Sunday, 31 March 2013

குழந்தைக்கு பெயரிடும் போது நாம நக்ஷத்திர எழுத்துக்களைப் பயன்படுத்துதல் அவசியமா?


என்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்க வரும்போது பலர் கேட்கும் கேள்வி இது. வழக்கமான ஜோதிடன் என்ற முறையில் இல்லாமல் ஆராய்ச்சி ஜோதிடன் என்ற முறையில் இதன் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும் போது பல அறிய உண்மைகள் தெரிய வருகின்றன.

முதலில் இதன் தொன்மையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரிய வருகிறது. மேலும் இதன் மூலம், பாபிலோனியர்களிடமிருந்து ஏற்பட்டது  என்பதும் அறியவருகிறது.‘கடவுளும் மனிதனும்’  பதிவில் நான் குறிப்பிட்டது போல அவர்கள்தான் முதன் முதலில் விண்ணை ஆழ்ந்து நோக்கி பல அறிய உண்மைகளை அளித்துள்ளனர். அப்படி அவர்கள் ஆழ்ந்து விண்ணை நோக்கியபோது நக்ஷத்திரங்களின் கதிவீச்சின் அளவு, அக்கதிர் வீச்சுக்கள் பாய்வது கீழ் நோக்கியா?அல்லது மேல் நோக்கியா? (கீழ்நோக்கு நக்ஷத்திரங்கள் மற்றும் மேல்நோக்கு நக்ஷத்திரங்கள் என பஞ்சாங்களில்  நக்ஷத்திரங்களைக் குறிப்பிட்டிருப்பதன் காரணம் இதுதான். கீழ் நோக்கு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பூமியைத் தோண்டுவது, பயிரிடுவது ,சம நோக்கு நக்ஷத்திரங்கள் வரும் நாட்களில் வாகனங்கள், ஆடு மாடுகள் வாங்குதல் மற்றும் மேல்நோக்கு நக்ஷத்திரங்கள் வரும் நாட்களில் அறுவடை செய்தல் போன்றவற்றைச் செய்யலாம் என்பது போன்றவை இதன் பயன்கள்.)மேலும் நக்ஷத்திரங்களில் இருந்து வரும் ஓசைகள் எத்தகையது என்பது உள்ளிட்ட பல ஆச்சரியமான  உண்மைகளை அளவிட்டிருக்கிறார்கள்.

மேற்சொன்னவற்றில், நக்ஷத்திரங்களில் இருந்து வரும் ஓசைகளை அளவிட்டது மிக முக்கியமானது. இதன் அடிப்படையிலேயே நக்ஷத்திரங்களின்  நாம எழுத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். இதனை மூலமாகக் கொண்டே நாஸ்ட்ரடாமஸ் தமது புகழ்பெற்ற  ‘THE CENTURIES’ என்ற எதிர்காலக் கணிப்பு நூலில் பல இடங்களில் இப்பெயருடயவர்களால்  இச்சம்பவங்கள் நடக்கும் என குறிப்பிட்டுள்ளதை உணர முடிகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஹிட்லரை ‘ஹிஸ்ட்லர் ‘ என மிக நெருக்கமாகக் குறிப்பிட்டுள்ளதைக் கூறலாம். (இதில் ‘ட்’ எனும் எழுத்தை நாஸ்ட்ரடாமஸ் வாழ்ந்த பிரான்ஸ்    மற்றும்  அதன் சார்புடைய நாடுகளில்  அப்போதைய  காலகட்டத்தில் பயன்படுத்துவது வழக்கத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை எனவே ‘ட்’டுக்கு பதில் ‘ஸ்’ ஐக்கொண்டு  ஹிஸ்ட்லர் எனக் குறிப்பிட்டிருக்கலாம் என என்னுடன் ஜோதிடத்தில் ஆய்வு செய்து வருபவரும் சென்னையில் அரசுப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவருமான திரு. வேங்கடசுப்பிரமனியன் (மணியன்னா) அவர்கள் குறிப்பிடுகிறார்.)



நாஸ்ட்ரடாமஸ் யார் எனக் கேட்பவர்கள் நமது விக்கியிடம் (விக்கிபீடியா-தகவல் களஞ்சியம்) பின்வரும் இணைப்பைச் சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.


இந்த நாம  எழுத்துக்களோடு தொடர்புடைய நக்ஷத்திரங்களின் குணாதிசயங்களை அந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் பிரதிபலிப்பர் என்பது  உண்மை. ஜோதிடம் வளர்ந்துகொண்டிருந்த பண்டைய  கால கட்டத்தில் இதை ஆராய்ந்து பார்க்க ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவரவரின் ஜனன நக்ஷத்திரங்களுக்கு ஏற்ப இந்த நாம நக்ஷத்திர எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள்.

மனிதர்கள் ஆற்றோரங்களில் விவசாயம் செய்துகொண்டு, காடுகளில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டு 20 முதல்  40 குடும்பங்களைக் கொண்ட சிறு குழுக்களாக கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்த சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன் இப்படி நக்ஷத்திரங்களின் பெயர்களின் அடிப்படையில் மனிதர்களின் குணாதிசயங்களை  அளவிடுவது மிக எளிதாக இருந்தது.

ஆனால் ஒரு குடியிருப்பில் 40 குடும்பங்கள் வசிக்கும் தற்காலத்தில், ஒரு சிறு நகரத்தில்கூட பத்து லட்சம்பேர் வசிக்கும் இன்றைய சூழலில் இப்படி அளவிடுவது எளிதல்ல. எனவே இப்படி நாம நக்ஷத்திர எழுத்துக்களைப் பயன்படுத்துவது என்பது ‘கால தேச வர்த்தமான’க் கணக்கின்படி இன்றைய காலகட்டத்தில் பொருந்தாத  ஒன்றாகிவிடுகிறது. எனினும் இவற்றைப் பயன்படுத்துவது அவரவர் விருப்பமே.

பின்வருவன நக்ஷத்திரங்களுக்கான நாம எழுத்துக்கள்.
                    
(4 பாதங்களின் அடிப்படையிலும் பயன்படுத்தலாம்)                                     

1



அஸ்வினி
சு, சே, சோ, லா
2
பரணி
லி, லூ, லே, லோ
3
கார்த்திகை
, , ,
4
ரோஹினி
, , வி, வு
5
மிருகஷீரிஷம்
வே, வோ, கா, கி
6
திருவாதிரை
கு, , , ச்சா
7
புனர் பூசம்
கே, கோ, , ஹி
8
பூசம்
ஹீ, ஹே, ஹோ,
9
ஆயில்யம்
டி, டு, டே, டோ

10
 மகம்
, மி, மு, மெ
11
 பூரம்
மோ, , டி, டு
12
 உத்திரம்
டே, டோ, , பி
13
 ஹஸ்தம்
பு, , ,
14
 சித்திரை
பே, போ, , ரி
15
 சுவாதி
ரு, ரே, ரோ,
16
 விசாகம்
தி, து, தே, தோ
17
 அனுஷம்
, நி, நு, நே
18
 கேட்டை
நோ, , யி, யு

19
 மூலம்
யே, யோ, , பி
20
 பூராடம்
பூ , , ,
21
 உத்திராடம்
பே, போ, , ஜி
22
 திருவோணம்    
ஜூ, ஜே, ஜோ, கா
23
 அவிட்டம்
, கீ , கு, கூ
24
 சதயம்
கோ, , ஸி, ஸீ
25
 பூரட்டாதி
ஸே, ஸோ, தா, தீ
26
 உத்திரட்டாதி
து, , , ஸ்ரீ
27
 ரேவதி
தே, தோ, , சி


மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்!


வாழ்த்துக்களுடன்,

பழனியப்பன்.

Friday, 22 March 2013

சிட்டுக்குருவி



அக்ரஹாரத்து ஞாபகங்கள்


                                  


 நான் ஒன்றும் பெரிய இயற்கைவியலாளன் அல்ல. சாதரணமான இயற்கை நேசன். மழைத்துளிகளின் சில்லிடல்களை , சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்களின் கொஞ்சல்களைக் கண்டு  ரசிக்கும் சராசரி மனிதனே.  கடந்த காலங்களின் சிறுவயதில் கிராமம் நகரம் என்ற வேறுபாடின்றி   ஒவ்வொரு மனிதனுக்கும் நன்கு பரிச்சயமாகும் முதல் சிறு பறவையினம் என்றால் அது நிச்சயம் சிட்டுக்குருவிதான். 

எனது பால  பருவத்தில் வெள்ளியனை (எங்களது கிராமம்) ஆக்ரஹாரத்தின் வீடுகளில் பயமின்றி என்னருகில் வந்து தானியங்களை உண்டுவிட்டுச் செல்லும் சிட்டுக்குருவிக் கூட்டங்களையும் அவை தங்களுக்குள் கொஞ்சிக்கொள்வதையும், உணவூட்டிக்கொள்வதையும் கண்டு மிகவும் ரசித்திருக்கிறேன். தெருக்கோடியிலிருக்கும் கோவில் மாமி வீட்டின் வாதநாராயணா மரங்களில் குழுமியிருக்கும் சிட்டுக்குருவிகளை ரசிப்பது எனது பிடித்தமான சிறுவயது பொழுது போக்கு. எங்கள் ஆக்ரஹாரத்தைத் தாண்டியிருக்கும் காக்கேணி(கால் கேணி) வயல்வெளியைச் சுற்றியிருக்கும் முருங்கை மரப்பூக்களில் தேனருந்த வரும் தேன்சிட்டுகளுடன்  தேன் எடுக்க சிட்டுக்குருவிகளும்  போட்டிபோடுவதை ஆர்வத்துடன் ரசித்திருக்கிறேன். அவை மழையில் நனைந்து உடலைச் சிலுப்பும் பாங்கைக் கண்டு பொறாமைப்பட்டிருக்கிறேன். 

உலகில் சிட்டுக்குருவியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காரணம், அது உணரும் சுதந்திரம். ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’ என கவிஞர்கள் எவ்வளவு சிலாகித்திருக்கிறார்கள் நமது திரைப்படப் பாடல்களில்?

ஆக்ரஹாரத்தின் நுழைவில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தின் பின்புறம் அமைந்திருக்கும் மரங்களில் சிட்டுக்குருவிகள், மைனா உள்ளிட்ட  எண்ணற்ற பறவையினங்கள் மாலைப்பொழுதில் வந்து அடைவதை பார்க்க, அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. சில பேராசைக் காவல்துறையினரின் துப்பாக்கிகளுக்கு பல மைனாக்கள் பலியானவுடன் பறவையினங்கள் தங்கள் தங்குமிடத்தை  நூலகத்திற்கும் பள்ளி மைதானத்திற்கு  மேற்கில் இருக்கும் ‘தலைவர் ‘(பெருமாள் கோவில் அறங்காவலர்  குழுத்தலைவர்) தோட்டத்து தென்னை மரங்களுக்கு மாற்றிக்கொண்டன. 

தலைவர் தோட்டத்து தென்னந்தோப்பு பலவகைப் பறவையினங்களுக்கு ஒரு சொர்க்கபுரி என்றால் அது மிகையில்லை. திணை, கம்பு போன்ற சிறு தானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் உணவு. சோளம் போன்ற பெரிய தானியங்களை உண்பதற்கு அவற்றின் உடலமைப்பு இடங்கொடுக்காது. இப்போது எங்கள் பகுதியில் இவ்வகை தானியங்களை யாரும் அதிகம் பயிரிடுவதில்லை. இதனால் சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல பல பறவையினங்கள் எங்கள் பகுதிகளில் இப்போது தென்படுவதில்லை. இதுமட்டுமல்ல செல்பேசிக் கோபுரங்களிளிருந்து  வரும் கதிர்வீச்சுக்களும்  சிட்டுக்குருவிகளின் உயிருக்கு உலை வைப்பதாக நம்பப்படுகிறது. 

சிட்டுக்குருவிகளுக்கு ஒரு தினத்தை (மார்ச் 20 சர்வதேச சிட்டுக்குருவி தினம்!) கடைபிடிக்குமளவு நாம் எவ்வளவு தூரம் இயற்கையோடு இணைந்த வாழ்விலிருந்து விலகி வந்திருக்கிறோம் என்ற உண்மை எனது விழியோரத்தை நனைக்கிறது. சிறுவயதில் நானறிந்த சொர்க்கம் என் கண்முன்னே களைந்து கொண்டிருக்கிறது. சிட்டுக்குருவிகளும் பட்டாம் பூச்சிகளும் இல்லாத உலகத்தில் நான் வாழ்கிறேனே, இதைவிட ஒரு நரகம் வேண்டுமோ இறைவா! என கதறத்தோன்றுகிறது.

தொலைக்காட்சியில் குன்னூர்ப் பகுதி வியாபாரிகள் தங்கள் கடைகளில் சிட்டுக் குருவிகள் தங்க வைக்கோல் மற்றும் அட்டைப்பெட்டி கொண்டு கூடு கட்டி வைத்திருப்பதைக் காட்டினார்கள். முடிந்தவர்கள், கிராமப்புர அன்பர்கள் முயற்சிக்கலாமே.

பள்ளிக்கூட வயதுகளில் உண்டிவில்லை எடுத்து விளையாட்டாய் சிட்டுக்குருவிகளை வீழ்த்த முயன்றிருக்கிறேன். இப்போது அதுபோன்ற விபரீத விளையாட்டுக்களில்லை சிட்டுக்குருவிகளே! திறந்த மனத்துடன் என் சிறு வயதைவிட மேலும் அதிகமாக உங்களை நேசிக்கிறேன். எனக்கு செல்பேசிகளும் தொலைக்காட்சிகளும் வேண்டாம் என்னிடம் திரும்பி வந்து விடுங்களேன்!

அன்பன்,
பழனியப்பன்.

Sunday, 17 March 2013

வேதத்தின் கண்கள் (ஜோதிடம்)


இத்தொடரின் முதல் பதிவை படித்துவிட்டு இங்கு தொடர வாசகர்களை அன்புடன் கோருகிறேன்.

கடவுளும் மனிதனும் – பகுதி:2



இப்பதிவில் வேதத்தின் கண் எனப் போற்றப்படும் ஜோதிடம் உருவான வரலாறை சிறிது ஆராய்வோம். ஆதிமனிதன் பிரபஞ்சத்தைப் பற்றி சிந்தித்து கண்டறிந்த உண்மைகளே வேதங்களாக உருமாறின என அறிந்தோமல்லவா? அதற்கான அடிப்படை என்ன என்பதை முதலில் அறியலாம் வாருங்கள்.


ஆதி மனிதன் சூரியன்,சந்திரர்களோடு செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி &  சனி உள்ளிட்ட 7 கிரகங்களை தனது வெறும் கண்ணால் அளவிட்டே  அறிந்து வைத்திருந்தான் . அது மட்டுமல்ல பூமி சூரியனைச் சுற்றிவரும் கிடைமட்ட அச்சுக்கு  குறுக்கு வாட்டு அச்சில் பூமியை நிலவு சுற்றிவருவதையும் தோராயமாக அறிந்து வைத்திருந்தான். அப்படி பூமியை சந்திரன் சுற்றிவரும் குறுக்கு வாட்டு அச்சில் இரண்டு இடங்களில் கிரகங்கள் வரும்போது ஒரு சலனத்திற்கு  ஆளாவதைக்கூட அறிந்து அவ்விரு இடங்களை ஒளிப்புள்ளிகள் என்ற அளவில் மதிப்பிட்டுருந்தான் . (இவ்விரு ஒளிப்புள்ளிகளே தற்போது ராகு – கேது என அழைக்கப்படுகிறது )


7 கிரகங்களை கணக்கிட்ட நமது முன்னோர்கள் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ போன்ற இத்யாதிகளை  ஏன் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள வில்லை என்ற கேள்வி எழும். நன்றாக கவனியுங்கள் வியாழனின் துணைக்கோளான Canymede துனைக்கோலைக்கூட எமகண்டன் என குறிப்பிட்டு வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமைக்குக் காரணம் இக்கிரகங்களில் இருந்து வரும் கதிர்வீச்சின் தாக்கம் உயிரினங்களின் மீது குறிப்பிடத்தகுந்த பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்பதே.

பண்டைய மனிதன் பலகாலம் வின்வெளியை உற்று நோக்கிக்கொண்டிருந்த போது நமக்கு மிக அருகில் பிரகாசமாய்த் தெரியும் நிலவையே முதலில்  ஆராய்வதற்கு முற்பட்டான். ஒரு எண்ணிக்கையாக முழு நிலவைக் கணக்கு வைத்து என்ன ஆரம்பித்த போது ஒரு ஆச்சரியத்தை முதலில் கண்டுபிடித்தான். உதாரணமாக ஒரு மழைக்காலத்தில் இருந்து முழு நிலவை எண்ணத் துவங்கினான் எனக் கொள்வோம். அப்படி எண்ணும் போது 12 முழு நிலவு (பௌர்ணமி) கடந்த பின் 13 வது முழு நிலவு வரும் போது அவன் எந்த மழைக்காலத்தில் துவங்கினானோ அதே மழைக்காலம் மீண்டும் வருவதை கவனித்தான். அதாவது 12 முழு நிலவு கடந்தபின் மீண்டும் முதலில் இருந்து துவங்குவது போன்ற காலச் சுழற்சி. இதனடிப்படையிலேயே எப்படி இருக்கும் என்று இதுவரை எவராலும் அனுமானிக்க முடியாத பிரபஞ்சத்தை 360 டிகிரி கொண்ட ஒரு வட்டமாக உருவகப்படுத்தி அதை 30 டிகிரி கொண்ட 12 சம அளவுள்ள  ராசி மண்டலங்களாக்கினான்.        30 டிகிரி x 12 ராசி மண்டலங்கள் = 360 டிகிரி (வட்டத்தின் சுற்றளவு).

பூமி சூரியனைச் சுற்றிவரும் வட்டப்பாதையில் ஒரு  நாளைக்கு ஒரு  டிகிரி என்று வேகத்தில் நகர்ந்தால் ஒரு முழுச்சுற்றுக்கு 360 நாள்தான் ஆகும். பின் எப்படி 365.25 நாள் என மாற்றி அமைத்திருப்பார்கள் என்ற கேள்வி எழும். ஒரு குறிப்பிட்ட வானியல் புள்ளியை மையமாகக் கொண்டு பூமி சுற்றிவருவதை கணக்கிட்டார்கள். 360 டிகிரி கொண்ட வட்டப்பாதையின் துவக்கப்புள்ளியை பூமி மீண்டும் அடைய 365.25 நாட்கள் ஆவதை அறிந்ததோடு மட்டுமின்றி அது வட்டப்பதையால்ல நீள் வட்டப்பாதை எனத் திருத்தி வருட நாட்களை உருவாக்கினார்கள். வார நாட்களுக்கு கண்ணால் காணும் ஏழு கிரகங்களின் பெயர்களையே சூட்டினார்கள் என்பதை வாசகர்கள் நான் சொல்லி அறியவேண்டியதில்லை.

இதுவரை பண்டைய மனிதன் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். முனிவர்கள், ரிஷிகள்  நமது முன்னோர்கள் என்ற வார்த்தையைப் நான் இப்பதிவில் இதுவரை பயன்படுத்தவில்லை என்பதை கவனிக்கவும். அதற்குக் காரணம் பின்வரும் கதை .

வானவெளியில் கோலோச்சும் குருவின் புதல்விக்கும் கடலரசன் என்றழைக்கப்படும் கேதுவின் புதல்வனுக்கும் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற முடிவாகியிருந்தது. புதன், வெள்ளி போன்ற ஏனைய கிரகங்கள் தத்தம் மனைவியருடனும் மந்திரிப்பிரதிநிதிகளுடனும் வந்திருந்ததால் குரு அவர்களைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்த வேளையில் குருவின் ஆஸ்தான ஜோதிடர் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போடுவார் என குரு சற்றும் எதிர்பார்க்கவில்லை. குருவின் புதல்வி தன் முதலிரவிலேயே தன் கணவனை இழந்து விதவையாகிவிடுவாள் என்பதே அச்செய்தி. எனினும் திருமணம் இனிதே நடந்தேறியது. முதலிரவில் காலன் எப்படி தன் மருமகனை தன்னை மீறி கொன்றுவிட முடியும் என்ற ஆவேசத்தில் தன்  மகளின் நல்வாழ்வின் பொருட்டு விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சாவித் துவாரத்தின் வழியே முதலிரவு அறைக்குள் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தார் குரு. பொழுது புலர்த்தது, ஜோதிடர் கூறியபடி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. குரு ஜோதிடரை அழைத்து விளக்கம் கேட்டார். அதற்கு ஜோதிடர் “குருவே தங்களின் மகத்தான பார்வையை மீறி காலனால் உங்கள் மருமகனை அணுக முடியவில்லை இதுவே காரனம்” என்றார்.

இங்கு வாசகர்கள் கவனிக்க வேண்டியது இக்கதை நமது இந்துப் புராணங்களில் சொல்லப்பட்டதல்ல ‘இந்துப் புராணங்களில் சொல்லப்பட்டதாக திரித்துக் கூறப்படுவது’. இது கிரேக்கப் புராணத்தில் உள்ள கதை. குரு , கேது போன்ற பெயர்கள் உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக நான் பெயர் மாற்றிக் கூறியவை அவ்வளவே.  ‘குருவருள் கிடைத்தால் திருவருள்’, ‘ குரு பார்க்கக் கோடி நன்மை’ போன்றவைகலெல்லாம் குருவைப்பற்றி நாம் அனுபவித்தறியும் உண்மை. கிரகங்கள் அவற்றின் தாக்கம்,12 ராசி மண்டலங்கள் , வருட, மாதக் கணக்குகள் போன்றவற்றை முதலில் பாபிலோனியர்களும், கிரேக்கர்களுமே ஆராய்ந்து அறிந்ததாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன, அவர்களும் இவற்றின் முக்கியத்தினை உணர்ந்து கிரகங்கள் உள்ளிட்ட இயற்கை வடிவங்களை புராண கதா பாத்திரங்களாக அவர்களது புராணங்களில் குறிப்பிட்டுள்ளனர்  என்பதை உங்களுக்கு புரிய வைக்கவே இக்கதையை  நான் இங்கு உங்களுக்குச் சொன்னேன். தங்களது  ஞானத்தால் அறிந்த இயற்கை  உண்மைகளோடு, வியாபாரத்தொடர்புகள் மூலம் மேற்சொன்ன பாபிலோனியர்கள் உள்ளிட்ட அந்நியர்கள் அறிந்தவைகளையும் ஒப்பிட்டு அவர்களைப்போலவே நமது சூழலுக்குத் தகுந்தார்ப்போல் நமது புராணங்களில் இயற்கை வடிவங்களை உருவகப்படுத்தியிருக்கிரார்கள் நமது முனிவர்கள் என்பதை நாம் உணரலாம்.

இனி நமது சித்தர்கள் முனிவர்களின் கருத்துக்களுக்கு வருவோம். பூமியின் சுழற்சி முறைகளை அறிந்தது  போலவே ஏனைய கிரகங்களின் சுழற்சிக்காலங்களையும் நமது ஞானிகள் அறிந்தனர். சரி, அது என்ன  60 வருடங்களுக்கு பெயர்கள் ஏன்  100 வருடங்களுக்கு பெயர்களை  வைக்கவில்லை எனக் கேட்பவர்களுக்கு, மனிதனின் வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகளுக்குக் காரணமாக இருக்கும் குரு 60 ஆண்டுகளில் 5 முறையும் சனி 2 முறையும் சூரியனை சுற்றிவந்துவிடுகின்றனர்  என்பதை உணர்ந்தே 60 ஆண்டுகளை மனித வாழ்வின் காலச் சுழற்சியாக மதிப்பிட்டு 60 ஆண்டுகளுக்கு பெயரிட்டுள்ளனர் நமது முன்னோர்கள்.

சரி நட்சத்திரங்களுக்கு வருவோம் நவீன வானியல் கணக்கீட்டின்படி 88 நட்சத்திர மண்டலங்களை தற்கால அறிவியலார் வகுத்துள்ளார்கள். இப்படி இருக்க எப்படி  நட்சத்திரக் கூட்டங்களை 27 ஆக கணக்கிட்டனர் என அறிந்து கொள்வது அவசியம். விண்ணிலிருந்து வரும் கிரகக் கதிர்வீச்சுகளின் தாக்கம் அனைத்து உயிரங்களின் மீதும் ஏற்படுகிறது என அறிந்தாலும் மனிதன் அவை தங்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என அறியவே முதலில் விரும்பினான். அதற்காக ஒரு யுக்தியை உருவாக்கினான். ஒரு ஆரோக்கியமான பெண்ணின் மாதவிடாய் சுழற்சிக்காலம் 28 நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த 28 நாட்களை 10 ஆல் பெருக்கினால் (28 ன் 10 மடங்கு) 280 நாட்கள் வரும். அதாவது ஒரு பூப்படைந்த பெண் கருத்தரித்தால் கருத்தரித்த நாளிலிருந்து 280 ஆவது நாளில் குழந்தையை பெற்றெடுப்பாள் (30 நாட்களைக் கொண்ட 9 மாதங்கள் முடிந்து 10வது மாதம் 10வது நாள் குழந்தை பிறக்கும்). நாம் முதலில் பார்த்த கணக்குப்படி 7 கிரகங்கள் மற்றும் 2 ஒளிப்புள்ளிகளைக் கூட்டி வரும் எண்ணிக்கையான 9 ஆல் இந்த 280 நாட்களை வகுத்தால் 27 வரும். இப்படித்தான் நமது ஞானிகள் சூரியன் தன் அச்சில் சுழழும் சுற்றுப்பாதையிலுள்ள நட்சத்திர மண்டலங்களை 27 ஆக அளவிட்டான். சூரியன் சுழழும் அச்சிற்கு மேல் மற்றும் கீழுள்ள நட்சத்திர மண்டலங்கள் சூரிய மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மிகக் குறைவு என்பதால் சூரியன் சுழழும் அச்சின் பின்னணியிலுள்ள நட்சத்திர மண்டலங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள்.

இதுபோன்று ஜோதிடத்தின் ஒவ்வொரு அங்கங்களுக்கும் விளக்கம் அளிக்க இயலும். யார் ஜோதிடத்தில் பன்னிரெண்டு கட்டங்களை உங்களுக்கு குறிப்பிட்டார்கள்? எதற்கு முட்டாள்தனமாக 27 நட்சத்திரங்கள் என வினவுவோர்கள்  மேற்சொன்ன உண்மைகளை உணர வேண்டும்.

‘ஜோதிடம் வல்லான் வகுத்ததல்ல, வந்து சென்றவர்கள் நமது வாழ்வை புரிந்துகொள்ள அளித்துச் சென்றதே’.

நமது இதிகாச புராணங்களின் அடிப்படை ஜோதிடமே என்பதால்தான் ஜோதிடத்தை நமது  தர்மம் வேதத்தின் கண்கள் எனப் போற்றுகிறது.

மூன்றாவது பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.