Friday 8 February 2013

நமது வீட்டிற்கு ராகு கேதுக்கள் விசிட் எப்போது?


ஏங்க ஜோஷ்யரே why this kolaveri? சும்மா இருக்க மாட்டீர்களா என கேட்பவர்களுக்கும் ஜோதிடத்தை, இயற்கையை, இறைவனைப் புரிந்து கொள்ள அணைவருக்கும் ஒரு வாய்ப்பாக இந்தப் பதிவு அமையும் என்ற நம்பிக்கையிலும்  இப்பதிவை எழுதிகிறேன்.

இறைவன் என்று நாம் அழைக்கும் இயற்கையை அனுபவித்துத்தான் உணர முடியும் என்பது எனது திடமான நம்பிக்கை. அபூர்வமாக ஒருசிலருக்கு நேரடி தரிசனம் அவர்கள் நம்பும் வடிவத்தில் கிடைக்கக் கூடும். அவர்களே மகான்கள் எனப்படுகின்றனர். சாமான்யன்களான நாம் அவ்விறைவனை நோக்கி எடுக்கும் ஒருசில அடிகளாக இதுபோன்ற ஆய்வுகள் அமையட்டும்.

ஒரு ஜாதகருக்கு சர்ப்ப (பாம்பு) கிரகங்கள் என்று கூறப்படும் ராகு அல்லது கேதுவினுடைய திசையோ புக்தியோ அல்லது அவைகளின் சாரத்தில் (நட்சத்திரங்களில்) அமைந்த கிரகங்களின் திசையோ புக்தியோ நடப்பில் இருந்து கோள்சாரத்தில் ராகு-கேதுக்கள் ஒருவரின் இருப்பிடத்தை குறிக்கும் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போது ஜாதகர் வசிக்கும் வாழிடங்களுக்கு ராகு – கேதுக்களின் அம்சங்களான பாம்புகள் வரும் என்பது அனுபவ உண்மை. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் இதை பரீட்சித்துப் பார்க்கலாம். ஜோதிடத்தை பரீட்சித்துப் பார்க்க முயல்பவர்களும்    இதை ஆராய்ந்து பார்த்து அதிசயிக்கலாம். தங்களது இருப்பிடத்திற்கு பாம்பு வந்து சென்ற காலகட்டத்தை ஜாதகத்தில் ஒப்பிட்டுப் பார்த்தும் இதை அறியலாம். ஒரு வீட்டில் வசிக்கும் பலரில்  யாரேனும் ஒருவருக்கு மேற்குறிப்பிட்ட ஜாதக நிலை இருந்தாலும் இது நடக்கும்.
   
நகர்ப்புறங்களில் 14ஆம் மாடியில் வசிப்பவர்கள் எங்கள் வீட்டிற்கு வரவில்லை என ஜோதிடரை இம்சிக்கக்கூடாது. அவர்களுக்கு அவை வேறு வடிவங்களிலும் வரும்.

உதாரணம்: சன்யாசி கேதுவின் அம்சம், விதவைப்பெண் ராகுவினுடைய அம்சம். இவை தவிர வேறு பல அம்சங்களும் உண்டு.

வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.

No comments:

Post a Comment