Sunday 30 November 2014

திசா-புக்தி நுட்பங்கள்

திசா-புக்தி நுட்பங்கள் - பகுதி 2.

ஒரு கிரகத்தின் திசை எவ்விதம் இருக்கும் என்பதை பல்வேறு ஜாதக காரணிகளைக் கொண்டு மதிப்பிடவேண்டும். இன்றைய பதிவில் அவற்றுள் ஒரு காரணியான ஒரு கிரகத்திற்கும் அதன் வீட்டிற்குமான தொடர்புகளைக் கொண்டு ஆராய்வோம்.


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.




ஜாதகத்திற்கு உரியவர் ஒரு ஆண். 

சித்திரை மாதத்தில் பிறந்தவரின் ஜாதகத்தில் சூரியன் உச்சம். தனுசு லக்ன  ஜாதகருக்கு  பாக்யாதிபதி சூரியன் உச்சமானது சிறப்பு. சூரியனுடன் சுபக்கிரகங்களான சந்திரனும் புதனும் இணைந்தது மிகச்சிறப்பு. அவை இரண்டும் சூரியனுக்கு நட்புக் கிரகங்கள் என்பது கூடுதல் சிறப்பு. இக்காரணங்களால் ஜாதகருக்கு சூரிய திசை மிகச் சிறப்பாக இருக்கும் என ஜோதிடர்களால் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சூரிய திசை இறுதி வரையுமே ஜாதகர் எவ்வித நற்பலன்களையும் அடையவில்லை. சராசரியான பலன்களையே அடைந்தார். சூரிய திசை தனித்து ஆளுமையுடன் இயங்கவைக்கும் திசை. ஆனால் ஜாதகர் சூரிய திசையில் சுய தொழிலில் தோல்வியடைந்தார். அடிமை சேவகம் செய்தார்.

என்ன காரணம்?

காரணம் ஒரு கிரகத்தினது செயல்பாடுகளை அக்கிரகம் அமர்ந்த பாவாதிபதி கிரகமும்  அக்கிரகத்திற்கு  4 மற்றும் 8 ஆமிடத்தில் நிற்கும் கிரகமும் முதன்மையாகக் கட்டுப்படுத்தும். அதோடு அக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்த கிரகங்களும் கட்டுப்படுத்தும்.

மேற்கண்ட ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றுள்ளது. மேலும் சூரியனது வீடு பாக்யஸ்தானமாக வந்து அங்கு லக்னாதிபதி குருவும் செவ்வாயுடன் இணைந்துள்ளார். குருவிற்கு 1, 5 மற்றும் 9 ஆமிடங்களில் வலு அதிகம் அதோடு குரு செவ்வாய் இணைவு குரு-மங்கள யோகத்தையும் கொடுத்திருக்கிறது. 

ஆனால் இவை அணைத்தையும் குரு செவ்வாயுடன் இணைந்த சனியும் ராகுவும் கெடுத்துவிட்டார்கள்.

சனி சர ராசியான மேஷ ராசிக்கு பாதகாதிபதி என்பதோடு லக்னாதிபதிக்கு குருவிற்கு சனி சம கிரகம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ராகுவானவர் சனியைப்போல் பலனளிப்பவர் என்பதோடு கூட்டுக் கிரகச் சேர்க்கையில் ராகு-கேதுக்களே வலிமையானவர்கள் என்ற விதி இங்கு கவனிக்கத்தக்கது.

ஜாதகரின் தந்தையும் சாதாரண நிலையில் வாழ்பவர்தான் என்பதையும் இக்காரனங்களிலிருந்து உணரலாம்.

ஒரு கிரகத்தினது சுய பாவம் (வீடு) கெட்டுவிட்டால் அக்கிரகம் ஆட்சி, உச்சம், நட்பு, பரிவர்த்தனை போன்ற  வலுவான நிலைகளில் இருந்தாலும் அதன் திசாபுக்திகளில் சிறப்பாகச் செயல்படாது என்பது திசா-புக்திகளின் செயல்பாடுகளை அளவிடுதலில் முக்கியமான விதி.

ஜோதிட அன்பர்கள் இவ்விதியை முக்கியமாகக் கவனத்தில் கொண்டு திசா-புக்தி பலன்களை அளவிடவேண்டும்.


மற்றுமொறு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.

3 comments:

  1. மற்றுமொரு அருமையான பதிவு

    (a) பிரசன்ன ஜோதிட முறை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். எனக்கு தெரிந்து வலைப்பூவில் யாரும் பிரசன்ன முறை பற்றி எழுதவில்லை
    (b) முடிந்த அளவு ஜோதிட விதிகளுக்கான காரணங்களையும் எழுதினால் நன்றாக இருக்கும்

    நன்றி
    சதீஷ் குமார்

    ReplyDelete