ஆடி மாதம் பிறந்ததும்
புதுமணத் தம்பதியரை பிரித்து வைத்திடும் வழக்கம் நமது இந்து தர்மத்தில் ஆண்டாண்டு
காலமாகக் கடைபிடிக்கப்படும் அவசியமான ஒரு வழக்கமாகும். ஆடிமாதத்தில் இப்படி ஒரு
நடை முறையை தற்போதைய புதுமணத் தம்பதியரிடம் கூறினால், தற்காலக் கணவன்மார்கள்
யாரிதைக்கூரிய ஜோதிடன் என்று ஜோதிடரைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் நமது
முன்னோர்கள் தமது வருங்காலச் சந்ததியினரின் நல்வாழ்வை முன்னிட்டே இவ்வழக்கத்தினை
கடைப்பிடித்து வந்துள்ளார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுப்
போனேன். தற்காலத்தில் இம்மண்ணின் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இத்தகைய மரபுகள்
மறைந்து வருவதும் தற்காலத்திய பல குடும்ப அவலங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக
அமைகிறது.
ஆடிமாதம் தம்பதியர் இணைந்தால் சித்திரை
மாதம் குழந்தை பிறக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சித்திரை மாதத்தில் குழந்தை
பிறந்தால் வெயில் காலத்தில் தாயும் சேயும் சிரமப்படுவர் என்பதால் இத்தகைய ஒரு மரபு
கடை பிடிக்கப்பட்டிருக்கலம் என்பது சாதாரணமாக மக்களின் கருத்து. இதில்
ஜோதிடர்களின் கருத்து என்ன? சித்திரை மாதத்தில் தலைச்சன் குழந்தையாக ஆண்
குழந்தை சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் அது
தகப்பனுக்கு ஆகாது. அப்படிப் பிறந்தால் குழந்தையின் தந்தை எவ்வளவு உயர்ந்த
நிலையில் இருந்தாலும் வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தாலும், அணைத்தையும் இழந்து
சாதாரண நிலைக்கு வந்து விடுவது கண்கூடு என்பர். இது உண்மையே. ஆனால் இதன் பிண்ணனியை ஜோதிடர்கள் கூட ஆராய்ந்து பார்த்திருப்பார்களா என்பது
சந்தேகம்தான்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க ஜோதிடத்தை கடுமையாக
விமர்சித்துக் கற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில் இதை ஆராய்ந்து பார்க்க ஏனையோரை
அழைக்கிறேன்.
படம் விஜய வருடம் சித்திரை மாதம் 12ஆம் தேதி (25.04.2013) அன்று சந்திரன் துலாத்தில் இருப்பதை காட்டுகிறது.
ஜோதிடக் கணக்கீட்டு முறையில் சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு
பாதங்கள் கன்னி ராசி மண்டலத்திலும் 3,4 ஆம் பாதங்கள்
துலாம் ராசி மண்டலத்திலும் அமைந்திருக்கும். சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ
ராசியில் உச்ச கதியில் இருக்கும் போது மேஷ ராசிக்கு சுகஸ்தான ராசி நாதனான சந்திரன்,
சூரியனின் நீச்ச ராசியான துலாத்தில் சூரியனுக்கு வீடு கொடுத்த செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சூரியனுக்கு கடுமையான பாதிப்புகளை கொடுக்கும். அதாவது சூரியனின் அம்சமான
தந்தை தனது சுகங்களை இழந்துவிடுவார்.அது மட்டுமல்ல சந்திரன் அப்படி அமரும் சித்திரை நட்சத்திரத்திற்கு அதிபதியானவரும்
சூரியனுக்கு வீடு கொடுத்தவருமான செவ்வாயானவர் சந்திரனின் கடக ராசியில்தான் நீச்சமாகிறார்
என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
சூரியன் முதன்மைக் கிரகம் என்பதும் தலைமைப் பண்புக்கான கிரகம் என்பதாலும் இந்த விதி முதலாவதாகப் பிறக்கும் ஆண் குழந்தைக்கு (தலைச்சன் ஆண் குழந்தை) மட்டுமே பொருந்தும். இரண்டாவது ஆண் குழந்தையாலோ அல்லது முதல் மற்றும் இரண்டாவது பெண்
குழந்தைகளாலோ தந்தைக்கு இவ்வித பாதிப்பு ஏற்படுவதில்லை. இவ்வரிய உண்மையை நன்கு
ஆராய்ந்தே நம் முன்னோர்கள் தமது சந்ததியினர் இத்தகைய கிரகச் சூழ்நிலையில் குழந்தை
பெற வாய்ப்புள்ள சித்திரை மாதத்தில் குழந்தை பெறாமல் இருக்க ஆடி மாதத்தில்
புதுமணத் தம்பதியரை பிரித்து வைத்திடும் வழக்கத்தை கடைபிடித்து வந்துள்ளனர் என்பதை
உணரலாம். நவீன வசதிகளற்ற அக்காலத்தில் எத்தனை ஆண்டுகள் எத்தனை குடும்பங்களை ஆராய்ந்து பார்த்து இத்தகைய உண்மைகளை நமது முன்னோர்கள் நமக்குக் கூறியிருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.இயற்கை அளிக்கும் வாழ்க்கைச் சிக்கலில் இருந்து விடுபட எத்தகைய எளிய
முறைகளை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துள்ளார்கள் என்பதை அறிந்து
வியப்படையந்தேன். எனவே நமது சந்ததியினரின் நல்வாழ்வின் பொருட்டு இந்த மரபை விட்டுவிடாது தொடர்ந்து கடை பிடிக்க வழி செய்ய வேண்டும்.
வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.
Dear Palaniappan
ReplyDeleteYour explanation is wonderful. I never heard of this. I really envy your Tamil language capabilities. Your Tamil flow is awesome. I have just started my blog. I am still slow in typing in Tamil. Your template is very well designed. I need a help. How to get the comment box in Tamil as well? You have it in your blog. Is there any gadget I need to add on? If possible, please let me know.
Anbudan
Packirisamy N
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே.
ReplyDeleteஅன்பர் அன்புதில் செந்தில் அவர்களின் இணையப் பக்கத்தில் பிளாக்கர் டிப்ஸ் பகுதியில் அளித்துள்ள தமிழில் தட்டச்சிட உதவும் widget தங்களுக்கு மிக உதவியாக இருக்கும். கீழே இணைப்பை கொடுத்துள்ளேன். என்னைப் பொருத்தவரை google tamil input (search ல் தேடி install செய்து உபயோகிக்கலாம். பதிவுகள் எழுத மிக உதவியாக இருக்கும்.
http://www.anbuthil.com/2012/05/tamil-typing-widgets.html
அன்பன்,
பழனியப்பன்
Dear Palaniappan
ReplyDeleteThanks a lot. I will try.
Anbudan
Packirisamy N
Dear Palaniappan
ReplyDeleteI received the following comments from Mr.Dhanabalan. If acceptable, please implement. I have implemented.
Thanks.
Anbudan
Packirisamy N
திண்டுக்கல் தனபாலன்March 4, 2013 at 2:40 PM
சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)
(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')
நன்றி ஐயா...
If boy baby birth is in aadi maatham please give your comments.. Is it harm to family, parents, grand parents...
ReplyDeleteஆடி மாதம் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு எவ்வித நக்ஷத்திர தோஷங்களும் கிடையாது. பொதுவாக ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் தக்ஷிணாயனம் எனப்படுகிறது . இக்கால கட்டத்தில் சூரியனின் கதிர்வீச்சு பூமிக்கு குறைவாக கிடைக்கும். அதனால் ஆரோக்ய பாதிப்புகள் ஏற்படலாம். இது இருபால் குழந்தைகளுக்கும் பொருந்தும். அது எவ்வித பாதிப்பு என்பதையும் குழந்தைகளின் ஜாதகத்தில் லக்கினம், சுகஸ்தானம் எனப்படும் நான்காமிடம் மற்றும் வியாதி ஸ்தானம் எனப்படும் ஆறாமிடம் இவை தொடர்புடைய கிரகங்களைக் கொண்டு அறியலாம். திசா புக்திகளை ஆராய்ந்தால் வியாதி தாக்கும் காலகட்டத்தையும் அறியலாம்.
Deleteபழனியப்பன்.
ஐப்பசியில் பிறக்கும் குழந்தைக்கு சூரியன் நீசம்.விருச்சிக ராசியாகவும் அமைந்தால் ஜதகருக்கு சந்திரனும் நீசம். .அப்படடி அமைந்து நீச பங்கம் ஏற்படாமல் .அப்படடி பிறக்கும் குழந்தைக்கு தாய் ,தந்தை இருவர் ஸ்தானமும் கெட்டு விடுமே. அதற்குும் ஏதேனும் ஸாஸ்திர உபயம் அமந்தளதா? masi mathamum thadi sollalama
ReplyDeleteநீங்கள் கூறுவதுபோல நீச பங்கமும் அடையாவிட்டால் அந்த ஜாதகருக்கு பெற்றோரின் பாக்கியம் குறைவாகவே கிடைக்கும். எனினும் தாய் தந்தைகளுக்கு உரிய காரகர்கலான சூரியனையும் சந்திரனையும் மட்டுமே கவனித்து பெற்றோரைப்பற்றி முடிவு செய்யகூடாது. தாயைக் குறிக்கும் 4 ஆம் பாவமும் தந்தையைக் குறிக்கும் 9 ஆம் பாவமும் அதன் அதிபதிகளும் நன்கு அமைதிருந்து சுபர் பார்வை சேர்க்கை பெற்றிருந்தால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.
ReplyDeleteஅன்பன்,
பழனியப்பன்.