Thursday 8 October 2020

நம்ம முதலாளி நல்ல முதலாளியா?

 


இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு தொழிலை செய்துதான் பிழைக்க வேண்டியுள்ளது. இன்று தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது ஒரு புறம் இருக்க, வேலைக்குச்சென்றுதான் தனது வாழ்வாதாரத்தை அடையமுடியும் என்ரு இருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. அரசு வேலை பார்ப்பவர்கள் இதில் தப்பித்துவிடுகின்றன்றனர். அவர்களின்றி அரசு நிர்வாகம் இயங்காது என்பதுதான் காரணம். ஒரு நிறுவனத்தில் ஒன்றுக்கும் உதவாத பணியாளர்கள்கூட அங்கீகாரம் பெறுகின்றனர். அதே நிறுவனத்தில் சகல தகுதியோடும் நேர்மையோடும் பணிபுரிந்தாலும் சிலருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஏன் இந்த முரண்பாடு என ஆறாய முற்பட்டதே இப்பதிவுக்கு காரணமாகிறது.  

 

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

 

லக்னத்தில் தலைமைப்பண்பை குறிப்பிடும் சூரியன், நண்பன் புதனின் வீட்டில் தனது சிம்ம ராசிக்கு 11 ல் லக்னத்திலேயே  அமைவது மிகச்சிறப்பான அமைப்பாகும். லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதிகளான (9, 1௦ அதிபதிகள்) சனியும் குருவும் இணைந்து தைரிய ஸ்தானத்தில் அமைந்து, தைரிய ஸ்தானாதிபதி சூரியன் லக்னத்தில் அமைவதால் ஜாதகர் தொழிலில் துணிச்சலாக முடிவெடுத்து அதை வெற்றிகரமான செயல்படுத்துவார் எனலாம். ராகு 2 ஆமிடத்தில் அமைந்து சனி குருவோடு இணைந்துள்ளதால் ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை. மூன்றில் சனி அமைவது சிறப்பே. அதைவிட மூன்றில் பாதகாதிபதி குரு மறைவது மிகச்சிறப்பு. 6 ஆமிடம் என்பது ஒருவர் பணிபுரிவதையும், 1௦ ஆமிடம் என்பது தொழில் செய்வதையும் குறிக்கும். சூரியனும், 1௦ ஆமதிபதியும் முதலாளியை குறிக்கும் கிரகங்களாகும். ஜாதகர் வளைகுடா நாடு ஒன்றில் ஒரு நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கிறார். 6 ஆமிடமான விருட்சிகத்திற்கு 1௦ ஆமிடமான சிம்மத்தின் அதிபதி சூரியனாகி, அவர் லக்னத்தில் அமைவதும், 1௦ ஆமிடமான மீனத்தின் அதிபதி குரு, 1௦ ன் உப ஜெய ஸ்தானத்தில் 1௦ க்கு 6 ல் சிம்மத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் பெற்று அமைவது மிகச்சிறப்பு. பணியை குறிக்கும் 6 ஆமதிபதி செவ்வாய் சதுர்த்த கேந்திரத்தில் சூரியனின் உத்திரம்-2 ல் அமைந்து 1௦ ஆமிடத்தை பார்ப்பது மிகச்சிறப்பு. செவ்வாய்க்கு திக்பலம் தரும் வகையில் செவ்வாயின் சார நாதன் சூரியன் செவ்வாய்க்கு 1௦ ல் அமைந்திருப்பது ஆகியவை செய்தொழிலை பொறுத்தவரை மிகச்சிறப்பு. 

இந்த அமைப்புகளால் இந்த ஜாதகர் இவரது முதலாளியால் மிக விரும்பப்படுகிறார். ஜாதகருக்கு வேலையில் மட்டுமல்ல சொந்த விஷயங்களில் சிரமங்கள் வந்தபோதும் கூட ஓடோடி வந்து உதவுகிறார். முதலாளியை குறிக்கும் 1௦ ஆமதிபதி குரு கேதுவின் மகம்-4 ல் அமைந்துள்ளதால் ஜாதகரின் முதலாளி ஒரு கிறிஸ்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நவாம்சத்தில் 1௦ ஆமதிபதி குரு உச்சமாகியுள்ளது. உச்ச குருவின் மூலத்திரிகோண வீடான தனுசுவில் ஜீவன காரகன் சனி அமைந்துள்ளார். ராசியின் 6 ஆமதிபதி செவ்வாய் நவாம்சத்தில் உச்சமாகியுள்ளார். இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தானமான 7 க்கும் ஜீவன ஸ்தானமான 1௦ க்கும் உரிய குரு  திசைதான் நடக்கிறது. கூடவே ஏழரை சனி வேறு. பாதக ஸ்தானமான ஏழாமிடத்தை அதன் அதிபதி குரு பார்ப்பதால் ஜாதகருக்கு குடும்ப வாழ்வில், சம்பாத்தியத்தில் சில இடர்பாடுகள் ஏற்படும். ஆனால் தொழிலில் பெரிய பாதிப்பு இருக்காது. ஜாதகரும் இவரது முதலாளியும் பரஸ்பரம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.  இவர்களிடையே தொழிலில் பிரிக்க முடியாததொரு பந்தம் நிலவுகிறது. ஜாதகருக்கு தொழிலில் சிரமங்கள் ஏற்பட்டாலும் தாங்கிப்பிடிக்க முதலாளி இருக்கிறார் என்ற நம்பிக்கை ஜாதகரிம் எப்போதுமே காணப்படுகிறது. ஜாதக அமைப்பால் ஜாதகரின் குடும்ப வாழ்வில் பல பாதிப்புகள் உண்டு. அதே அமைப்பால் ஜீவனத்தை பொறுத்தவரை சிறப்படைந்துகொண்டிருக்கும் ஜாதகம் இது.

கீழே இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.


உண்மையில் மோசமான முதலாளி யாருக்கு அமைவார் என்றால் துலாம் லக்னம், ராசியினருக்குத்தான். அதைத்தவிர ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டோ அல்லது சூரியன் குறைந்த பாகை பெற்று தாரா காரகனாகவோ அமைந்தவருக்குத்தான். துலாத்திற்கு சூரியன் பாதகாதிபதி என்பதால் எப்போதுமே  துலாம் லக்னம், ராசியினருக்கு முதலாளிகளால் பாதிப்பு உண்டு. துலாமிற்கு உச்ச சூரியன் ஜீவன வகையில் சிறப்பை கொடுத்தாலும்கூட பாதகாதிபதி 7 ல் அமைவதால் பாதகத்தை களத்திர வகையில் கொடுத்துவிடும். சூரியன் லக்ன யோகரான சனியின் வலுவான தொடர்பில் அமைந்து, சனியும் சூரியனும்  பாதிக்கப்படாத குரு, சுக்கிரனின் தொடர்பு பெற்றால் மட்டுமே இந்த லக்னத்தாற்கு சூரியனின் அம்சமான அரசு வகையாலோ அல்லது முதலாளி வகையாலோ நன்மை ஏற்படும். நேர்மைக்கு உரியவர்களான இவர்களுக்கு சுக்கிரனும், சனியும் பாதிக்கப்பட்ட அமைப்பில் நேர்மை தவறி, அரசு வேலைக்கு குறுக்கு வழியில் முயற்சி செய்தால் தண்டனை அடைவது உறுதி. இந்த ஜாதகத்தில் லக்னமும் ராசியும் துலாமாகவே அமைந்தது சாதகமான அமைப்பல்ல. ஆனால் பாதகாதிபதி சூரியன் 1௦ ஆமிடத்தில் திக்பலத்தில் உச்ச 6  ஆமதிபதி குருவோடு இணைந்து அமைந்துள்ளார். சூரியனும் குருவும் புதனின் ஆயில்யத்தில் அமைந்துள்ளனர். ஜீவன காரகன் சனி 6 ஆமிடத்தில் உச்ச குருவின் வீட்டில் குரு பார்வையில் அமைந்தது சிறப்பான அமைப்புதான். சனி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் அமைந்து புதனோடு சாரப்பரிவர்தனை பெறுகிறது. இதனால் 1௦ ஆமிடத்தில் பரிவர்தனைக்குப்பிறகு வந்து அமரும் சனி உட்பட 1௦ ஆமிட கிரகங்கள் அணைத்தும் புதனின் சாரம் பெறுகின்றன. 

இந்த அமைப்பால் ஜாதகர் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் முதன்மை கணக்கராக (Chief Accounts Executive) ஆக பணியாற்றுகிறார். சூரியன் திக்பலம் பெற்றதால் மிகப்பெரிய நிறுவனத்தில் தலைமை கணக்காளர் பதவி. உச்ச குரு தொடர்பானதால் நிதி சார்ந்த துறை. சனி தொடர்பானதால் கடுமையான பணி. பாவத்பாவம் எனும் 1௦ க்கு 1௦ ஆமிடமான 7 ஆமிடத்தில் ராகு நிற்பதால் ஜாதகர் வரவு செலவுகளை தணிக்கை செய்து குறைகளை கண்டுபிடிக்கும் (Vigilance) துறையில் பணியாற்றுகிறார். ஜாதகருக்கு 9, 12 ஆமதிபதி புதனின் திசை நடப்பதால் ஜாதகர் இந்தியா முழுமைக்கும் தணிக்கை செய்ய விமானத்தில் பறந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார். ஜாதகத்தில் முதலாளியை குறிக்கும் 1௦ ஆமதிபதி சந்திரன் துலாம் லக்னத்தில் அமைந்ததால் ஜாதகர் தொழிலில் நேர்மையாக இருக்க வேண்டிய கட்டாயம் உண்டு. சந்திரன் பயண காரகன் என்பதால் அடிக்கடி தொழில் விஷயமாக பயணிக்கிறார். நேர்மைக்கு உரிய துலாம் ராசி ஜாதகரது லக்னம், ராசியாகி அதில் வழக்கு காரகன் கேது இருப்பதால் ஜாதகர் கணக்கு தணிக்கையில் தவறுகளை கண்டுபிடித்து தண்டனை பெற்றுத்தருகிறார். லக்னத்தில் கண்டிப்புக்கு உரிய செவ்வாயும் அமைந்திருப்பதால் ஜாதகர் தொழிலில் கண்டிப்பு காட்டுகிறார். 

இப்போது சூரியனின் நிலையை அதாவது இவரது முதலாளியின் நிலையை ஆராய்வோம். சூரியன் திக்பலம் பெற்றதால் ஜாதகருக்கு முதலாளி பெரிய பொறுப்பை அவரது தகுதியின் பொருட்டு அளித்துள்ளார். அதே சூரியன் பாதகாதிபதி என்பதால் பாதகத்தையும் சேர்த்தே செய்யவேண்டிய நிலை உள்ளது. ஜாதகர் தனது பணியில் கொலை மிரட்டல்களை, உயிராபத்துகளை சந்தித்துள்ளார். இருந்தும் முதலாளியிடம் ஜாதகரின் தனது பணிக்கு போதிய ஆதரவோ, அங்கீகாரமோ கிடைக்காது. ஜாதகத்தில் சனி – புதனின் சாரப்பரிவர்தனையை தவிர ராகு-கேதுக்களுக்கிடையே மற்றொரு சாரப்பரிவர்தனையும் உள்ளது. இதனால் கேது திசா-புக்தி-அந்தரங்களில் கேதுவின் இடத்தில் ராகுவே செயல்படுவார். ஜாதகருக்கு புதனின் திசையில் சனியின் புக்தியை கடந்துகொண்டுள்ளார். கொரானாவின் பாதிப்பால் ஜாதகரும் வீட்டிலிருந்துதான் பணியாற்றுகிறார். ஜாதகர் புதன் திசையில் சனி புக்தியில் கேது அந்தரத்தை சந்தித்தபோது தனது வேலையில் கடும் பாதிப்பை எதிர்கொண்டார். ஜாதகர் வெளியே சென்று பணிபுரிய முடியாது. அதே சமயம் தனது தனிக்கைப்பொறுப்புகளை நிறைவேற்றியாக வேண்டும் என்ற காட்டாயமானதொரு சூழல். இந்தக்காலகட்டத்தில் ஜாதகர் ஏறக்குறைய 24 மணி நேரமும் வீட்டிலிருந்து பணிபுரியும் சூழலுக்கு தள்ளப்பட்டார். காரணம் அந்தர நாதன் கேதுவினிடத்தில் நின்று செயல்படும் ராகு, பரிவர்தனைக்குப்பிறகு லக்னத்தில் 1௦ ஆமதிபதி சந்திரனோடும் 7 ஆமதிபதி செவ்வாயோடும் வந்து இணைகிறார். 

ராகு செவ்வாயோடு இணையும்போது செவ்வாயின் போர்க்குணம் அனைத்தையும் தனதாக்கிக்கொள்வார். ஜாதகர் தனது பணி அறிக்கைகளை சபர்ப்பிக்கவேண்டிய உயரதிகாரி இரவு பகல் பாராது ஜாதகரை வேலை வாங்கினார். ஜாதகரின் உடலும் மனமும் இதனால் பாதிக்கப்பட்டன. உயரதிகாரியிடம் ஈவு, இரக்கமற்ற தன்மையே அப்போது வெளிப்பட்டது. ராகு முஸ்லீம்களை குறிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதகரின் உயரதிகாரி ஒரு முஸ்லீம். என்னே கிரக லீலைகள். ராகு செவ்வாயை தவிர சந்திரனோடும் இணைகிறார் இதனால் செவ்வாயின் போர்க்குணம் வெளிப்பட்டது. அதே சமயம் சந்திரனின் தாய்மை குணமும் வெளிப்பட வேண்டும் அது வெளிப்பட்டதா எனில் ஆம் வெளிப்பட்டது. வேலையில் குரூரத்தன்மை காட்டிய அதே உயரதிகாரி வேலையை தவிர ஜாதகரின் தனிப்பட்ட பொருளாதார மற்றும் பாதுகாப்பிற்கு மட்டும் நன்மைகளை தற்போதும் செய்கிறார். இங்கு ராகு எப்படி சூரியனுக்கு ஒப்பாகும் என்றொரு கேள்வி எழும். ராகு ஜீவன ஸ்தானமான 1௦ ஆமிடத்திற்கு 1௦ ல் லக்னத்திற்கு 7 ல் அமைந்து சூரியனுக்கும் 1௦ ஆமிடத்திற்கும் திக்பலத்தை தருகிறார். எனவே இயல்பாகவே சூரியன், குரு, சனியை ஒத்த தன்மையோடு செயல்படும் ராகு இங்கு சூரியனின் காரகத்தை தான் எடுத்துச்செயல்படுகிறார். எனவே ராகு முதலாளி மற்றும் உயரதிகாரியாக இங்கு செயல்படுவார்.  

 

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி: 08300124501

2 comments: