள் மறுபுறம் என படாத பாடு பட்டுள்ளது அது. திமுகவை பற்றி இங்கு குறிப்பிடாததற்கு அதன் கடந்தகால வரலாறுகள் அதை விமர்சிக்கக் கூட தகுதியில்லாதபடி மாற்றிவிட்டதே காரணமாகும்.
உலகில் வல்லரசான நாடுகள் பெரும்பாலானவை இருகட்சி ஜனநாயக அமைப்பைக் கொண்டவை என்பது நாம் கண்டுகொண்டிருக்கும் உண்மை. இந்த சிந்தனையை மீறி மக்கள் வாக்களித்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பது காங்கிரசுக்கு கைவந்த கலை. டெல்லியில் மக்களின் முடிவு தவறு என்று மக்களாலேயே ஒப்புக்கொள்ள வைத்துவிட்ட காங்கிரசின் சாதுரியத்தைக் கொண்டு இதை தெளிவாக அறியலாம்.
கற்பனை செய்து பாருங்கள். பி.ஜே.பி கூட்டணியிலுள்ள கட்சிகள் அதிக இடங்களில் வென்று அவர்களின் தயவு இன்றி ஆட்சி நடத்த முடியாது எனும் சூழ்நிலையில் இந்தக் கோமாளிகள் தங்கள் ஜாதிகளுக்கு ஒரு நாடு மொழிக்கு ஒரு தேசம் மதத்திற்கு ஒரு மாநிலம் என்று இந்த தேசத்தை துண்டாட முயல்வார்கள் என்பது உறுதி. இத்தகைய கோமாளிக் கூட்டங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுதான் இந்த தேசத்தை காங்கிரஸ் கட்சி வெற்றிகரமாகச் சமாளித்துவந்தது. நாட்டின் வளர்ச்சியிலும் வெளியுறவுத் துறை, பாதுகாப்பு போன்ற விஷயங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிகரமாகவே செயல்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டில் இந்தக் கோமாளிக் கூட்டங்களின் தயவு வேண்டியிருந்ததால் செய்துகொண்ட சமரசத்தால் அது அனுபவித்த அவஸ்தைகள் ஒருபுறம் தனது கட்சிக் கயவர்களின் சுரண்டல்களால் பட்ட அவஸ்தைகள் மறுபுறம் என படாத பாடு பட்டுள்ளது அது. திமுகவை பற்றி இங்கு குறிப்பிடாததற்கு அதன் கடந்தகால வரலாறுகள் அதை விமர்சிக்கக் கூட தகுதியில்லாதபடி மாற்றிவிட்டதே காரணமாகும்.
உலகில் வல்லரசான நாடுகள் பெரும்பாலானவை இருகட்சி ஜனநாயக அமைப்பைக் கொண்டவை என்பது நாம் கண்டுகொண்டிருக்கும் உண்மை. இந்த சிந்தனையை மீறி மக்கள் வாக்களித்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பது காங்கிரசுக்கு கைவந்த கலை. டெல்லியில் மக்களின் முடிவு தவறு என்று மக்களாலேயே ஒப்புக்கொள்ள வைத்துவிட்ட காங்கிரசின் சாதுரியத்தைக் கொண்டு இதை தெளிவாக அறியலாம்.
நான் எந்தக் கட்சியையும் சாராதவன். அது
மட்டுமல்ல ஒரு கட்சிக்காரன் என்று கூறிக்கொள்வதைக் கேவலமாக நினைப்பவன். ஒரு
கட்சிக்காரன் என்று முத்திரை குத்திக்கொண்டு அந்தக் கட்சித் தலைமை செய்யும் கோமாளித்தனங்களை
எல்லாம் ஆதரிப்பவனல்ல. போலி மத, இன, மொழிச்சார்ப்பின்மை பார்ப்பவனல்ல.
மனிதர்களில் மானுடத்தை மட்டுமே பார்ப்பவன்.
வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. நமது எதிர்கால
வாழ்வோடு தொடர்புடைய வகையில் வாக்களியுங்கள். அன்றைக்கு அளிக்கப்படும் பணத்திற்கு
வாக்களிக்காதீர்கள். அது அன்று மட்டுமே பலனளிக்கலாம். ஐந்தாண்டுகளுக்குப் புதிய
அரசு நீடிக்கும் வகையில் வாக்களியுங்கள். தேச நலனில் அக்கறையோடு வாக்களியுங்கள். போலி மதவாதம் பேசி நம்மை பேதப்படுத்துபவர்களை இடதுகையால் ஒதுக்கித் தள்ளுங்கள்.
உண்மையாக வாக்களியுங்கள் ஆனால் உறுதியாக மத்தியில் பி.ஜே.பி கூட்டணிக்கும் மாநிலத்தில் அ.தி.மு.கவிற்கும்.
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.