விருக்ஷ சாஸ்திரம்
பகுதி - 2
ஜாதவ் பேயங்
திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் – வெள்ளெருக்கு
மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் – பவளமல்லி
பகுதி - 2
இத்தொடரின் முந்தைய பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு இங்கு தொடர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அஸ்ஸாமில்
பிரம்மபுத்ரா நதிப்படுகயிலமைந்த ஜோர்ஹட் நகரைச்
சார்ந்த கோகிலமுக் எனும் சிறு கிராமம். 1979 ஆம் ஆண்டில் ஒரு மழைக்காலம். நதி
நூற்றுக்கணக்கான பாம்பு, ஓணான் உள்ளிட்ட பல சிறு பிராணிகளையும் தனது கோர வெள்ளத்திற்குப்
பலியாக்கி தனதுபடுகையில் வீசிவிட்டுச் சென்றிருந்தது.கலலை தோய்ந்த கண்களுடன் அப்பிராணிகளின் இறந்த உடல்களைக்
கவனித்துக்கொண்டிருந்தான் ஒரு பத்தாம் வகுப்புச் சிறுவன். அச்சிறு பிராணிகள்
பாதுகாப்பாக வாழ மரங்கள் நிறைந்த சூரிய வெப்பத்தின் தாக்கம் குறைந்த வாழிடங்கள்
இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என அனுமானித்து அவற்றிற்கு மரங்கள்
சூழ்ந்த வாழிடங்களை அடுத்த சில நாட்களில் நதியின் நடுவே அமைந்த மனற்படுகையில் அமைக்கத்
துவங்கினான் அச்சிறுவன்.
ஆற்று
மணலில் மரங்களை வளரச்செய்வது பைத்தியக்காரத்தனம் என எள்ளி நகையாடினர் ஊரார்.
செவ்வெரும்புகள் ஆற்று மணலைத் துளைத்து மணற்படுகைக்கு கீழுள்ள சத்துமிகுந்த மண்ணை
மேல்நோக்கி உயிர்ப்பித்துக் கொண்டுவரும் என அறிந்து அதனை செயல்படுத்தினான்.
தேடித்தேடி மரங்களைக் கொணர்ந்து நட்டான். அவனது முயற்சிக்கு வந்த தடங்கல்கள் இருந்து
அவனது வனத்தை பாதுகாக்க தனது கல்வியையும் துறந்தான். தனது எண்ணம் செயல் சிந்தனை
ஆகிய அனைத்தையும் அவனது அப்பணிக்காக அர்பணித்தான்.
காலங்கள்
கடந்தன. இடையே அவனுக்குத் திருமணம் நடந்து குழந்தைகளும் பிறந்தன. எனினும் அவன்
தனது குடும்ப வாழ்க்கையின் பொருட்டு மரங்களை நேசிப்பதை விட்டுவிடவில்லை. தனது
குடும்பத்தோடு அவ்வனத்தில் குடியேறினான் அம்மனிதன். பிற்பாடு தனது குழந்தைகளின்
கல்விக்காக வனத்தை விட்டு வெளியேறினாலும் மரங்கள் அவனது உயிர்மூச்சானது. உள்ளூர்
மக்கள் அவன் வளர்த்த மரங்களை தங்களது தேவைக்காக வெட்ட முற்பட்டபோது என்னை வெட்டித்
தள்ளிவிட்டு இம்மரங்களை வெட்டுங்கள் எனக் கோரினான். அவனது மன உறுதி மக்களையும் மாற்றியது.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன் மாவட்ட நிர்வாகம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை
நதிப்படுகையில் குடியமர்த்த முற்பட்டபோது அவனது நியாயமான எதிர்ப்பினை உணர்ந்து
தனது முடிவிலிருந்து பின்வாங்கியது.
2007
ஆம் ஆண்டில் ஒருநாள் குடியிருப்புகளை துவம்சம் செய்த யானைகளை தேடிச்
சென்ற அரசு அதிகாரிகள் தங்களது கையிலிருந்த மேப்பில் உள்ளபடி இங்கே இருந்த மணற்படுகை எங்கே எனத் தேடி கிராமத்தினர்களை
விசாரித்தபோது அவர்கள் காட்டிய மனிதன்தான் முளை (கத்தோனி) என அவர்களால் பரிவுடன்
அழைக்கப்படும் திரு. ஜாதவ் பேயங். அந்த
எளிய மனிதனின் 35 வருட
தனிப்பட்ட உழைப்பின் காரணமாக பிரம்மபுத்திரா நதிப்படுகையில் ஏறக்குறைய 550 ஹெக்டேருக்கும் மேலாக பறந்து விரிந்திருந்தது அந்த வனம். யானைகள்,
காண்டாமிருகங்கள் போன்ற பல்வேறு வனவிலங்குகளுக்கும் எண்ணற்ற பறவையினங்களுக்கும்
அது ஒரு சொர்க்கபுரி. மரங்களின் மீதிருந்த பேயங்கின் ஆர்வத்தால் அவ்வதிகாரிகள்
பரவசமடைந்து அவரை வெளி உலகிற்கு அடையாளம் காட்டினர்.
இன்று
ஜாதவ் பேயங் இந்திய முகங்களில் ஒருவர். அவரது பால்ய வயதுகளுக்குப் பிறகு
பார்த்தேயிராத பல்லாஸ் மீன் கழுகு போன்ற பறவை இனங்களை இன்று அவரது 53
வயதில் தனது வனத்தில்
பார்த்துப் பரவசமடைகிறார்.
(நான்கூட எனது பால்ய வயதில் பார்த்த செம்போத்து போன்ற பறவையினங்களை தற்போது காண முடியாதது கொடுமைதான்)
டெல்லியிலமைந்த
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பேயன்கின் செயலை பாராட்டி அவரை ‘THE
FOREST MAN OF ASSAM’ எனப் போற்றுகிறது. இன்று அரசின் CHIEF
CONSERVATOR OF FORESTS (CCF) மேலும் 600 ஹெக்டேர்
நிலத்தை அவரது பொறுப்பில் கொடுத்து அவரமைத்த வனத்தோடு சேர்த்து வனங்களை உருவாக்க அவரை கேட்டுக்கொண்டுள்ளது.
மழைக்காடுகளை வளர்க்காவிட்டால் ‘இமயமலையிலமைந்த
பனி உருகிய பிறகு நமது நீராதாரங்கள் என்ன ஆகும்? நீராதாரங்களை நம்பியுள்ள மனிதனின்
நிலை என்னவாகும் என எண்ணிப் பாருங்கள்? ‘
என வினாக்களை எழுப்புகிறார் இந்த எளிய
மனிதர். அவரது இந்தச் சிந்தனைகளைத்தான் அவர் கல்லூரி சென்றிருந்தாலும் ‘global
warming’ என்ற பெயரில் கற்றிருப்பார்.
இவரைப்பற்றி
அறிய வந்தபோது எனது முகநூலில் (facebook) கடந்த
வருடம் ‘அன்னை பூமியின் அருந்தவப் புதல்வன்’ எனத் தலைப்பிட்டு தகவல்களைப்
பகிர்ந்திருந்தேன்.
திரு.ஜாதவ்
பேயங் பற்றிய மேலதிகத் தகவல்களை இங்கு சொடுக்கி தெரிந்து கொள்ளலாம்.
அவர் பற்றிய விக்கிபீடியா இணைப்புக்கு இங்கு சொடுக்குங்கள்.
நான் சென்ற பதிவில் கூறியபடி நக்ஷத்திர விருக்ஷங்கள்
அந்தந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் மீது தாக்கங்களை ஏற்படுத்துவது எவ்வளவு
உண்மையோ அதைவிட அந்தந்த நக்ஷத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள் மீது தெளிவான
தாக்கங்களை ஏற்படுத்துவதும் முழு உண்மை.நக்ஷத்திரங்களின் வேறுபட்ட பாதங்களில் பிறந்தவர்களிடையே வேறுபட்ட குணாதிசயங்கள் அமைந்திருக்கும் . இதனை ஜாதகத்தில் அம்ச சக்கரத்தைக் கொண்டு தெளிவாக அறியலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் பார்க்கப்படும் திருமண பொருத்தத்தில் பொருந்தக்கூடிய நக்ஷத்திரத்தின் ஒரு பாதம் மற்றொரு பாதமானால் பொருந்தாது என இந்தகைய குணாதிசய வேறுபாடுகளால்தான் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
எனவே இங்கு குறிப்படப்பட்டுள்ள இந்த விருக்ஷங்களில் அவரவர்களுக்குப் பொருந்தும் விருக்ஷங்களைத் தேர்ந்தெடுத்து நட்டுப் பராமரித்து உங்களது சிரமங்களிலிருந்து விடுபடு வேண்டுகிறேன். இந்தப் பூமி செழிக்க உங்களது பங்கையும் அளிக்கக் வேண்டுகிறேன்.
எனவே இங்கு குறிப்படப்பட்டுள்ள இந்த விருக்ஷங்களில் அவரவர்களுக்குப் பொருந்தும் விருக்ஷங்களைத் தேர்ந்தெடுத்து நட்டுப் பராமரித்து உங்களது சிரமங்களிலிருந்து விடுபடு வேண்டுகிறேன். இந்தப் பூமி செழிக்க உங்களது பங்கையும் அளிக்கக் வேண்டுகிறேன்.
நக்ஷத்ர விருட்சங்கள்
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
ரோகிணி - நாவல்
மிருகசீரிஷம் -
கருங்காலி
திருவாதிரை -
செங்கருங்காலி
புனர்பூசம் -
மூங்கில்
பூசம் -
அரசு
ஆயில்யம் -
புன்னை
மகம் -
ஆல்
பூரம் -
பலாசம்
உத்திரம் -
ஆத்தி
ஹஸ்தம் -
அத்தி
சித்திரை -
வில்வம்
சுவாதி -
மருது
விசாகம் -
விளா
அனுஷம் -
மகிழ்
கேட்டை -
பிராய்
மூலம் -
மரா
பூராடம் -
வஞ்சி
உத்திராடம் -
பலா
திருவோணம் -
எருக்கு
அவிட்டம் -
வன்னி
சதயம் -
கடம்பு
பூரட்டாதி -தேவா
உத்திரட்டாதி -
வேம்பு
ரேவதி - இலுப்பை
நக்ஷத்ர விருட்சங்கள் (பாத வாரியாக)
அஸ்வினி
1 ம் பாதம் - எட்டி
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் – நண்டாஞ்சு
1 ம் பாதம் - எட்டி
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் – நண்டாஞ்சு
பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை
கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை
ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் – நாகலிங்கம்
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் – நாகலிங்கம்
மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு
திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் – வெள்ளெருக்கு
புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் – நெல்லி
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் – நெல்லி
பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி
ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் – பலா
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் – பலா
மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் – பவளமல்லி
பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் – புத்திரசீவி
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் – புத்திரசீவி
சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி
சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை
விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் – தூங்குமூஞ்சி
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் – தூங்குமூஞ்சி
அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் – தேக்கு
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் – தேக்கு
கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் – வேம்பு
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் – வேம்பு
மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் – ஆச்சா
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் – ஆச்சா
பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் – எலுமிச்சை
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் – எலுமிச்சை
உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் – தாளை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் – தாளை
திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் – பாக்கு
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் – பாக்கு
அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் – ஜாதிக்காய்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் – ஜாதிக்காய்
சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் – திலகமரம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் – திலகமரம்
பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் – கன்னிமந்தாரை
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் – கன்னிமந்தாரை
உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் – செம்மரம்
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் – செம்மரம்
ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா ரேவதி
60 தமிழ் வருஷங்களுக்கான வருஷாதி விருக்ஷங்கள்
மற்றும் விருக்ஷங்களை இலவசமாகவே பெறுவதற்கான வழிவகைகள் உட்பட மேலும் பல தகவல்களை அடுத்த பதிவில் கூறுகிறேன்.
வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.
No comments:
Post a Comment