திருமணம் நிச்சயமான சிலருக்கு திருமண நாளில் மாப்பிள்ளை
அல்லது பெண்ணை மாற்றி வேறொருவரை திருமணம் செய்யும் செய்திகளை நாம்
கேள்வியுற்றிருப்போம். இப்படி குளறுபடியாக நடக்கும் திருமணங்களுக்கும் ஜாதக
ரீதியான காரணங்கள் உண்டு. அத்தகைய திருமணங்களுக்கான காரணிகளை ஒரு உதாரண ஜாதகம்
மூலம் அலசுவோம்.
கீழே
ஒரு ஆணின் ஜாதகம்.
தனுசு
லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு கேதுவின் சாரத்தில் மூலம்-3 ல் நின்று திசை
நடத்துகிறார். கேது புதனின் கேட்டை -2 ல் நிற்கிறார். இதனால் குரு, புதன், கேது
மூவருக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. புதன் பாதகாதிபதி என்பதோடு காதலியை
குறிப்பவராகிறார். அவர் 7 ஆமதிபதி என்பதால் மனைவியையும் குறிக்கிறார்.
கேதுவும் காதல் ஆசையை தூண்டும் கிரகம்
என்றாகி புதனின் நட்சத்திரத்தில் நிற்பதும் பாவத்தில் குரு கேதுவோடு இணைந்து
நிற்பதும் கவனிக்கத்தக்கது. புதன் வர்கோத்தமம் அடைந்து குருவின் பாகை 9 ஐ விடவும் சுக்கிரனின்
பாகை 16 ஐ விடவும் னைவிட அதிகமாக 27 பாகை சென்று
ஆத்ம காரகனாக அமைந்துள்ளபடியால் லக்னத்தை புதனே இயக்குபவராகிறார். ஜாதகருக்கு குரு திசை நடக்கிறது. லக்னாதிபதி
ஆட்சி பெற்று 7 ஆமிடத்தை பார்ப்பதால் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும். காதலுக்குரிய
சகல அமைப்பும் ஜாதகத்தில் உள்ளதாலும் திசா நாதன் குருவிற்கு புதன் கேது தொடர்பு
உள்ளதாலும் ஜாதகர் காதலித்தார். அதுவும் பிரச்சனை வேண்டாமென்று தாய்மாமன் மகளையே
காதலித்தார். உறவு என்பதால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய ஏற்பாடானது.
ஜாதகத்தை
நன்கு கவனியுங்கள் கால புருஷனுக்கு 2, 7 க்குரிய சுக்கிரனின் இரு வீடுகளும்
பாவக்கிரகங்களால் பாதிக்கப்பட்டுள்ள்ளது. களத்திர கிரகங்கள் சுக்கிரன், செவ்வாய்
& 7 ஆமதிபதி புதன் ஆகிய மூன்று
கிரகங்களுமே தத்தம் பகை கிரகங்களுடன் தொடர்பில் உள்ளன. லக்னாதிபதியும் குடும்ப
காரகனுமான குருவும் பாதகாதிபதி கிரகத்துடனும், 6 ஆமதிபதியுடனும் குடும்ப
வாழ்க்கைக்கு எதிராக செயல்படும் சந்நியாச –
ஆன்மீக கிரகம் கேதுவுடனும் தொடர்பில் உள்ளது. எனவே ஜாதகருக்கு திருமண விஷயத்தில்
பாதகமில்லாமல் சாதகமில்லை என்பது புலனாகிறது. 2 ஆமிடமான குடும்ப பாவத்திலும் ஒரு பாவக்கிரகமே
இருந்தாலும் அது பாக்யாதிபதியும் தந்தை – மாமனாரை குறிக்கும் சூரியனாக இருப்பதால்
ஜாதகருக்கு குடும்பம் அமைகையில் தந்தையும் மாமனாரும் உதவியாக இருப்பார்கள் எனலாம்.
திருமண
நாளின் கிரக நிலையை கீழே.
ராசிக்கு
6 ல் கோட்சார குரு செல்லும் காலம் அமையும் திருமணங்கள் குளறுபடிகளை சந்தித்தே ஆக
வேண்டும். லக்னத்திற்கு 8 ஆமிடத்தில்
லக்னாதிபதி போகும் காலம் திருமணம் நடந்தால் ஜாதகர் அவமானங்களை சந்தித்த பிறகே
திருமணம் செய்வார். 7 ஆமிடத்திற்கு குரு
பார்வை கிடைக்கும் காலம் திருமணம் செய்வதே சிறப்பானது. சிறப்பான குடும்ப வாழ்வை
வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பதியரின் ஜாதக திருமண விபரங்களை ஆராய்ந்து பார்த்தால்
இந்த உண்மை புரியும். ஜாதகத்தில் உள்ள தோஷ அமைப்பைக்கூட சரியான திருமண
முகூர்த்தத்தின் மூலம் குறைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திருமண நாள்
என்பது மிகுந்த கவனத்துடன் தகுந்த ஜோதிடரைக்கொண்டு குறிக்கப்பட வேண்டும். குரு ராசிக்கு 6 லும் லக்னாதிபதி குரு அவமான
ஸ்தானமான 8 ஆமிடத்திலும் செல்லும் காலத்தில் திருமண
முகூர்த்தம் அமைந்துள்ளது.
ஜாதகருக்கு
லக்னாதிபதியும் குடும்ப காரகனும் லக்னதிலிருந்து 7 ஆமிடத்தை பார்வை செய்யும்
குருவின் திசையில் 7 ஆமதிபதி புதனோடு இணைந்து நிற்கும் களத்திர காரகன் சுக்கிரனின்
புக்தியில் லாப ஸ்தானத்தில் குரு சாரத்தில் நிற்கும் 2 ஆமதிபதி சனியின்
அந்தரத்தில் திருமண நாள் குறிக்கப்பட்டது. திருமண நாளில் கோட்சார சந்திரன் 2
ஆமிடத்தில் நிற்கும் சூரியனின் உத்திரத்தில் கன்னியில் நிற்கிறார். திருமண நாளின்
கிழமை குருவாரமான வியாழக்கிழமை ஆகும்.
இந்த
ஜாதகத்தில் திசா நாதனான லக்னாதிபதியைவிட லக்னத்தில் நிற்கும் பாதகாதிபதி புதனுக்கு
வலு கூடியுள்ளது. இதனால் திருமண நாளன்று காதலியான மாமன் மகள் கடைசி நேரத்தில்
ஏற்பட்ட மனதடுமாற்றத்தில் (மனத்தடுமாற்றம் – புதன்) திருமணத்திற்கு மறுத்துவிட்டார். இதனால்
திருமண மண்டபமே திகைத்துவிட்டது. இறுதியில் மணமகளின் தந்தையும் தாய் மாமனுமான
மாமனார் (தாய் மாமன் – புதன்) தனது
இரண்டாவது மகளை அதே முகூர்தத்தில் ஜாதகருக்கு திருமணம் செய்வித்தார். இங்கு
ஏழாமதிபதியான பாதகாதிபதி திருமண
விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார். திசா நாதன் லக்னாதிபதியானதால்
குழப்பம் தீர காரணமானார். இளைய மற்றும்
கடைசி மகளை புதன் குறிப்பதால் கடைசி பெண்ணை திருமணம் செய்வித்ததால் காரக
அடிப்படையில் புதனும் சமாதானம் அடைந்து திருமணம் நடக்க வழிவிட்டது. அதனால் புதனின்
அம்சமான தாய் மாமனும் சூரியனின் அம்சமான மாமனாரும் (இருவரும் ஒருவரே) ஜாதகரின் கௌரவத்தை காப்பற்றி குளறுபடிகளை
கலைந்து திருமணத்தை நடத்திவைத்தார்.
நமது
திருமணத்தில் இப்படி நடந்துவிட்டதே என்று புலம்புவதைவிட அத்தகைய சூழல்களில்
பாதிக்கும் கிரகம் தனது வேலையை செய்கிறது என்ற அமைப்பில் நிதானத்துடனும் சாதுர்யத்துடனும் சூழ்நிலைகளை எதிர்கொண்டு
சமாளிக்க முயலவேண்டும். முக்கியமாக திருமண திட்டமிடலில் தகுந்த ஜோதிடரின் ஆலோசனையை
பெறுவது சிரமங்களை எதிர்கொண்டு சம்மாளிக்க உதவும்.
மீண்டும்
மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,
அதுவரை
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி:
08300124501
கட்டுரை எழுத்து வடிவம் மிக அருமை 🙏. நல்வாழ்த்துகள் சார் 💐
ReplyDeleteவிளக்கம் நன்றாக உள்ளது
ReplyDelete