ஒரு பாவத்தில்
நிற்கும் கிரகம் அதன் அம்சத்தை தான் நிற்கும் அந்த பாவத்தில் ஏதேனும் ஒரு வகையில்
நிலைநாட்டும்.
கிரகங்கள்
தாங்கள் நிற்கும் பாவத்தின் பலனையும் எடுத்து நடத்த கடமைப்பட்டுள்ளன. எனவே ஒரு
பாவத்தில் நிற்கும் கிரகம் முதன்மையாக தனது காரக அடிப்படையிலும் பிறகு தாங்கள்
நிற்கும் பாவம் எதனை குறிப்பிடுகிறதோ அதன் அடிப்படையிலும் மேலும் தாங்கள் எந்த பாவங்களுக்கு
அதிபதிகளோ அந்த பாவங்கள் எதனை குறிப்பிடுகிறதோ அதன் அடிப்படையிலும் தாங்கள்
நிற்கும் குறிப்பிட்ட அந்த பாவத்தில் தங்களது அம்சத்தை நிலை நாட்டும். இதில்
கிரகங்கள் நிற்கும் நட்சத்திர அதிபதிகளின் பங்கு குறிப்பிட்ட கிரகங்களின்
செயலுக்கு அதன் திசா புக்திகளில் தெளிவாக வெளிப்படும்.
உதாரணமாக
இரண்டாம் பாவம் 1.தனம், 2.வாக்கு, 3.குடும்பம் ஆகியவற்றை முதன்மையாக குறிக்கும்.
2 ல் ராகு
உள்ளதாகக்கொண்டால் ராகுவின் காரக அடிப்படையில் ஜாதகருக்கு வெளிநாட்டுத்தொடர்பு
ஏற்பட்டு அதன் மூலம் சம்பாத்தியம் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி ஏற்பட்டால்
அதன்பிறகு வாக்கு, மற்றும் குடும்ப வகையில் ராகு
பாதிப்பை தர வாய்ப்பு மிகக்குறைவே. இதற்கு ஜீவன காரகன் சனி ஜல ராசிகளுடனோ அல்லது 9,
12 ஆமதிபதிகளுடனோ தொடர்பில் இருக்க வேண்டும். இதனால் வெளிநாட்டு
சம்பாத்தியம் ஏற்படும். அடுத்து வாக்கு காரகன் புதன் கெடாமல் சுபர்களுடன் இருந்தால் பொய்,
புரட்டு இல்லாமல் இருப்பார். அடுத்து குரு கெடாமல் இருக்க வேண்டும்
ஏனெனில் குடும்ப காரகன் குரு கெட்டு குடும்ப பாவமும் ராகுவால் பாதிக்கப்பட்டால்
குடும்பம் குளறுபடியாகும்.
எனவே இரண்டில்
ராகு இருந்தால் இரு தாரம், பொய்யன், மதுவருந்துவான் போன்ற வகையில் மட்டும் பார்க்காமல் இரண்டாமிடம் குறிக்கும்
பாவ காரகங்களை தெளிவாக அறிய அதற்குரிய கிரக காரகர்களின் நிலைமையையும் ஆராய்வது
அவசியம். இதனை இங்கு குறிப்பிட மற்றொரு முக்கிய காரணம் தற்போது சில பகுதிகளில்
திருமணப்பொருத்தம் பார்க்கையில் ராகு-கேது தோஷம் என்ற வகையில் நல்ல ஜாதகங்களையும்
பொதுவாக ஒதுக்கி விடுகின்றனர். இது தவறு என்பதற்காகத்தான்.
லக்னத்திற்கு
ஏழில் சூரியன் நின்றால் பிரிவினை ஜாதகம் என்றுகூறி பொருத்தமே பார்க்க விரும்பாத
ஜோதிடர்கள் கூட உண்டு. சூரியன் ஏழில் நிற்பதால் அரசுப்பணி வரனாகப் பார்ப்பது
நல்லது. ஏழாமிடத்தில் நிற்கும் சூரியன் அரசாங்கத்திற்கு காரகத்துவம் பெற்ற கிரகம் என்பதால் இது
பொருந்தும். மேலும் 7 நின்று லக்னத்தை பார்க்கும் சூரியன் ஜாதகரையும் தனது அம்சமாக
அரசுப்பணி செய்பவராக அல்லது ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாற்றிவிட வாய்ப்புண்டு. அப்படி
நிகழ்ந்தால் தனது காரகத்தை ஒரு வகையில் நிலை நாட்டிய சூரியன் 7 ஆமிடத்தை
பாதிக்கமாட்டார் என நம்பலாம். இது ஒரு உபாயம் அவ்வளவே.
இது போல ஏழாம்
அதிபதி நீசமாகிவிட்டால் குறையுள்ள வாழ்க்கைத்துணைவரை பார்ப்பது நல்லது.
குறை என்பது
உடல் ஊனம், வாழ்க்கைத்துணையை இழந்தவர், மனமுரிவுற்றவர் என்ற வகையில் இருக்கலாம். அப்படி இல்லாமல் குறையில்லா நல்ல துணையை
தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும் என்றால் நீசமான ஏழாமதிபதி கிரகம் , வாழ்க்கைத்துணைவர் வகையில் தனது அம்சத்தை நிலைநாட்டும். அதாவது
துணைவருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. துணைவர் நீச குனங்களை
பெற்றவராக இருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் துணைவரின் ஜாதகம் வலுவாக இருந்தால் தனது
அம்சத்தை நிலைநாட்ட முயலும் ஜாதகத்தோடு போரிட இயலாமல் மண முறிவுக்கு கொண்டு
செல்லவும் வாய்ப்பு ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை.
எனக்கு நன்கு
அறிந்த ஒருவரின் ஜாதகத்தில் 7 ஆமதிபதி நீச கிரகத்தோடு சேர்க்கை பெற்றுள்ளது.
இவ்வமைப்பு அவரின் மனைவிக்கு மோசமானகுணத்தை ஏற்படுத்த வேண்டும். மனைவி மிக
நல்லவர். ஆரோக்யமாகவும் உள்ளார். குறிப்பிடும் நபர் மோசமான நண்பர்களோடு
(அரசியல்வாதிகள்) சேர்ந்து தொழில் செய்கிறார். 7 ஆமிடம் களத்திர ஸ்தானம் மட்டுமல்ல
ஒருவரது தொடர்புகளையும் குறிக்கும் என்ற வகையில் அந்த நபரின் 7 ஆமிட தோஷம் மோசமான
நண்பர்களோடு தொழில் ரீதியாக இணைத்து வைத்து மனைவியை பாதிக்காமல் விட்டுள்ளது.
12 ஆமிடத்தில்
பாவிகள் இருந்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று சம்பாதித்து வரும் கணவனை
தேடுவது நல்லது. அப்படி இல்லாமல் கணவன் எப்போதும் அருகிலேயே இருந்தால் 12 ஆமிடம்
குறிப்பிடும் படுக்கை அறை போர்க்களமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விடத்தில்
மற்றொரு விஷயம். ஒருவேளை 12 ல் பாவிகள் அமையப்பெற்ற ஜாதகர் ஒரு ஆண் எனக்கொள்வோம். அவர்
இரவுப்பணி ஆற்றுபவாராக இருந்தால் அவருக்கு தூக்கம் கெடும் என்ற வகையில் தனது
பாதிப்பை அங்கு நிற்கும் பாவிகள் வழங்கும். ஏனெனில் 12 ஆமிடம் தூக்கத்தையும்
குறிப்பிடும்.இந்த வகை பாதிப்பு ஏற்பட்டால் அதன் பிறகு தம்பதிகளின் தாம்பத்யத்தில்
கிரகங்கள் பாதிப்பை வழங்காது என எடுத்துக்கொள்ளலாம்.
கீழே நீங்கள்
காணும் வட இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஜாதகத்தில் சினிமா துறைக்கு
காரகத்துவம் பெற்ற சுக்கிரன் நீசம். ஆனால் ஜாதகர் கலைத்துறையில் முதன்மையானவர்.
இது எப்படி?
குரு உச்சமான
பாவாதிபதி சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் நின்றதால் சுக்கிரன்னு நீச பங்கம்
பெற்றார். எனவே சினிமாத்துறையில் ஜாதகர் சாதித்தார். 7 ல் ஒரு பாவி நின்று சுக்கிரன் நீச
பங்கமடைந்ததால் தனது காரகங்களில் ஒன்றான கலைத்துறையில் பாதிப்பு ஏற்படுத்த
ராசிக்கு 10 ல் நின்ற குரு தடைவிதிப்பார் என்றதால் சுக்கிரன்
தனது காரக பாதிப்பை வேறு வகையில் ஜாதகருக்கு வழங்கியுள்ளார். சுக்கிரன் மனைவியை குறிக்கும்
கிரகம் என்பதால் தோஷம் மனைவிக்கு மாறிவிட்டது.
ஜாதகரின் மனைவி ஜெய பச்சன் குள்ளம் என்பது அனைவரும் அறிந்ததே. அமிதாபச்சனுக்கும் ஜெயா பச்சனுக்கும் உயர வேறுபாடு சென்டிமீட்டர் கணக்கில் அல்ல கிட்டத்தட்ட அடிக்கணக்கில் என்பது அனைவரும் அறிந்ததே. 7 ஆமதிபதி சூரியன் தொழில் ஸ்தானமான 10 ஆமதிபதி செவ்வோயோடு இணைந்ததால் ஜாதகர் தன்னுடன் நடித்த நடிகையையே வாழ்க்கைத்துணையாக ஏற்றார். 7 ஆமதிபதி சூரியன் செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் நின்று குள்ளத்தனதிற்கு காரகம் பெற்ற செவ்வாயுடனும் சேர்க்கை பெற்றதால் ஜாதகரின் மனைவி குள்ளம் என்ற வகையில் அமைந்தார் என அனுமானிக்கலாம்.
ஜாதகரின் மனைவி ஜெய பச்சன் குள்ளம் என்பது அனைவரும் அறிந்ததே. அமிதாபச்சனுக்கும் ஜெயா பச்சனுக்கும் உயர வேறுபாடு சென்டிமீட்டர் கணக்கில் அல்ல கிட்டத்தட்ட அடிக்கணக்கில் என்பது அனைவரும் அறிந்ததே. 7 ஆமதிபதி சூரியன் தொழில் ஸ்தானமான 10 ஆமதிபதி செவ்வோயோடு இணைந்ததால் ஜாதகர் தன்னுடன் நடித்த நடிகையையே வாழ்க்கைத்துணையாக ஏற்றார். 7 ஆமதிபதி சூரியன் செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் நின்று குள்ளத்தனதிற்கு காரகம் பெற்ற செவ்வாயுடனும் சேர்க்கை பெற்றதால் ஜாதகரின் மனைவி குள்ளம் என்ற வகையில் அமைந்தார் என அனுமானிக்கலாம்.
இறுதியாக நான்
கூற வருவது என்னவென்றால் கிரக பாதிப்புகளை நாம் தடை செய்ய இயலாது. ஆனால் திசை
மாற்றிவிட வாய்ப்பு உண்டு என்பதுதான்.
ஜோதிடர்கள்
பொதுவாக செவ்வாய் தோஷம், நாக தோஷம், 7 ஆமிட களத்திர தோஷம் என்று ஜாதகங்களை நிராகரிக்காமல் குறிப்பிட்ட பாவம்,
பாவாதிபதி மற்றும் காரகன் இவர்களையும் ஆராய்ந்து பாதிப்பு எந்த
அளவில், வகையில் இருக்கும் என்று அறிந்து பிறகு முடிவுசெய்து
அவசியம்.
மீண்டுமொரு
பதிவில் விரைவில் சிந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
அன்பன்,
பழனியப்பன்.
அருமையான பதிவு சார்...
ReplyDeleteஅன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
9940292099