Wednesday, 5 October 2016

போரில் வெற்றி யாருக்கு?

கிரக யுத்தம்

சிலவகை வாழ்வியல் நிகழ்வுகளை குறிப்பிட்ட காலத்தில்தான் அனுபவித்திட வேண்டும் என இறைவன் வகுத்திருப்பான். அதற்கான காரணங்கள் சூட்சுமமானவை. ஒருவரது கர்ம வினைகளோடு தொடர்புடையவை. அது மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட வினை துவங்கும்போதுதான் அது தொடர்புடைய இதர வினை ஒருங்கே வந்து இணையும்.

எங்கே நமக்கான செயல்களை எவ்வளவு முயன்றும் நாம் செய்துகொள்ள இயலவில்லையோ அங்கேதான் படைத்தவன் நம்மை சோதிக்கிறான் என உணர வேண்டும். 

படைத்தவனின் கருணையாலேயே அந்த செயல் நடந்திட வேண்டும் என வேண்டிக்கொண்டு செயல் நோக்கிய திசையில் தனது பயணத்தை தொடர வேண்டும். உரிய நேரம் வந்ததும் அச்செயல் நிகழும். வெகு சிலருக்கு அவர்களது கடுமையான கர்மவினையின் காரணமாக அச்செயல் மிகுந்த தாமதத்தில் நிகழும் அல்லது மறுக்கப்பட்டிருக்கும் அவர்களது நிலை பரிதாபத்திற்குரியது.

இதை அறியாமல் புலம்புவோர் பலர். ஜோதிடத்தின் மூலம் அத்தகைய சிலவற்றை அறிந்துகொண்டு இறையோடு போட்டிபோட்டு தோல்வியுறுபவர் பலர்.    
   

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


06.07.1991  மாலை  5.49 மணி. கரூர்.

மிதுன லக்ன ஜாதகிக்கு  22.06.2017 வரை சுக்கிர திசை நடக்கிறது. 25 வயதை கடந்துவிட்ட ஜாதகிக்கு இன்னும் திருமணம் அமையவில்லை. ஜாதகி மெத்தப்படித்தவர்.

ஜாதகத்தில் மகம் – 2 ல் சுக்கிரன். மகம் – 1 ல் செவ்வாய். இருவருக்கும் இரண்டு பாகைகள் மட்டுமே இடைவெளி.

இங்கு செவ்வாய் சுக்கிரனுடனான யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. ராசி மண்டலத்தில் குறைவான பாகை இடைவெளியில் பின்னால் நிற்கும் கிரகம் முன்னாள் இருக்கும் கிரகத்தின் கதிர்வீச்சையும் அபகரித்துவிடும் என்பதே கிரக யுத்தத்தின் அடிப்படை.  யுத்தத்தில் வென்ற செவ்வாய் திசா நாதன் சுக்கிரனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.. திருமணத்தை நடத்திட சுக்கிடனுக்கு களத்திர காரகன் என்ற வகையிலும் 12 ஆம் அதிபதி எனும் வகையிலும் முழு உரிமை உள்ளது என்றாலும் செவ்வாயுடன் கிரக யுத்தத்தில் தோல்வியடைந்ததால் செவ்வாயை சார்ந்தே சுக்கிரன் செயல்படும்.  

ராசிநாதன் செவ்வாயே ஜாதகிக்கு திருமணத்தை தாமதப்படுத்துகிறார் என்பதே உண்மை.

காரணம் காம – களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்திற்கு பாக்ய ஸ்தானமாகவும் (9 ஆமிடமாக) குடும்ப பாவமான 2 ஆமிடத்திற்கு 2 ஆமிடமாக பாவத் பாவம் எனும் அடிப்படையை கொண்டிருக்கும் 3 ஆம் பாவத்தில் இருக்கும் செவ்வாய் போன்ற பாவக்கிரகங்கள் துணிச்சலான மனோநிலையை ஜாதகருக்கு வழங்கினாலும் குடும்ப வாழ்வை வழங்கிடும் மனோ நிலையில் இருக்காது.

எனவே லக்னத்தில் உச்ச குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்த சூரியனின் திசையில்தான் ஜாதகிக்கு திருமணம் நடக்க வேண்டும். குரு செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் துலாத்தில் மேச ராசிக்கு 7 ஆமிடத்தில் 2017 பிற்பகுதியில் வரும்போது ஜாதகிக்கு திருமணம் நடக்க வேண்டும்.

ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம் என்பதோடு எட்டாமிடம் உடல் ரீதியான உறவை குறிப்பிடும் இடம் என்பதாலும் ராசிக்கு ஏழு மற்றும் எட்டாமிடங்களில் சஞ்சரிக்கும் சனி திருமணத்தை தடுத்திட உரிமையுண்டு. மேலும் ஜனன காலத்தில் எட்டில் குடும்ப பாவாதிபதி சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் அமைந்ததால் முன்னமே திருமணம் நடைபெறாமல் தடுப்பது சனியின் வேலை.

நவாம்ச அடிப்படையிலும் பாவ அடிப்படையிலும் ஜாதகத்தை ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் புரியவரும்.மேலும் ஒரு செயலை தீர்மானிப்பதில் பல காரணிகளும் ஜாதக அமைப்புக்கு தக்கபடி துணை நிற்கும். கர்ம வினைகளை அனுபவிக்க அனைத்து கிரகங்களும் துணை நிற்கும் என்றே அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கிரக யுத்தம் எனும் ஒரு குறிப்பிட்ட வகையில் ஜாதகத்தை ஆராய்ந்ததால் ஜாதகத்தில் இதர வகை காரணிகளை நீண்டு விளக்க விரும்பவில்லை. அப்படி ஆராய விரும்புவோர்களுக்காக நவாம்சமும் பாவமும் இங்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.

மற்றுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

6 comments:

  1. அருமையான விளக்கம் சார்.... நன்றி...

    ReplyDelete
  2. நம் வாழ்வின் நியாயமான நிகழ்வுகள் தாமதமாவதற்கும் , நடைபெறாமல் போவதற்கும் கர்மவினைகள் தொடர்பு உள்ளது என்பதை ஜாதக விளக்கத்துடன் மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் .
    ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக யுத்தம் அவருடைய வாழக்கையை எப்படியெல்லாம் வழிநடத்துகிறது .

    எல்லா விஷயங்களையும் ரெம்ப பகுத்து அறிவதை விடுத்து சிலவற்றை அதன் போக்கிலேய விட்டு விட்டால் ஓரளவாது நிம்மதி கிடைக்கும் .

    கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் . . கிடைக்ககூடாதது கிடைக்காது .

    மிக்க நன்றி, அன்புடன்
    சோமசுந்தரம் பழனியப்பன்
    மஸ்கட்

    பெண் ஜாதகத்தில் குரு + சுக்கிரன் அமைப்புடைய ஜாதகங்களை முடிந்தால் அலசுங்கள் .

    ReplyDelete
  3. சூப்பர் சார்

    ReplyDelete
  4. can i send my horo.. can you tell me the predictions?/

    ReplyDelete
  5. Sir enodaya jaathakaththai paaarththu sollveeerkala
    Unkaludaiya pathivukal ellaam arumai sir

    ReplyDelete