02.11.14 அன்று சனிப்பெயர்ச்சி. இந்த சனிப்பெயர்ச்சி நமது தனிப்பட்ட வாழ்வில்
எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எண்ணற்ற வலைப்பூவினரும் பத்திரிகைகளும்
எழுதி வருகின்றனர்.நமது வாழ்வின் நிம்மதியானது நமது தேசம்
மற்றும் உலகின் போக்கு ஆகியவற்றை சார்ந்தே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
எனவே அதனடிப்படையில் இந்தச் சனிப் பெயர்ச்சியில் நமது தேசத்திலும் உலகிலும்
ஏற்படவிருக்கும் மாற்றங்களைக் இங்கு ஆராய்வோம். அரசியல் ஜோதிடம் என்ற கோணத்தில்
நமது பண்டைய ஜோதிட நூல்களை ஆதாரமாகக் கொண்டு எனது கணிப்புகளை இங்கு பதிவிடுகிறேன்.
ராசிக்குப் பத்தில் நான்கு கிரகச் சேர்க்கை. சந்நியாசி
யோகம். பி.ஜே.பி பிரதமர்களும் கட்சித் தலைவர்களும் குடும்பமில்லாதவர்களாக
இருப்பதன் காரணம் புரிகிறதா.
ஒரு முட்டாள் மாணவன்.
அவனுக்கு படிப்பே வராது. ஆனால் அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து தேர்வாகாமல்
யாரும் வெளியேற முடியாது. மாணவன் ஆசிரியர்களைக் கிண்டலடிப்பான். பாடத்தை
கவனிக்காமல் உறங்குவான். அதனால் அணைத்து ஆசிரியப் பெருமக்களும் மாணவனைத் தேற்ற
முடியாது எனும் சூழ்நிலையில் இவனைத் தேற்றுவது உனது பணி என ஒரு ஆசிரியரிடம் அந்த
மாணவனை ஒப்படைக்கின்றனர். ஆசிரியர் எப்படி என்றால் பாடங்களைக் கவனிக்காவிட்டால் பட்டினி
போட்டுவிடுவார். அதையும் மீறி படிப்பில் நாட்டம்
செலுத்தவிட்டால் கொன்றே போட்டுவிடுவார். அதனால் அணைவரும் அவரிடம் நடுங்குவர்.
நன்றாகப் படிக்கும் மாணவனானாலும் லொள்ளு பண்ணக் கூடாது. முதுகெலும்பை முறித்து
விடுவார். ஆசிரியர் இரண்டு பாடப்பிரிவுகளில் வல்லவர். இப்போது அணைத்து பாடங்களையும்
எடுத்து மாணவனைத் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.
அந்தப் பள்ளியின் பெயர் “வாழ்க்கை”
அந்த ஆசிரியரின் பெயர் சனீஸ்வரன்.
அவரது விசேஷமான இரு பாடப்பிரிவுகள் ஆயுள் மற்றும் ஜீவனம்.
அணைவரையும் விட தகுதியில் ஒரு படி உயர்ந்தவர். அந்தத் தகுதி தனக்கு நிகரானவன் என்ற மதிப்பில் பரமேஸ்வரனால் “ஈஸ்வரப்பட்டம்”. வழங்கப்பெற்ற ஒரே கிரகம்.
.
உலகில் யாவரும் கைவிட்டு விட்ட நிலையிலும் தனித்து இயங்கி தன்னை
முன்னிலைப்படுத்தும் தகுதி சனி பகவான் ஜாதகத்தில் நன்கு அமைந்தவர்களுக்கு ஏற்படும்.
இத்தகைய ஜாதக அமைப்பினர் இளம் வயதிலேயே சோதனைகளை சந்தித்தவர்களாக இருப்பர். கல்வியோடு
சிறுவயது முதல் வாழ்க்கையையும் படித்திருப்பர்.
மற்றோர் வகை முட்டாள் மாணவாகள். இவர்களுக்கு ஜாதகத்தில் சனி ஜனன காலத்தில் தோஷப்பட்டிருக்கும்.
சனி ஜாதகத்தில் எந்த பாவத்தில் தோஷப்பட்டிருக்கிறதோ அல்லது சனி எந்த பாவத்தை
பார்க்கிறாரோ அந்த பாவங்கள் பாதிப்படையும். குறிப்பிட்ட திசா புதிகளில்
கோட்சார சனி சாதகமான இடத்திற்கு வரும்வரை இவர்கள் சனி பகவான் எடுக்கும் பாடங்களைப்
படிக்க வேண்டியதுதான். படிக்காவிட்டால் பாவங்களுக்கான பாக்கியங்களை அடையவே
முடியாது என்பதே உண்மை.
ஜோதிடத்தில் ஜாதக அரசவை என்றொரு வகைப்பாடு
உண்டு. அதில் ராஜா-சூரியன், ராணி-சந்திரன், செவ்வாய்-சேனாதிபதி, புதன் – இளவரசன்,
குரு & சுக்கிரன் – நிதி மற்றும் வெளியுறவு, சனி – பாதுகாப்பு, ராகு-கேதுக்கள்
அந்நியர்கள் மற்றும் எதிரிகள். (இதில் விசேஷமாக ராகுவை இஸ்லாமியர்களாகவும் கேதுவை
கிறிஸ்தவர்களாகவும் ஜோதிடம் வகைப்படுத்துகிறது.)
பாதுகாப்புத் துறைக்கு காரகம் பெற்ற சனிபகவான் தனது உச்ச வீட்டிலிருந்து
சேனாதிபதியும் பகைவனுமான செவ்வாயின் விருச்சிக ராசிக்கு 02.11.14 அன்று பெயர்ச்சியாகிறார். வாக்கியப் பஞ்சாங்கப்படி 16.12.2014 ல் பெயர்ச்சி.அடுத்த 2 ½ ஆண்டுகளுக்கு சனி விருச்சிகத்தில் இருப்பார். செவ்வாயின் வீட்டிலிருக்கும் சனி
செவ்வாயின் குணத்தை ஒட்டியே (அதாவது தனது சுபாவத்திற்கு மாறுபட்ட விரைவான) நிகழ்வுகளையே
வழங்குவார். இந்த 2 ½ ஆண்டு காலத்தில் குருவானவர் தற்போதிருக்கும் கடக ராசியிலும் பிறகு முதன்மைக்கிரகமும் ராஜ கிரகமான சூரியனின் சிம்ம ராசியிலும் பிறகு
புதனின் கன்னி ராசியிலும் சஞ்சரிப்பார். இதில் சிம்மத்தில் ராகுவுடன் குரு சேரக்கை
இந்த சனிப்பெயர்ச்சி காலத்திலேயே ஏற்படும் என்பது முக்கியமான பல விஷயங்களை
உணர்த்துகிறது என்பதன் அடிப்படையில் இந்த சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம்
பெறுகிறது.
தமிழ்நாடு:
சூரியனின் சிம்ம ராசிக்கு சுகஸ்தானமான 4 ஆமிடத்திற்கு பெயர்ச்சியாகி வரும் சனி சிம்ம
ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக வருகிறது. குருப்பெயர்ச்சி பதிவிலேயே முதலமைச்சர் ஜெயலலிதா பதவியை
இழக்கும் வாய்ப்புள்ளதை குறிப்பிட்டிருந்தேன். ஜெயலலிதா தனது வழக்குகளில் இருந்து மீண்டுவருவார்.
ஆனால் அடுத்த இரண்டரை வருடங்கள் அவருக்கு கடினமானதாக இருக்கும். அதன் பிறகு அவர்
பி.ஜே.பியையும் காங்கிரஸ்சையுமே எதிர்க்க வேண்டியதிருக்கும். இந்தச்
சனிப்பெயர்ச்சியில் தமிழக மக்கள் தவறான அரசியல்வாதிகளை புரந்தள்ளுவார்கள். பி.ஜே.பி
நேரடியாகவும் காங்கிரஸ் மறைமுகமாகவும் வளர்ச்சிபெறும். இவ்விரு கட்சிகளும் தமிழகம்
மட்டுமல்ல இந்தியா முழுமையிலும் உள்ள ஜாதீய மதவாத சக்திகளை வளரவிடாமல்
கட்டுப்படுத்தும். ஆனால் சில அவசியம் கருதி இவை முழுமையாக அழிக்கப்படாது. தமிழக
அரசியல் சூழ்நிலையில் அடுத்த 2 1/2 ஆண்டுகள் மக்களைப்பொறுத்தவரை
முக்கியமான கால கட்டமாகும்.இலங்கையை மையப்படுத்தி தங்களால் இனி பிழைப்பு நடத்த இயலாது என்பதை தமிழக அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்வார்கள். பி.ஜே.பி ஜோதிட அடிப்படையில் பெண் தலைவரை தமிழகத்திற்கு நியமித்துள்ளதை அறிய
முடிகிறது.
இந்தியா:
இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து இனிவரும் கால கட்டம்தான்
அதுவும் அடுத்த பத்தாண்டுகள் மிக முக்கியமானவை. எதிரி நாடுகள் பி.ஜே.பியும்
காங்கிரசும் இணைந்து செயல்படுவதைக் கண்டு திகைப்பார்கள். பி.ஜே.பி நேரடியாகவும்
காங்கிரஸ் மறைமுகமாகவும் தேச ஒற்றுமையில் இணைந்து செயல்படும். இலங்கை, பங்களாதேஷ்
உள்ளிட்ட நேச நாடுகள் இந்தியாவால் முழுமையாக பாதுகாக்கப்படும்.பாதுகாப்பு, தகவல்
தொடர்பு அமைப்புகள் நவீன மயமாகும். கூகுல் போன்ற இணைய அமைப்புகளைப் பயன்படுத்தி
இந்தியாவை கண்காணிக்கும் அமெரிக்காவின் ஜம்பம் இனி பலிக்காது. இந்தியாவிலேயே அதற்கான
அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை அடுத்த சில ஆண்டுகளில்
பயன்பாட்டுக்கு வரும். மேற்கு வங்கம், திரிபுரா, நாகலாந்து மற்றும் கேரளாவின் சில
பகுதிகள் இந்திய ஜாதகத்தில் செவ்வாயின் அம்சங்களாக அரசியல் ஜோதிட ஆராய்ச்சியாளர்களால்
வகைப்படுத்தப்படுகின்றன. இப்பகுதிகள் தீவிரவாத பாதிப்பு உள்ளாகும். எனினும் இவை
எளிதாகக் கட்டுப்படுத்தப்படும். பிரதமர் மோடியின் செயல்பாடு இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்லும். இந்தியாவிற்கு தற்போது நடக்கும் சூரிய திசை முடிந்து 2015 மத்தியில் ராசியாதிபதி சந்திரனின் திசை துவங்குவது மற்றும் கோட்சார நிலைகள் இந்தியாவிற்கு வளமான எதிர்காலத்தை அளிக்க உள்ளன.
உலகம்:
ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளைப் பயன்படுத்தி இதியாவையும்
அதன் நேச நாடுகளையும் இனியும் கட்டுப்படுத்த இயலாது என்பதை தெளிவாக மேலை நாடுகள்
புரிந்துகொள்ளும்.ஆனால் இனி வரும் காலங்களில் வீட்டோ அதிகாரத்தைவிட இந்தியாவின்
அனுமதி உலக நடப்புகளுக்கு முக்கியம் என்ற நிலை ஏற்படும்.பாகிஸ்தானின் மறைமுகப்
போர் இந்தியாவின் நேரடிப் போரால் முடிவுக்கு வரும். பாகிஸ்தானின் சுதந்திர ஜாதகத்தில் சுக்கிர திசையில் கடந்த ஜூலை மாதம் துவங்கிய சனி புக்தி இதை உறுதி செய்கிறது. பாகிஸ்தானின் சிம்ம லக்னத்திற்கு 12 ஆவது பாவத்தில் சனி உள்ளதை கவனியுங்கள். 12 ஆம் இடம் இழப்பு, தண்டனை போன்றவற்றைக் குறிக்கும் அதோடு 12 ல் இருந்து தனது புக்தியை நடத்தும் சனி தண்டனையை வழங்கியே தீரும்.(இது போன்ற கோணத்தில்தான் ஜெயலலிதாவின் ஜனன ஜாதகத்தில் ராசிக்கு 12 ல் இருந்து துவங்கிய சனி புக்தியும் கோட்சார சனியும் பதவி இழப்பை ஏற்ப்படுத்தும் எனக் கணித்து குருப்பெயர்ச்சி பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.) அதனால் பாகிஸ்தான் சிதைவுறும். ஒரு
தீவிரவாத அமைப்பை நம்பி தங்கள் வாழ்வை தொலைத்துவிட்டு பாதுகாப்பான வாழ்விடம் தேடி உலகெங்கும்
அலையும் ஈழத்தமிழர்களின் நிலை பாகிஸ்தானிய மக்களுக்கு ஏற்படும். பாகிஸ்தான் சிதைவுருவதால்
அதன் மக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு மற்றுமன்றி இந்திய, சீனா, பங்களாதேஷ்
போன்றவற்றிற்கு புலம்பெயர முனைவர். இந்தியா இவற்றைக் கட்டுப்படுத்த மிகவும்
மெனக்கெடும். இதன் பாதிப்பு மேலைநாடுகளிலும் சீனாவிலும் கடுமையாக இருக்கும். இந்தியாவில்
பாகிஸ்தானால் ஏற்பட்ட கடந்தகால பாதிப்புகளைக் கண்டு பெயருக்கு அனுதாபப்பட்ட மேலை
நாடுகள் தற்போது தங்கள் நாடுகளில் ஏற்படும் குண்டுவெடிப்புகலைக் கட்டுப்படுத்த
இந்தியாவின் அனுபவத்தைக் கேட்டுக் கெஞ்சும். உலக நன்மையின் பொருட்டு இந்தியா அவசியமான சில தகவல்களை மட்டும் அளிக்கும்.
சீனாவில்
வளர்ந்துவாரும் இஸ்லாமியத் தீவிரவாதத்தால் அந்நாடு கடுமையாக பாதிக்கப்படும்.குண்டுவெடிப்புகளைக்
கட்டுப்படுத்த வழிதெரியாமல் விழிக்கும் நிலை சீனாவிற்கு ஏற்படும் என்றாலும் செவ்வாயின்
அம்சமாக உலக அரசியல் ஜோதிடத்தில் மதிப்பிடப்படும் சீனா கொடூரமான முறைகளையும்
கொண்டு தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும். ஆனால் முழுமையாக அழிக்க முடியாமல் அரசியல்
ராஜதந்திர நடைமுறைகளையும் செயல்படுத்தும். இதன் பாதிப்பால் சீன பாகிஸ்தான் உறவு
சீர்கெடும். இந்தியா உதைக்குபோது உதவிக்கு அமெரிக்காவும் சீனாவும் வராததைக் கண்டு
பாகிஸ்தான் பாடம் கற்கும்.
ரஷ்யா, இந்தியா, சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்காவால்
பாகிஸ்தானில் வைக்கப்பட்ட தீவிரவாதம் என்ற நெருப்பு இப்போது தன்னையே எரிப்பதைக்
கண்டு தீவிரவாதத்திற்கு எதிராக முழுமையான நேரடிப்போரில் அமெரிக்கா இறங்கும். மகாகவி காளிதாசரின் உத்திர காலாமிர்தம் மற்றும் சாராவளி ஜோதிட நூல்களின் குறிப்புகளின்படி தனுசு ராசியாக மதிப்பிடப்படும் பாரசீக வலைகுடாவிற்கு தற்போது ஏழரைச் சனி துவங்கியுள்ளது. அமெரிக்கா
தனது படைப்பிரிவின் முக்கிய அணியை வளைகுடாப் பகுதியில் நிலைநிறுத்தும். இஸ்லாமியத்
தீவிரவாதத்தை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் கடுமையான தாக்குதல் மூலம் அழிக்கும்.
இந்தியாவையும் ரஷ்யா, சீனாவையும் தங்களுடன் இணைந்து செயல்பட மேலை நாடுகள் அழைக்கும்.
அமெரிக்கா மற்றும் அதன் சார்பு நாடுகளுடனான மறைமுக தீவிரவாதத்தால் தாங்கள் கடந்த காலங்களில்
பாதிக்கப்பட்டதை மறவாது என்பதால் போரில் பங்கேற்காது. ஆலோசனைகளை மட்டுமே வழங்கும்.
இந்தியா தனது செயற்கைக் கோள் மற்றும் உளவுத் தகவல்களை மட்டுமே அளிக்கும்.
ஆப்பிரிக்கத் தீவிரவாதம் அழிக்கப்படும். ஐ.நா அமைப்பு
ஆப்பிரிக்கா தொடர்பாக முக்கிய பங்காற்றும். மேலைநாடுகளின் கனிவான பார்வை. ஆப்பிரிக்க
மக்களுக்கு தற்போது கிடைக்கும். அங்கு மக்களின் பாதுகாப்பிற்க்கான ஐ.நா வின் படை
நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்யப்படும்.இந்தியாவின் பங்கு அதில் முக்கியமாக
இருக்கும்.
மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.
அன்பன்,
பழனியப்பன்.
No comments:
Post a Comment