ஒருவர்
மருத்துவத்துறையில் சேர்ந்து சாதிக்க வேண்டுமென்றால் மருத்துவத்தோடு தொடர்புடைய
கீழ்க்கண்ட கிரகங்கள் வலுவாக ஜாதகத்தில் அமைந்திருக்கவேண்டும்.
1.மருத்துவம் மற்றும் மருந்துக்களுக்கு காரக கிரகமான புதன்.
2.ஆரோக்கியத்திற்குரிய கிரகம் (தன்வந்திரி என போற்றப்படும்) சூரியன். (ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்பது ஜோதிடப் பழமொழி.)
3.இரத்தம், அறுவைச் சிகிச்சை இவற்றிற்கு காரகத்துவம் பெற்ற செவ்வாய்.
4.கேதுவை மருத்துவக் கார கிரகம் என்று ஜோதிடம் போற்றுகிறது.
5.ராகு மேற்கண்ட மருத்துவக் கிரகங்களுடன் தொடர்புகொள்ளும்போது அத்துறையில் தீவிரமான
ஈடுபாடுகொள்ள வைக்கிறது.
லக்னமே சூரியனது லக்னமாக அமைந்தது சிறப்பு. தன வரவுக்குரிய 2 ஆவது பாவத்தில்
உச்ச புதனுடன் சூரியன் கூடி புத-ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். இது மருத்துவம்
மூலமாகத்தான் தனவரவு என்பதை உறுதி செய்கிறது. அறுவைச் சிகிச்சையைக் குறிக்கும்
செவ்வாய் உச்சம். ஒரு இடத்தில் செவ்வாயும் ராகுவும் கூடினால் அங்கு இரு
கிரகங்களுமே வலுவடையும் என்பது ஜோதிட விதி. இந்த ஜாதகத்தில் ராகு செவ்வாயை
தூண்டுகிறார். நவாம்சத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியே லக்னமாக அமைந்து 10
ஆமிடமான சிம்மத்தில் சூரியன், புதன், செவ்வாயும் இணைந்து இருப்பது
ஜாதகர் மருத்துவத்தொழில் புரிவார் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.
தொழில்
தொடர்பாக விளக்கமாக ஆராய தசாம்சத்தை ஆராய்வது கூடுதல் தெளிவைத் தரும். தசாம்சத்தில்
லக்னத்திற்கு இரண்டில் ஜீவன காரகன் சனி பகவான் லக்னாதிபதி செவ்வாயுடன் இணைந்து
உள்ளார். (சனி-செவ்வாய் 2,3,6,9,10,11 ல் இணைந்திருப்பது கடுமையான தோஷமல்ல). ஐந்தாமிடத்தில்
உள்ள கேது ஜாதகரது மருத்துவத் தொழில் ரீதியான ஈடுபாட்டை குறிப்பிடுகிறது.
தசாம்சத்தில் பத்தாமிடத்தில் மருத்துவ காரகன் புதனே வீற்றிருப்பது ஜாதகர்
மருத்துவத்தோடு தொடர்பு கொள்வார் என்பதை குறிப்பிடுகிறது.
லக்னமே
புதனின் லக்னம். தனவரவை குறிப்பிடும் இரண்டாமிடத்தில் செவ்வாய் பகவான் சனியுடன்
சேர்க்கை. சந்திரன் உச்சமானதால் செவ்வாய் நீச பங்கம் பெறுகிறார். தனவரவு
மருத்துவம் சார்ந்தது என்பது இதன் பொருள். ஐந்தாமிடமான சிந்தனை ஸ்தானத்தில் உள்ள
சூரியனும் புதனும் ஜாதகரது சிந்தனையை மருத்துவத்தில் நிலை கொள்ள வைக்கின்றனர். சூரியன்
உச்சன் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் நின்றதால் நீச பங்கம் பெறுகிறார்.
தசாம்சத்தில்
தன வரவைக் குறிக்கும் 2 ஆமிடத்தில் தன்வந்திரியான சூரியன் உள்ளார். மருத்துவத்தின்
மூலம் தன வரவு என்பதுடன் அரசாங்கத்தின் மூலம் தன வரவு என்பதையும் இது
குறிப்பிடுகிறது. புதன் ஐந்தாமிடத்தில் இருந்து ஜாதகரின் சிந்தனையை மருத்துவம்
நோக்கி திருப்பிவிடுகிறார். தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் செவ்வாய் ஆட்சியில்
உள்ளது ஜாதகரின் தொழில் மருத்துவம் என்பதை உறுதி செய்கிறது.
ஜாதகர்
அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற புகழ்பெற்ற மருத்துவர். எலும்புக்கு
காரகத்துவம் பெற்ற சூரியன் வலுவிழந்து எலும்பு மஜ்ஜை மற்றும் கால்களுக்கு
காரகத்துவம் பெற்ற செவ்வாயும் வலுவிழந்து சனியுடன் சேர்ந்து தோஷப்பட்டதால்
மருத்துவரான ஜாதகர் உடல் ஊனமுற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜாதகி
கண் மருத்துவத்தில் உயர் கல்வியான கண்ணொளியியல் (MS OPTHOLMOLOGY)
பயின்றுகொண்டிருக்கும் மாணவி.
லக்னத்தில்
மருத்துவக் கிரகங்களுள் முதன்மையான சூரியன் உள்ளார். ஜாதகர் மருத்துவத்தோடு
தொடர்புபடுவதை இது குறிப்பிடுகிறது. சூரியனைத் தவிர்த்து இதர மூன்று
மருத்துவக்கிரகங்களும் தன வரவைக் குறிக்கும்
இரண்டாமிடத்தில் சுக்கிரனுடன் உள்ளனர். தனவரவு மருத்துவத்தின் மூலம்
வரவேண்டும் என்பதை இது குறிப்பிடுகிறது.சூரியன்
கண்களைக் குறிக்கும் கிரகமாக நேந்திர காரகன் என்று போற்றப்படுபவர். உப
நேந்திர காரகனாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுபவர் சுக்கிரன் ஆவார். ஜாதகத்தில்
லக்னத்திற்கு 2 ஆமிடம் கண்களைக் குறிக்கும் பாவமாகும். குறிப்பாக வலது கண்ணை
குறிப்பிடும் பாவமாகும். 12 ஆமிடம் இடது கண்ணைக் குறிப்பிடும்.
நேந்திர
காரகன் சூரியன் லக்னத்தில் மருத்துவ காரகன் புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில்
உள்ளார். உப நேந்திர காரகன் எனப்படும் சுக்கிரன் நேந்திர ஸ்தானமான இரண்டாமிடத்தில்
மருத்துவக் கிரகங்களோடு உள்ளார்.
தசாம்சத்திலும் லக்னம் மற்றும் தன ஸ்தானத்திலும் மருத்துவக்கிரகங்கள்
நின்றது ஜாதகர் மருத்துவர் என்பதையும் மருத்துவத்தின் மூலம் தன வரவு ஏற்படும்
என்பதையும் குறிப்பிடுகிறது.
கீழே நான்காவது ஜாதகம்
ஜாதகர் பல் மருத்துவர்.
புதன்,
செவ்வாய் ஆகிய இரு மருத்துவக் கிரகங்கள் உச்சம். உச்ச புதனுடன் மற்றொரு
மருத்துவக்கிரகம் சூரியன் இணைவு மிகச் சிறப்பு. தசாம்சத்திலும் சூரியனின் சிம்மமே லக்னமாக அமைந்து லக்னத்திலும் இரண்டாமிடத்திலும்
மருத்துவக் கிரகங்கள் நின்றது மற்றும் லக்னாதிபதி சூரியனுக்கு செவ்வாயின் பார்வை
ஆகியவை ஜாதகர் மருத்துவத்துறையோடு தொடர்புகொள்வார் என்பதைக் குறிக்கிறது.
சரி
ஜாதகரை பல் மருத்துவத்தோடு தொடர்பு பெறக் காரணம் என்ன?
ஜோதிடத்தில்
பற்களைக் குறிக்கும் கிரகம் சூரியன் ஆவார். வெண்மை நிறத்தோடு தொடர்பு பெறும்
கிரகங்கள் சந்திரனும் சுக்கிரனும் ஆவர்.
மேற்கண்ட
ஜாதகத்தில் செவ்வாய் சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்திலும் சூரியனும் புதனும்
சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்திலும் கேது சந்திரனின் வீட்டில் புதனின் ஆயில்ய நட்சத்திரத்திலும்
நின்றது மற்றும் புதன் சூரியனோடு சுக்கிரன் இணைந்தது ஜாதகரை பல்மருத்துவத்தில் ஈடுபடுத்தியது என்றால் அது மிகையல்ல.
இவ்வாறு
ஜாதகங்களை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினால் ஒருவர் எத்துறையில் ஈடுபடுவார் என்பதை
ஜோதிடத்தால் துல்லியமாக விளக்க இயலும்.
பள்ளி
இறுதித் தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில்
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும் உயர்கல்வியை தேர்வுசெய்யுமுன் ஜோதிடத்தின்
உதவியை நாடுவது பெற்றோர்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். நம் முன்னோர்கள் அருளிய
அறிய வழிகாட்டியாம் ஜோதிடம் இது விஷயத்தில் வழிகாட்டி உதவும் என்பது உறுதி.
அடுத்த
பதிவும் உயர்கல்வி பற்றியதே.
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
அலை பேசி: 7871244501.
அலை பேசி: 7871244501.