Sunday 26 April 2015

மருத்துவக் கல்வி பயில வைக்கும் ஜாதக அமைப்பு.

ஒருவர் மருத்துவத்துறையில் சேர்ந்து சாதிக்க வேண்டுமென்றால் மருத்துவத்தோடு தொடர்புடைய கீழ்க்கண்ட கிரகங்கள் வலுவாக ஜாதகத்தில் அமைந்திருக்கவேண்டும்.

1.மருத்துவம் மற்றும் மருந்துக்களுக்கு காரக கிரகமான புதன்.

2.ஆரோக்கியத்திற்குரிய கிரகம் (தன்வந்திரி என போற்றப்படும்) சூரியன்.      (ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்பது ஜோதிடப் பழமொழி.)

3.இரத்தம், அறுவைச் சிகிச்சை இவற்றிற்கு காரகத்துவம் பெற்ற செவ்வாய்.

4.கேதுவை மருத்துவக் கார கிரகம் என்று ஜோதிடம் போற்றுகிறது.

5.ராகு மேற்கண்ட மருத்துவக் கிரகங்களுடன் தொடர்புகொள்ளும்போது    அத்துறையில்  தீவிரமான ஈடுபாடுகொள்ள வைக்கிறது.

கீழே உதாரண ஜாதகம்




லக்னமே சூரியனது லக்னமாக அமைந்தது சிறப்பு. தன வரவுக்குரிய 2 ஆவது பாவத்தில் உச்ச புதனுடன் சூரியன் கூடி புத-ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். இது மருத்துவம் மூலமாகத்தான் தனவரவு என்பதை உறுதி செய்கிறது. அறுவைச் சிகிச்சையைக் குறிக்கும் செவ்வாய் உச்சம். ஒரு இடத்தில் செவ்வாயும் ராகுவும் கூடினால் அங்கு இரு கிரகங்களுமே வலுவடையும் என்பது ஜோதிட விதி. இந்த ஜாதகத்தில் ராகு செவ்வாயை தூண்டுகிறார். நவாம்சத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியே லக்னமாக அமைந்து 10 ஆமிடமான சிம்மத்தில் சூரியன், புதன், செவ்வாயும் இணைந்து இருப்பது ஜாதகர் மருத்துவத்தொழில் புரிவார் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.

தொழில் தொடர்பாக விளக்கமாக ஆராய தசாம்சத்தை ஆராய்வது கூடுதல் தெளிவைத் தரும். தசாம்சத்தில் லக்னத்திற்கு இரண்டில் ஜீவன காரகன் சனி பகவான் லக்னாதிபதி செவ்வாயுடன் இணைந்து உள்ளார். (சனி-செவ்வாய் 2,3,6,9,10,11 ல் இணைந்திருப்பது கடுமையான தோஷமல்ல). ஐந்தாமிடத்தில் உள்ள கேது ஜாதகரது மருத்துவத் தொழில் ரீதியான ஈடுபாட்டை குறிப்பிடுகிறது. தசாம்சத்தில் பத்தாமிடத்தில் மருத்துவ காரகன் புதனே வீற்றிருப்பது ஜாதகர் மருத்துவத்தோடு தொடர்பு கொள்வார் என்பதை குறிப்பிடுகிறது.    


கீழே இரண்டாவது ஜாதகம். 


லக்னமே புதனின் லக்னம். தனவரவை குறிப்பிடும் இரண்டாமிடத்தில் செவ்வாய் பகவான் சனியுடன் சேர்க்கை. சந்திரன் உச்சமானதால் செவ்வாய் நீச பங்கம் பெறுகிறார். தனவரவு மருத்துவம் சார்ந்தது என்பது இதன் பொருள். ஐந்தாமிடமான சிந்தனை ஸ்தானத்தில் உள்ள சூரியனும் புதனும் ஜாதகரது சிந்தனையை மருத்துவத்தில் நிலை கொள்ள வைக்கின்றனர். சூரியன் உச்சன் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் நின்றதால் நீச பங்கம் பெறுகிறார்.

தசாம்சத்தில் தன வரவைக் குறிக்கும் 2 ஆமிடத்தில் தன்வந்திரியான சூரியன் உள்ளார். மருத்துவத்தின் மூலம் தன வரவு என்பதுடன் அரசாங்கத்தின் மூலம் தன வரவு என்பதையும் இது குறிப்பிடுகிறது. புதன் ஐந்தாமிடத்தில் இருந்து ஜாதகரின் சிந்தனையை மருத்துவம் நோக்கி திருப்பிவிடுகிறார். தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் செவ்வாய் ஆட்சியில் உள்ளது ஜாதகரின் தொழில் மருத்துவம் என்பதை உறுதி செய்கிறது.  

ஜாதகர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற புகழ்பெற்ற மருத்துவர். எலும்புக்கு காரகத்துவம் பெற்ற சூரியன் வலுவிழந்து எலும்பு மஜ்ஜை மற்றும் கால்களுக்கு காரகத்துவம் பெற்ற செவ்வாயும் வலுவிழந்து சனியுடன் சேர்ந்து தோஷப்பட்டதால் மருத்துவரான ஜாதகர் உடல் ஊனமுற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது ஜாதகம் கீழே




ஜாதகி கண் மருத்துவத்தில் உயர் கல்வியான கண்ணொளியியல் (MS OPTHOLMOLOGY) பயின்றுகொண்டிருக்கும் மாணவி.

லக்னத்தில் மருத்துவக் கிரகங்களுள் முதன்மையான சூரியன் உள்ளார். ஜாதகர் மருத்துவத்தோடு தொடர்புபடுவதை இது குறிப்பிடுகிறது. சூரியனைத் தவிர்த்து இதர மூன்று மருத்துவக்கிரகங்களும் தன வரவைக் குறிக்கும்  இரண்டாமிடத்தில் சுக்கிரனுடன் உள்ளனர். தனவரவு மருத்துவத்தின் மூலம் வரவேண்டும் என்பதை இது குறிப்பிடுகிறது.சூரியன் கண்களைக் குறிக்கும் கிரகமாக நேந்திர காரகன் என்று போற்றப்படுபவர். உப நேந்திர காரகனாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுபவர் சுக்கிரன் ஆவார். ஜாதகத்தில் லக்னத்திற்கு 2 ஆமிடம் கண்களைக் குறிக்கும் பாவமாகும். குறிப்பாக வலது கண்ணை குறிப்பிடும் பாவமாகும். 12 ஆமிடம் இடது கண்ணைக் குறிப்பிடும்.

நேந்திர காரகன் சூரியன் லக்னத்தில் மருத்துவ காரகன் புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் உள்ளார். உப நேந்திர காரகன் எனப்படும் சுக்கிரன் நேந்திர ஸ்தானமான இரண்டாமிடத்தில் மருத்துவக் கிரகங்களோடு உள்ளார்.

தசாம்சத்திலும் லக்னம் மற்றும் தன ஸ்தானத்திலும் மருத்துவக்கிரகங்கள் நின்றது ஜாதகர் மருத்துவர் என்பதையும் மருத்துவத்தின் மூலம் தன வரவு ஏற்படும் என்பதையும் குறிப்பிடுகிறது.

கீழே நான்காவது ஜாதகம்



ஜாதகர் பல் மருத்துவர்.

புதன், செவ்வாய் ஆகிய இரு மருத்துவக் கிரகங்கள் உச்சம். உச்ச புதனுடன் மற்றொரு மருத்துவக்கிரகம் சூரியன் இணைவு மிகச் சிறப்பு. தசாம்சத்திலும் சூரியனின் சிம்மமே  லக்னமாக அமைந்து லக்னத்திலும் இரண்டாமிடத்திலும் மருத்துவக் கிரகங்கள் நின்றது மற்றும் லக்னாதிபதி சூரியனுக்கு செவ்வாயின் பார்வை ஆகியவை ஜாதகர் மருத்துவத்துறையோடு தொடர்புகொள்வார் என்பதைக் குறிக்கிறது.

சரி ஜாதகரை பல் மருத்துவத்தோடு தொடர்பு பெறக் காரணம் என்ன?

ஜோதிடத்தில் பற்களைக் குறிக்கும் கிரகம் சூரியன் ஆவார். வெண்மை நிறத்தோடு தொடர்பு பெறும் கிரகங்கள் சந்திரனும் சுக்கிரனும் ஆவர்.

மேற்கண்ட ஜாதகத்தில் செவ்வாய் சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்திலும் சூரியனும் புதனும் சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்திலும் கேது சந்திரனின் வீட்டில் புதனின் ஆயில்ய நட்சத்திரத்திலும் நின்றது மற்றும் புதன் சூரியனோடு சுக்கிரன் இணைந்தது ஜாதகரை பல்மருத்துவத்தில் ஈடுபடுத்தியது என்றால் அது மிகையல்ல.

இவ்வாறு ஜாதகங்களை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினால் ஒருவர் எத்துறையில் ஈடுபடுவார் என்பதை ஜோதிடத்தால் துல்லியமாக விளக்க இயலும்.

பள்ளி இறுதித்  தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும் உயர்கல்வியை தேர்வுசெய்யுமுன் ஜோதிடத்தின் உதவியை நாடுவது பெற்றோர்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். நம் முன்னோர்கள் அருளிய அறிய வழிகாட்டியாம் ஜோதிடம் இது விஷயத்தில் வழிகாட்டி உதவும் என்பது உறுதி.

அடுத்த பதிவும் உயர்கல்வி பற்றியதே.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலை பேசி: 7871244501.

6 comments:

  1. Good one... Interesting Sir....

    ReplyDelete
  2. Thank you for your information and it is very useful

    ReplyDelete
  3. Hello My name's Shoshana.For 7 years now I am in Hong Kong
    being a TESOL teacher.I'm seeking something like this
    for my EFL group for way too long. I'm just very lucky I have discovered your
    web page when researching present perfect sources, it has a great deal of
    thoughts.I am so thankful for having a really fantastic website available!
    Thank you so much!

    Look into my page :: esl resources []

    ReplyDelete
  4. அருமையான பதிவிற்கு நன்றி,
    வர்க்கச்சக்கரத்தில் குறிப்பிட்ட வர்க்கத்தின் அதிபதியையும்(நவாம்சம் எனில் 7ம் அதிபதி), ஜெனன லக்கினத்தின் அதிபதியையும்(ஜனன லக்கினம் சிம்மம் எனில் சூரியன்) , காரகன் ( நவாம்சம் எனில் களத்திரகாரகன் சுக்கிரனின் அமர்வு)ஆகியோர் குறிப்பிட்ட அம்ச லக்கினத்திற்கு 3,6,8,12ல் மறையக்கூடாது , அம்ச லக்கினாதிபதியும்( நவாம்ச லக்கினம் மேஷம் எனில் செவ்வாய்) மறையக்கூடாது என்பது பொதுவிதி தானே, குறிப்பாக காரகம் வகிக்கும் கிரகம் ( நவாம்சம்எனில் களத்திரகாரகன் சுக்கிரன், சப்தாம்சம் எனில் குரு,தசாம்சம் எனில் சனி)குறிப்பிட்ட அம்ச லக்கினத்தில் அமரக்கூடாது என்பதும் முக்கியமான விதி.மேலும் இவர்கள் லக்கினபாவிகள்(6,8,12ன் அதிபதிகள்0 மற்றும் ராகு, கேதுவுடன் சேர்வது அந்த அம்ச( நவாம்சம் எனில் மனைவி, சப்தாம்சம் எனில் குழந்தைகள் , தசாம்சம் எனில் தொழில்)வழியில் சிக்கல்களை உண்டாக்கும். அம்ச சக்கரங்களில் எந்த கிரகத்திற்கும் பார்வைபலம் என்பதும் கிடையாது. பார்வைபலம் ராசிச் சக்கரத்திற்கு மட்டுமே உண்டு. அம்ச சக்கரம் என்பது குறிப்பிட்ட ஒருபாவத்தை பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பதற்குச் சமம்(நவாம்சம் எனில் 7ம் பாவம், சப்தாம்சம் எனில் 5ம் பாவம் , தசாம்சம் எனில் 10ம் பாவம்), ராசிச் சக்கரத்தில் தெரியாத பலவிஷயங்களை அம்ச சக்கரம் கொண்டு தெளிவாகக் காணமுடியும்.

    ஆனால் இங்கு பலரும் நவாம்சத்தை மட்டுமே பயன்படுத்திப் பலன் கூறுகின்றனர். மற்ற வர்க்கச் சக்கரங்களைப் பயன்படுத்துவதே கிடையாது. குறிப்பாக தசாம்சம், சப்தாம்சம் போன்றவற்றையாவது பயன்படுத்தினால் நல்லது. ராசிச்சக்கரத்தில் 5ம் பாவம்,5ம் அதிபதி,குரு வலிமையாக இருக்கும் ஜாதகங்களில், திருமணம் ஆகி 10 ஆண்டுகள்வரை கூட குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்திருக்கின்றனர். பிறகு கர்மபுத்திர அமைப்பு வரும்போது தான் பிராப்தம் பெறுகின்றனர். அவர்களின் சப்தாம்சம் ஆராயும் போது மேலே சொன்ன அனைத்தும் குழந்தைப் பாக்கியத்திற்கு,தாமதமாக(அ)எதிராக அமைந்திருக்கும். இது போன்ற முக்கியமான விஷயங்களுக்காக மட்டுமாவது அம்சச் சக்கரங்கள் பார்க்கப்பட வேண்டும் என்பது எனது எண்ணம்.

    நன்றி வணக்கம்!!!

    ReplyDelete