என்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்க வரும்போது பலர் கேட்கும் கேள்வி இது. வழக்கமான
ஜோதிடன் என்ற முறையில் இல்லாமல் ஆராய்ச்சி ஜோதிடன் என்ற முறையில் இதன் பின்னணியை
ஆராய்ந்து பார்க்கும் போது பல அறிய உண்மைகள் தெரிய வருகின்றன.
முதலில் இதன் தொன்மையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரிய வருகிறது. மேலும் இதன் மூலம், பாபிலோனியர்களிடமிருந்து ஏற்பட்டது என்பதும் அறியவருகிறது.‘கடவுளும் மனிதனும்’ பதிவில் நான் குறிப்பிட்டது போல அவர்கள்தான் முதன் முதலில் விண்ணை ஆழ்ந்து நோக்கி பல அறிய உண்மைகளை அளித்துள்ளனர். அப்படி அவர்கள் ஆழ்ந்து விண்ணை நோக்கியபோது நக்ஷத்திரங்களின் கதிவீச்சின் அளவு, அக்கதிர் வீச்சுக்கள் பாய்வது கீழ் நோக்கியா?அல்லது மேல் நோக்கியா? (கீழ்நோக்கு நக்ஷத்திரங்கள் மற்றும் மேல்நோக்கு நக்ஷத்திரங்கள் என பஞ்சாங்களில் நக்ஷத்திரங்களைக் குறிப்பிட்டிருப்பதன் காரணம் இதுதான். கீழ் நோக்கு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பூமியைத் தோண்டுவது, பயிரிடுவது ,சம நோக்கு நக்ஷத்திரங்கள் வரும் நாட்களில் வாகனங்கள், ஆடு மாடுகள் வாங்குதல் மற்றும் மேல்நோக்கு நக்ஷத்திரங்கள் வரும் நாட்களில் அறுவடை செய்தல் போன்றவற்றைச் செய்யலாம் என்பது போன்றவை இதன் பயன்கள்.)மேலும் நக்ஷத்திரங்களில் இருந்து வரும் ஓசைகள் எத்தகையது என்பது உள்ளிட்ட பல ஆச்சரியமான உண்மைகளை அளவிட்டிருக்கிறார்கள்.
மேற்சொன்னவற்றில், நக்ஷத்திரங்களில் இருந்து வரும் ஓசைகளை அளவிட்டது மிக
முக்கியமானது. இதன் அடிப்படையிலேயே நக்ஷத்திரங்களின் நாம எழுத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். இதனை மூலமாகக்
கொண்டே நாஸ்ட்ரடாமஸ்
தமது புகழ்பெற்ற ‘THE CENTURIES’ என்ற எதிர்காலக் கணிப்பு நூலில் பல இடங்களில் இப்பெயருடயவர்களால் இச்சம்பவங்கள் நடக்கும் என குறிப்பிட்டுள்ளதை
உணர முடிகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஹிட்லரை ‘ஹிஸ்ட்லர் ‘ என மிக
நெருக்கமாகக் குறிப்பிட்டுள்ளதைக் கூறலாம். (இதில் ‘ட்’ எனும் எழுத்தை நாஸ்ட்ரடாமஸ் வாழ்ந்த பிரான்ஸ் மற்றும் அதன் சார்புடைய நாடுகளில் அப்போதைய காலகட்டத்தில் பயன்படுத்துவது
வழக்கத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை எனவே ‘ட்’டுக்கு பதில் ‘ஸ்’ ஐக்கொண்டு ஹிஸ்ட்லர் எனக் குறிப்பிட்டிருக்கலாம் என என்னுடன்
ஜோதிடத்தில் ஆய்வு செய்து வருபவரும் சென்னையில் அரசுப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவருமான
திரு. வேங்கடசுப்பிரமனியன் (மணியன்னா) அவர்கள் குறிப்பிடுகிறார்.)
நாஸ்ட்ரடாமஸ்
யார் எனக் கேட்பவர்கள் நமது விக்கியிடம் (விக்கிபீடியா-தகவல் களஞ்சியம்) பின்வரும்
இணைப்பைச் சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.
இந்த நாம எழுத்துக்களோடு தொடர்புடைய நக்ஷத்திரங்களின் குணாதிசயங்களை அந்த
நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் பிரதிபலிப்பர் என்பது உண்மை. ஜோதிடம் வளர்ந்துகொண்டிருந்த
பண்டைய கால கட்டத்தில் இதை ஆராய்ந்து
பார்க்க ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவரவரின் ஜனன நக்ஷத்திரங்களுக்கு ஏற்ப இந்த
நாம நக்ஷத்திர எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள்.
மனிதர்கள் ஆற்றோரங்களில் விவசாயம் செய்துகொண்டு, காடுகளில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டு 20 முதல் 40 குடும்பங்களைக் கொண்ட சிறு குழுக்களாக கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்த சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன் இப்படி நக்ஷத்திரங்களின் பெயர்களின் அடிப்படையில் மனிதர்களின் குணாதிசயங்களை அளவிடுவது மிக எளிதாக இருந்தது.
ஆனால் ஒரு குடியிருப்பில் 40 குடும்பங்கள் வசிக்கும் தற்காலத்தில், ஒரு சிறு நகரத்தில்கூட
பத்து லட்சம்பேர் வசிக்கும் இன்றைய சூழலில் இப்படி அளவிடுவது எளிதல்ல. எனவே இப்படி
நாம நக்ஷத்திர எழுத்துக்களைப் பயன்படுத்துவது என்பது ‘கால தேச வர்த்தமான’க்
கணக்கின்படி இன்றைய காலகட்டத்தில் பொருந்தாத
ஒன்றாகிவிடுகிறது. எனினும் இவற்றைப் பயன்படுத்துவது அவரவர் விருப்பமே.
பின்வருவன நக்ஷத்திரங்களுக்கான நாம எழுத்துக்கள்.
(4 பாதங்களின் அடிப்படையிலும் பயன்படுத்தலாம்)
(4 பாதங்களின் அடிப்படையிலும் பயன்படுத்தலாம்)
1
|
அஸ்வினி
|
சு, சே, சோ, லா
|
2
|
பரணி
|
லி, லூ, லே, லோ
|
3
|
கார்த்திகை
|
அ, இ, ஊ, ஏ
|
4
|
ரோஹினி
|
ஒ, வ, வி, வு
|
5
|
மிருகஷீரிஷம்
|
வே, வோ, கா, கி
|
6
|
திருவாதிரை
|
கு, க, ங, ச்சா
|
7
|
புனர் பூசம்
|
கே, கோ, ஹ, ஹி
|
8
|
பூசம்
|
ஹீ, ஹே, ஹோ, ட
|
9
|
ஆயில்யம்
|
டி, டு, டே, டோ
|
10
|
மகம்
|
ம, மி, மு, மெ
|
11
|
பூரம்
|
மோ, ட, டி, டு
|
12
|
உத்திரம்
|
டே, டோ, ப, பி
|
13
|
ஹஸ்தம்
|
பு, ஷ, ந , ட
|
14
|
சித்திரை
|
பே, போ, ர, ரி
|
15
|
சுவாதி
|
ரு, ரே, ரோ, த
|
16
|
விசாகம்
|
தி, து, தே, தோ
|
17
|
அனுஷம்
|
ந, நி, நு, நே
|
18
|
கேட்டை
|
நோ, ய, யி, யு
|
19
|
மூலம்
|
யே, யோ, ப, பி
|
20
|
பூராடம்
|
பூ , த, ப, ட
|
21
|
உத்திராடம்
|
பே, போ, ஜ, ஜி
|
22
|
திருவோணம்
|
ஜூ, ஜே,
ஜோ, கா
|
23
|
அவிட்டம்
|
க, கீ , கு,
கூ
|
24
|
சதயம்
|
கோ, ஸ, ஸி, ஸீ
|
25
|
பூரட்டாதி
|
ஸே, ஸோ, தா, தீ
|
26
|
உத்திரட்டாதி
|
து, ஞ, ச, ஸ்ரீ
|
27
|
ரேவதி
|
தே, தோ, ச, சி
|
மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்!
வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.
24
ReplyDeleteகோ, ஸ, ஸி, ஸீ
ஸ
ReplyDeleteடி டு டே டோ பெயர் சொல்லுங்க ஐயா
ReplyDelete