Sunday, 19 May 2013

ஆசிரியர் பணி


என்ன படிக்க வைக்கலாம்?
பகுதி – 2
முதல் பகுதியைப் படிக்க இங்கே  சொடுக்கவும்

ஆசிரியர் பணி
இன்று பெரும்பாலோர் விரும்பும் பணியாக ஆசிரியர் பணி உள்ளது.
அதுவும் அரசுப் பள்ளி ஆசிரியராக பணி அமைந்துவிட்டால் ஒருவரது ஜென்மம் கடைத்தேறிவிடும் என இன்று பெரும்பாலோனோர் எண்ணுகின்றனர்.

பணிகளிலே புனிதமான பணி என ஆசிரியர் பணியைக் கூறலாம்.

அரசுப்பணி (GOVT. JOB)
ஒருவருக்கு அரசுப்பணி அமைய வேண்டுமெனில் அவருடைய ஜாதகத்தில் சூரியன் வலுவாக அமைந்திருக்க வேண்டும். இரண்டாமிடம், பத்தாமிடம் அல்லது குறைந்தபட்சம் ஆறாமிடத்துடனாவது சூரியன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். சூரியன் வலுவாக அமைந்திருந்தால்தான் ஒருவர் அரசுத் துறையில் ஜொலிக்க முடியும்.

பத்தாமிடத்துடன் சூரியன் தொடர்பு கொண்டிருந்ததால் அரசுப் பணி அமைந்து ஆனால் அதே சூரியன் வலுவாக அமையாமல் பாவிகள் பார்வையில் இருப்பதால் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி உயர்வைப் பெற இயலாமல் துறை மேலிடத்தின் மீது நீதி மன்றத்தில் வழக்கு போட்டு நீதிமன்றம் சென்று வருபவரை நானறிவேன். எனவே அரசுப்பணி மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்வில் ஒருவர் உயர வேண்டுமென்றால் கூட  சூரியன் ஜாதகத்தில் நன்றாக அமைந்திருக்க வேண்டும்.

ஆசிரியர் பணி அரசுத் துறையிலா அல்லது தனியார் துறையிலா?  
ஆசிரியர் பணி ஒருவருக்கு அமைய வித்யா காரகன் புதன் மற்றும் நற்போதனைகளுக்கு காரகத்துவம் வகிக்கும் குரு ஆகிய இரண்டு கிரகங்களின் பங்கு மிக அவசியம். இவ்விரண்டு கிரகங்களும் தன (2 ஆமிடம்), ஜீவன (10 ஆமிடம்) ஆகிய பாவங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அல்லது  அடிமைத்தொழிலைக்  குறிக்கும் 6 ஆம் பாவத்துடன் குருவும் புதனும் தொடர்பில் இருக்க வேண்டும். இந்த இரு கிரகங்களுடன் சூரியன் தொடர்பு கொண்டிருந்தால் அரசுப்பள்ளி ஆசிரியர் பணி அமையும். சூரியன் அல்லாமல் வேறு கிரகங்கள் தொடர்பு கொண்டிருந்தால் அந்த கிரகங்களுக்கேற்ற சூழ்நிலையில் செயல்படும் தனியார் பள்ளி அல்லது கல்லூரியில் ஆசிரியர் பணி அமையும் எனக் கொள்ளலாம்.

ஒருவரது  ஜாதகத்தில் புத்திகாரகன் புதனும் தனகாரகன் குருவும் கெட்டிருந்தால் அவர் கற்கும் கல்வி அவருக்கு பொருளீட்ட பயன்படாது. அத்தகைய அமைப்பு ஜாதகத்தில் அமையப்பெற்றவர்கள் உத்தியோக ரீதியான (professional) துறையைத் தேர்ந்தெடுத்து உயர்கல்வி பெறுவதைவிடுத்து BBA, MBA, B.E (HONORS)  போன்ற பொதுவான துறைகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். ஜாதகர் அரசுப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
                               


இந்த ஜாதகத்தில் லக்னமே குருவினுடைய தனுசுதான். குருவானவர் வித்யாகாரனும் ஒருவரது தொடர்புகளைக் குறிக்கும் 7 மற்றும் ஜீவனத்தைக் குறிக்கும் 10 ஆமிடத்து அதிபதியான புதனின் வீட்டில் இருப்பதைக் கவனியுங்கள். குரு வக்ரகதியில் நின்றதால் குருவுக்கு ஏற்பட்ட கேந்திராதிபத்திய தோஷம் குறைந்துவிட்டது. மேலும் வருமானத்தைக் குறிக்கும் 2 ஆமிடத்தில் அரச கிரகம் சூரியன் கல்விக்கு காரகம் வகிக்கும் புதனுடம் சேர்ந்து அமைந்திருப்பதை கவனியுங்கள். கல்வியை போதித்து அரசு மூலம் வருமானம் ஈட்டுவதை இந்த அமைப்பு காட்டுகிறது. 

சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்த ஜாதகரது பால்ய வயதுக் கல்வி, 2 ஆமிடத்தில் பாவக்கிரகம் சூரியன்   அமைந்ததாலும்  2 ஆமதிபதி சனி கெட்டதாலும்  ராகுதிசையின் இறுதியில் ஏழ்மையால் தடைபட்டது. எனினும் அடுத்து வந்த லக்னாதிபதி குருவினது திசை 2 வருட இடைவெளிக்குப் பிறகு கல்வியைத் தொடர வழிசெய்தது. குரு, சூரியன் மற்றும் புதனின் அமைப்பினால் ஜாதகர் ஆசிரியர் பயிற்சி முடித்து அரசுப் பணியில் அமர்ந்தார். லக்னத்தை தனது நேரடிப் பார்வையில் வைத்திருக்கும் லக்னாதிபதி குரு ஜாதகரை தனது அம்சமாகவே மாற்றினார்.ஜாதகரை தலைமை ஆசிரியர் நிலைக்கு உயர்த்தினார்.  அவரை நல்லாசிரியர் விருது பெறவைத்து பெருமைப்படுத்தினார். தற்போதும் தகுதி உடைய எளியோர்களுக்கு அரசு  உதவித் தொகைகளை பெற உதவிகள் புரிந்து தனது வாழ்வை பயனுள்ளதாகப் பேணி வருகிறார். இவரிடம் எனது பால்ய வயதுக் கல்வியைக் கற்றது எனது பாக்யமே.  

கீழே மற்றொரு ஆசிரியரின் ஜாதகத்தை கவனியுங்கள்.







கன்னி லக்னமாக அமைந்து அதில் உச்சகதியில் அமைந்த லக்னாதிபதி புதன் குருவோடு சேர்ந்து புனிதமடைந்தார். ஆனால் இந்தக் கூட்டணியில் கேதுவும் சேர்ந்து லக்னத்தை வலுவடையவிடாமல்  கெடுத்துவிட்டார்.  லக்னாதிபதி புதன் ஜீவனஸ்தானாதிபதியுமாக ஆகிறார். மேலும் புதன் வித்யாகாரகன் என்பதோடு குறிப்பாக கணிதத் திறமைக்கு காரண கர்த்தாவாகிறார். அதனால் ஜாதகர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சூரியன் ராசியில் நீசம் கூடவே குரு அம்சத்தில் நீசமாகியிருப்பதைக் கவனியுங்கள். மேலும் இரண்டாமதிபதி சுக்கிரன் மூன்றில் மறைந்து குரு அம்சத்தில் நீசமாகியிருப்பது ஜாதகர் வாழ்வில் நிறைய பொருளாதாரச் சிரமங்களையும் பொருளாதார இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைக் குறிப்பிடுகிறது.

 சூரியன் தனஸ்தானத்தில் நீசமானதால் தன் தந்தை தேடிவைத்த பொருளாதாரத்தை அழித்து தந்தையின் ஆயுளுக்கு தனது ஜாதக அமைப்பினால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்துவிட்டார். ஜீவன காரகன் சனி அம்சத்தில் நீச குருவுடன் பரிவர்த்தனையில் இருப்பதைக் கவனியுங்கள். இந்த அமைப்புகளெல்லாம்  ஜாதகருக்கு அரசு(சூரியன்) ஆசிரியர்(குரு) பணி அமையாது என்பதைக் குறிக்கிறது. ஆனால் அரசு ஆசிரியர் பணி அமையும் என்ற எண்ணத்தில் தனது வாழ்வின் பெரும்பகுதியை  வீணடித்துவிட்டார். இன்றைய சூழலில் அரசுப்பணி அமைந்துவிட்டால்தான் பொருளாதாரச் சிரமங்களிளிருந்து விடுபட்டுவிடலாமே. முதலில் நாம் ஆராய்ந்த ஜாதகரது புதல்வர் இரண்டாம் ஜாதகத்தவர். இருவருமே ஆசிரியர்கள். ஆனால் யார் எங்கு எத்தகைய பணியாற்றுவது என்பதை ஒருவரது ஜனன நேரம் மூலமாக இறைவனே நிர்ணயிக்கிறான்.

ஒருவரது ஜாதக அமைப்பை ஆராய்ந்து அவருக்கு ஒவ்வாத துறைகளை விலக்கி பொருத்தமான துறைகளை தேர்ந்தெடுக்க மகத்தான வழிகாட்டுதல்களை ஜோதிடத்தால் அளிக்க இயலும். நமது வாழ்வை செம்மையுற அமைத்துக்கொள்ள நமது இந்து தர்மம் அளித்துள்ள மகத்தான பொக்கிஷம் ஜோதிடமாகும்.

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன். 

Sunday, 5 May 2013

என்ன படிக்க வைக்கலாம்?

 பகுதி : 1

ஓவியக் கலைஞன்







"ஒரு மனிதனது வாழ்வில் வெற்றி தோல்வியை அவன் பிற மனிதனைத் தொடர்பு கொள்ளும் முறைதான் முடிவு செய்கிறது" என்றொரு கருத்து உண்டு.ஆனால் இது தவறான கருத்து. ஏனெனில் ஒரு மனிதனின் வாழ்வில் வெற்றி என்பது எது என்பதிலேயே பல கருத்து  வேறுபாடுகளுண்டு.இன்றைய கால கட்டத்தில்  பணம் சம்பாதிப்பதையே வாழ்வின் வெற்றியாக பெரும்பாலோனோர்     கருதுகின்றனர். பணம் சம்பாதிப்பது வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று அவ்வளவே. அதனால்தான் மேற்சொல்லப்பட்ட கருத்துக்கு மாற்றாக " வாழ்வில் வெற்றி தோல்விகளை ஒருவரது சுய விருப்பமே நிர்ணயிக்கிறது" என்கின்றனர் அறிஞர்கள்.

இதில் சம்பாதிப்பதில் ஒருவரது சுய விருப்பங்களை மீறி அவரது ஜாதக அமைப்பே முன்நிலை வகிக்கிறது. ஒருவன் எத்தகைய கர்மங்களைச் செய்து பொருளீட்டுவான் என்பதை ஒருவரது ஜாதகத்தில் 1,2,6,10 மற்றும் சனியின் நிலையைக் கொண்டு தெளிவாக அறியலாம். ஒருவர் எத்துறையில் பிரகாசிப்பார் என்பதை தகுந்த ஒரு ஜோதிடர் மூலம் அறிந்து அந்தத் துறையை தேர்ந்தெடுத்து உயர்கல்வியில் தங்களது குழந்தைகளை ஈடுபடுத்தினால், கல்விக்கும் உத்தியோகத்திற்கும் தொடர்பில்லாமல் இயந்திரவியல் படித்துவிட்டு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்துப் பிழைக்கும் அவலங்கள் குறையும். இன்று கற்ற கல்விக்கு தொடர்பில்லாத துறைகளில் பெரும்பாலோனோர் ஈடுபடுவதைக் காண முடிகிறது. ஆனால் ஈடுபாடுள்ள தொழிலைச் செய்வதில்தான்  ஒருவர் ஆத்ம திருப்தியடைய முடியும். மேலும்  அந்தத் தொழிலும் அவர்களால் சிறப்படையும். சில புத்திசாலிகள்  பிடிக்காத துறையில் வருவாய்க்காகப் பணிபுரிந்துகொண்டு  விருப்பமுள்ள மாற்றுத் துறையில் ஈடுபட்டுப் புகழடைந்து கொண்டிருப்பதை  வாசகர்கள் தற்காலத்தில் காணலாம்.

ஒருவர் எத்துறையில் ஈடுபட்டிருந்தாலும் அவர் பொருளாதார ரீதியாக எப்படி இருப்பார் என்பதை ஜாதகத்தில் தனகாரகன் குரு, இரண்டாம் பாவம், இரண்டாம் அதிபதி உள்ளிட்ட கிரக அமைப்புகள்தான் முடிவு செய்கின்றன. எனவே ஒருவர் ஈடுபடும் துறைக்கும் பொருளீட்டுதலுக்கும் தொடர்பில்லை என்பதை வாசகர்கள் நன்கு உணர வேண்டும்.

பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள். ஜாதகி பிறந்தது 31.04.1977. இந்த ஜாதகத்தில் உள்ள ஒரு யோகத்தின் பெயர் காந்தர்வ யோகம். பல கலைகளில் திறமையும் பிரபலமும் அளிக்கும் யோகம் இது.  சுக்கிரன், சூரியன், சந்திரன், சனி இந்த நான்கு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடங்களில் அமையப்பெறுவதால் இந்த யோகம் ஒருவருக்கு ஏற்படும். இந்த யோகத்திற்கான விதிகள்.
                           
                                 






1.சூரியன் உச்சமாக இருக்க வேண்டும்.
2.சந்திரன் பாக்கியஸ்தானத்தில் (9 மிடத்தில்) இருக்க வேண்டும்.
3. பத்தாமதிபதி கிரகம் ஏழாமிடத்திற்கு திரிகோணத்தில் இருக்க வேண்டும்.
4. லக்னாதிபதியை குரு பார்க்க வேண்டும்.

இக்கிரகங்களின் தனிப்பட்ட குணாதிசயங்களாவன.
சந்திரன்  - கற்பனா சக்தி
சுக்கிரன் - கலைகளில் ஈடுபாடு
சனி         - சிரத்தை, பொறுமை , உழைப்பு
புதன்       - மேற்கண்ட செயல்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் புத்திசாதுரியம்.
குரு        - படைப்பு உன்னதமாக வெளிப்பட உதவுபவர், வெற்றி, புகழ்.
சூரியன் - ஆளுமை மற்றும் ஒருங்கிணைத்தல்.

மேற்குறிப்பிட்ட நான்கு விதிகளில் முதல் 3 விதிகள் இந்த ஜாதகத்தின்  ராசிக்கட்டத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். நான்காவது விதி அம்சத்தில் அமைந்துள்ளது. லக்னாதிபதி சனியை(அம்சத்தில்) குரு ஒன்பதாம் பார்வையாகப் பார்ப்பதைக் கவனியுங்கள்.

இந்த யோகம் தவிர ஜாதகர் செய்யும் தொழிலுக்காண தொடர்புகள் இந்த ஜாதகத்தில் மேலும் சில உண்டு. அவை பின் வருமாறு.

1. ராசி, அம்சம் இரு கட்டங்களிலும் பத்தாமிடம் (செய்யும் தொழிலைக் குறிக்குமிடம்) கலைகளுக்குரிய சுக்கிரனின் வீடாகவே அமைந்திருப்பதைக் கவனியுங்கள்.
2. தனஸ்தானாதிபதியும்  (2 ஆமதிபதி) லக்னாதிபதியுமான  சனியானவர்  கலை மற்றும் கற்பனைகளுக்குரிய  சந்திரனின் வீட்டில் அமர்ந்திருப்பதைக் கவனியுங்கள். 
3. தனகாரகன் குரு சுக்கிரனின் வீட்டில் உள்ளது ஜாதகர் fine arts ல் ஈடுபட்டு பொருளீட்டுவதை உறுதி செய்கிறது.
4.மேலும் சந்திரனுக்கு இரண்டாமிடமும் சுக்கிரனின் வீடுதான் (துலாம்) என்பதையும்         கவனிக்க வேண்டும்.
        

நாம் ஆராய்ந்த ஜாதகத்திற்குரிய ஜாதகி ஓவியத்துறையில் ஈடுபாடுள்ளவர். ஓவியத்தை மாணவர்களுக்கு கற்றுத்தந்து பொருளீட்டுகிறார்.

தலைப்பின் கீழே நீராடும் யுவதியை முதன் முதலாகப் பார்ப்பவர்கள் அவசரப்பட்டு  ஜொள்ளுவிட  வேண்டாம். அந்த யுவதி பென்சில் டிராயிங் என்ற எளிய முறையில் வரைந்த ஒரு ஓவியம். நம்ப இயலாதவர்கள் கீழே அதை கர்ம சிரத்தையுடன் இத்தாலிய இளைஞனொருவன்  வரைவதைக் காணுங்கள்.









இது போன்ற மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,


பழனியப்பன்.

Friday, 26 April 2013

‘அன்னை பூமியின் அன்பு மகள்’


ராஜ் சர்மா

விருட்ச சாஸ்திரம்: பகுதி- 3

      



இந்த பூமியை உய்விக்க வந்த  புனிதர்கள் என்று சில மகான்களை மதங்கள் அடையாளம் காட்டும். அது போன்ற ஒருவர் இந்த மனுஷி. ‘அன்னை பூமியின் அன்பு மகள்’ என்று இவரை விளிக்கலாம்.


உத்திரப்பிரதேசம் காசியாபத்தைச் சேர்ந்தவர் ராஜ்சர்மா. இந்த அறுபது வயதுப் பெண்மணி கடந்த 46 ஆண்டுகளில் ஏறக்குறைய4 லட்சம் மரக்கன்றுகளை பள்ளிகள், கல்லூரிகள்,மதரஸாக்கள், ராணுவத்தினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் உதவியுடன் நட்டுள்ளார். 

‘நான் மரங்களை எனது குழந்தைகளைப் போல விதைக்கிறேன்’ என்கிறார் இந்தப் புண்ணியவதி. ‘நாமும் ஏன் நமது குழந்தைகளும் கூட ஒருநாள் காலனிடம் சென்றுவிடலாம் ஆனால் நாம் நட்ட மரங்கள் நமது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்’ என்கிறார் இவர். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் பாருங்கள்!.

             

நமது  இல்லத்தரசிகள் சமையலில் பயன்படுத்தி எறியும் காய்கறிக் கழிவுகளை சேகரித்து அவற்றை உரங்களாக மாற்றி மரங்கள் தழைத்து வளர வழிகாட்டியுள்ளார். தமது ஆயுட்காலத்திற்குள் குறைந்தது 10 லட்சம் மரங்களை நடுவதே தமது வாழ்வின் லட்சியம் என்கிறார். அதுமட்டுமல்ல தனது வாழ்நாளில் தனது இலக்கை அடையாவிட்டால் தனது குழந்தைகள் தனது லட்சியத்தை நிறைவேற்றவேண்டும் அப்போதுதான் அவர்கள் தனது சொத்துக்களை அடையமுடியும் என்று உயில எழுதி வைத்துள்ளார். தினசரி இருபது ரூபாயை தனது மரம் வளர்ப்பு முயற்சிக்கு  செலவிடுகிறார். இது சிறிய தொகையே என்றாலும் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கேற்ப இவரது முயற்சிகள் அமைகின்றன.



இவரது வீட்டைச் சுற்றிலும் மரங்கள்தான். பல்வேறு பறவைகள், அணில்களின் உறைவிடம் அவரது இல்லம்.


       


படத்தைப் பாருங்கள் இயற்கையோடு ஒன்றிவிட்ட இம்மனுஷியை விலங்குகள் கூட எவ்வளவு பிரியத்துடன் அணுகுகின்றன என்பது புரியும். காலங்களைக் கடந்த அழியாப் புகழ் பெற்ற மனிதர்களான காந்தி, காமராஜர், M.G.R போன்றோர் வரிசையில் இவரும் இப்போதே இடம் பிடித்துவிட்டது கண்கூடு. ‘

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’

என்ற கண்ணதாசன் வரிகள் இவருக்கு 100 சதவீதம் பொருந்தும்.

இவரது பேட்டியைக் காணவும் மேலதிகத் தகவல்களைப் பெறவும்   இங்கு  சொடுக்குங்கள்.

இங்கிலாத்து போன்ற மேலை நாடுகளில் மரம்  நடுதலை ஒரு இயக்கமாகச் செய்கிறார்கள். அங்கு ஒரு மரத்தை சாதாரணமாக யாரும் வெட்டிவிடமுடியாது. அது கடும் தண்டனைக்குரிய குற்றம் அந்நாடுகளில், அதுமட்டுமல்ல ஒரு மரத்தை சாலைப்பணி விரிவாக்கத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெட்டுமுன் நீதிமன்றங்களிடம் அதற்கான உத்தரவை பெறவேண்டும். கடந்த நூற்றாண்டின் இறுதியில் அங்கு குறிப்பிட்ட அகற்ற வேண்டிய மரத்தை வேரோடு பிடுங்கி வேறிடத்திற்கு இடமாற்றம் செய்ய  கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். (நமது நாட்டிலும் சாலைப்பணி விரிவாக்கம் போன்ற செயல்களுக்காக மரங்களை வெட்ட வேண்டிய   ஒரு மரத்திற்கு ஈடாக 10மரங்களை நடவேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.)

 

படத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள நரையன்குலம் - ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவமணிகளுடன் பள்ளி ஆசிரியர்கள் -  நன்றி தினமலர்.



 மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை பள்ளிகளில் சொல்லித் தருவதோடு அவற்றில் ஈடுபடுத்துவதையும் பள்ளியிலிருந்தே துவங்க வேண்டும். தமிழகத்து  பள்ளிகளில் நமது வளரிளம் தளிர்களின் பிஞ்சு நெஞ்சில் பேதமை எனும் விஷ விருக்ஷங்களை விதைத்து தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் கயமைத்தனத்திளிருந்து  நமது குழந்தைகளை காப்பாற்றி அவர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவது நமது கடமை.

 ஜப்பான், சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகள் துருவப்பணி உருகி தங்களது நாடுகளை காலி செய்யாமல் இருக்க இந்தியா  போன்ற பல நாடுகளுக்கு நிதியை வாரி வழங்குகின்றன. அவற்றை நமது அரசு,  வனத்துறை மற்றும் வேளாண அமைப்புகள் மூலமாக செயல்படுத்த முயற்சிக்கிறது. சில தவறான அதிகாரிகள் மற்றும் NGO க்களின் கூட்டுக் களவாணித்தனத்தால் அவை விழலுக்கு இறைக்கும் நீராக மாறுவதையும் கவலையுடன் கவனிக்க நேர்கிறது.

 பின்வரும் இணைய முகவரிகள் மற்றும் செல்பேசிகளின் மூலம் தொடர்புகொண்டு விருக்ஷங்களை இலவசமாகப் பெற்று நீங்கள் பயனடைவதுடன் உங்கள் பங்கை இந்த உலகிற்கு ஆற்றுங்கள்.

http://www.projectgreenhands.org/get-involved/volunteer

ஜக்கி வாசுதேவ் அவர்களின் இஷா மையத்தின் சார்பில் துவங்கி நடத்தப்பட்டு வரும் முன்னணி அமைப்பு. தமிழ்நாட்டில் செயல்படும் பிரதானமான அமைப்பு இதுதான்.தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் அவ்வமைப்பின் கிளைகள் உண்டு.

http://www.greencoimbatore.com/

கோவையைச் சேர்ந்த மற்றொரு அமைப்பு. கோவை வாசிகள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

http://www.ancienttreearchive.org/sponsor-a-tree/?gclid=COCI5PPr4LYCFUx_6wod-i8A_Q

சென்னையில் செயல்படும் அமைப்பு. சென்னை வாசிகள் மட்டும் தொடர்பு கொள்ளலாம்.

http://agritech.tnau.ac.in/ta/forestry/extension_centres_ta.html

தமிழக அரசின் வேலாண்மை அலுவலகங்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்டு. அவைகளைத் தொடர்புகொண்டால் அவர்கள் மரங்களை பெற ஏற்பாடு செய்வார்கள். இந்த இணைப்பில் பெரும்பாலான மாவட்டங்களின் தொடர்புடைய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்புகொண்டு விபரங்களை அறியலாம்.

 
9894062532 or 9962673668

இந்த செல்பேசி எங்களுக்கு மரங்கள்  வேண்டி ஒரு குறுஞ்செய்தி (SMS)அனுப்புங்கள். உங்களை தொடர்புகொண்டு மரங்களை அளிப்பார்கள். சென்னைவாசிகள் மட்டும்

treebankofindia@gmail.com or sms 97898 92080
இந்த மின் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியோ அல்லது இந்த செல்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளவும். சென்னை வாசிகள் மட்டும்.

 +91-9894062532 சென்னை வாசிகள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மேஷ ராசியில் சனியும் குருவும் சந்திப்பார்கள். அதனையடுத்து வரும் அறுபது ஆண்டுகளிலும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் இவ்விரு கிரகங்களின் சஞ்சார நிலைகளுக்கேற்பவே இந்த வருஷாதி விருக்ஷங்களை வகுத்தளித்துள்ளார்கள் நமது முன்னோர்கள். குரு மற்றும் சனியின் நிலையை ஒட்டியே ஒருவரின் ஜீவன, குடும்ப &  பொருளாதாரச் சூழல் அமையும். எனவே குறிப்பிட்ட ஆண்டில் பிறந்தவர்கள் அவர்களுக்கான பிறந்த ஆண்டின் விருக்ஷங்களை நட்டு பராமரித்து வந்தால் அவர்களின் வாழ்க்கை சூழல் நன்கமையும்.
 பின்வருவன வருஷாதி விருக்ஷங்கள்.

  

வருஷாதி விருட்சங்கள்
1.பிரபவ             - கருங்காலி மரம்
2.விபவ              - அக்ரூட்மரம்
3.சுக்ல                - அசோக மரம்
4.பிரமோதூத     - அத்தி 
5.பிரஜோர்பத்தி - பேயத்தி மரம்
6.ஆங்கீரஸ        - அரசுமரம்
7.ஸ்ரீமுக             - அரைநெல்லி
8.பவ                   - அலயாத்தி
9.யுவ                  - அழிஞ்சில் மரம்
10.தாது               - ஆச்சாமரம்
11ஈஸ்வர            - ஆலமரம்
12.வெகுதான்ய  - இலந்தை மரம்
13.பிரமாதி         - தாளைபனைமரம்
14.விக்ரம           - இலுப்பை மரம்
15.விஷு            - ருத்திராட்சம்
16.சித்ரபானு      - எட்டி மரம்
17.சுபானு          - ஒதியம்
18.தாரண          - கடுக்காய் மரம்
19.பார்த்திப       - கருங்காலி மரம்
20.விய               - கருவேலமரம்
21.சர்வஜித்        - பரம்பை மரம்
22.சர்வதாரி       - குல்மோகூர்மரம்
23.விரோதி        - கூந்தல் பனை
24.விக்ருதி         - சரக்கொன்றை
25.கர                 - வாகை மரம்
26.நந்தன           - செண்பகம்
27.விஜய            - சந்தனம்
28.ஜய                - சிறுநாகப்பூ
29.மன்மத           - தூங்குமூஞசி மரம்
30.துர்முகி          - நஞ்சுகண்டாமரம்
31.ஹேவிளம்பி  - நந்தியாவட்டை
32.விளம்பி         - நாகலிங்கம் 
33.விகாரி          - நாவல்
34.சார்வரி          - நுணாமரம்
35.பிலவ            - நெல்லி மரம்
36.சுபகிருது       - பலா மரம்
37.சோபாகிருது - பவழமல்லி மரம்
38.குரோதி         - புங்கம் மரம்
39.விசுவாவசு    - புத்திரசீவிமரம்
40.பராபவ         - புரசுமரம்
41.பிலவங்க       - புளிய மரம்
42.கீலக             - புன்னை மரம்
43.சௌமிய       - பூவரசு மரம்   
44.சாதாரண       - மகிழமரம்
45.விரோதிகிருது -  மஞ்ச கடம்பை
46.பரிதாபி         - மராமரம்
47.பிரமாதீச       - மருதமரம்
48.ஆனந்த         - மலைவேம்பு
49.ராட்சஸ        - மாமரம்
50.நள                - முசுக்கொட்டை மரம்
51.பிங்கள         - முந்திரி
52.காளயுக்தி     - கொழுக்கட்டை மந்தாரை
53.ஸித்தார்த்தி  - தேவதாரு
54.ரௌத்ரி        - பனை மரம்
55.துன்மதி        - ராமன்சீதா
56.துந்துபி        - மஞ்சள் கொன்றை
57.ருத்ரோத்காரி- சிம்சுபா
58.ரத்தாக்ஷி  - ஆலசி 
59.குரோதன    - சிவப்புமந்தாரை
60.அட்சய        - வெண்தேக்கு


மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.