நாளுக்கு நாள் புதுமையான விஷயங்கள்
அறிமுகமாகி பழமையானவைகளை புறக்கணிக்க வைக்கிறது. புதுமைகளை நாட நாட நமக்கு வாழ்வில்
வசதிகள் கூடுகின்றன. பொருளாதார
வளர்ச்சிகளும் கூடும். எனவே
புதுமைகளை புறந்தள்ளினால் வாழ்வில் முன்னேற முடியாது. ஆனால் புதுமைகளை அதீதமாக
பயன்படுத்துவது அதாவது உண்ண – உறங்கக்கூட மின்னணு சாதனங்கள்
செயலிகள் என்று அதை நோக்கி செல்வது நமக்கு சாதகங்களை விட பாதகங்களையே அதிகம்
ஏற்படுத்தும் என்பதை காலப்போக்கில் உணர முடியும். இன்றைக்கு கைபேசிகள் இல்லாத மனிதர்
என்றால் அவர் சுத்த சந்நியாசியாகத்தான் இருக்க முடியும்.
கைபேசி, முகநூல்
உள்ளிட்ட நவீன மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை குறிக்கும் காரக கிரகங்கள் ராகு-கேதுக்களாகும். ராகு-கேதுக்கள் போன்ற பாவக்கிரகங்கள்
ஜாதகத்தில் 3,6,10,11 ல் அதுவும் தனித்த நிலையில் அமைவது
விரும்பத்தக்கது. இவை
லக்னம் மற்றும் தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தில்
அமைவது மற்றும் வாக்கு ஸ்தானமான 2 மற்றும்
8 ல் அமைவதால் நவீன மின்னணு தகவல்
தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி வாழ்வில் பொருளீட்ட வழிவகுக்கும். அதே சமயம் அவை அமையும் பாவங்கள் 1,2,7,8 ஆவதால் இல்லறத்திலும் குடும்ப
வாழ்விலும் வாழ்க்கத்துனைவர் வகையிலும் பாதகத்தை செய்யாமல் போவதில்லை.
மேற்கண்ட ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. கும்ப லக்ன ஜாதகம். மிதுன ராசியில் சந்திரன் புனர்பூசம் – 2 ல் அமைந்துள்ளது. 1989 ல் பிறந்த ஜாதகிக்கு சனி திசையில்
லக்னத்தில் அமைந்த ராகுவின் புக்தியில் திருமண நிச்சயம் நடந்தது. லக்னத்தில் ராகு சுய சாரத்தில் சதயம் – 1 ல் நிற்கிறது. இந்த அமைப்பால் ஜாதகி மென்பொருள்
துறையில் பணிபுரிகிறார். இதனால்
பொருளாதார வளம் கொண்டவராக ஜாதகி உள்ளார். திருமணம் நிச்சயம் ஆனவுடன் ஜாதகியும்
இவருக்கு நிச்சயிக்கப்பட்ட வரனும் கைபேசியில் தினமும் பேசி வந்தனர். மண மகனை குறிக்கும் 7 ஆமதிபதி சூரியன் மேஷத்தில் உச்சமாக
உள்ளார். ஜாதகிக்கு
நடக்கும் ராகு புக்தி சூரியனுக்கு பகையாகும். 7 ஆமதிபதி உச்சமானதால் திருமணதிற்கு
முன்னதாகவே வரன் ஜாதகிக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். லக்னத்தில் அமைந்த ராகு மேஷ சூரியனை
தனது 3 ஆம்
பார்வையால் கட்டுப்படுத்துகிறது. இதனால்
பத்திரிகை அடித்து வினியோகித்துவிட்ட நிலையில் ஜாதகி நிச்சயிக்கப்பட்ட வரனின் அதீத
கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் திருமணத்தை
நிறுத்திவிட்டார். இங்கு
7 ஆமதிபதி சூரியன் உச்சமானாலும் 7 ஆமதிபதி மேஷ சூரியனுக்கு பாதகத்தில்
கும்பத்தில் ராகு அமைந்து சூரியனை தனது 3 ஆம் பார்வையால் கட்டுப்படுத்துவதால் ஜாதகி
தனது உறுதியான முடிவால் மணமகனை மறுத்து உதறினார்.
கீழே 2
ஆவதாக ஒரு ஆணின் ஜாதகம்.
மீன
லக்ன ஜாதகத்தில் ராகு ஜீவன காரகன் சனியோடு சேர்ந்து உப ஜெய ஸ்தானமான 6 ஆமிடத்தில்
அமைந்துள்ளார். 12 ஆமதிபதியாகிய சனி 6 ஆமிடத்தில் அமைவது ஒருவகையில் விபரீத ராஜ
யோகம் என்றாலும் அவர் ராகுவோடு இணைந்து அமைவது ஜீவன வகையில் தடைகளை ஏற்படுத்தும்
அமைப்பாகும். மேலும் சனி 6 ல் அமைந்தாலும் அவர் பகை வீட்டில் சிம்மத்தில் அமைவது
சிறப்பல்ல. இவர்களுக்கு இடம் கொடுத்த சூரியன் கால புருஷனின் மூன்றாமிடத்தில்
புதனுடன் இணைந்து நிற்கிறார். சிம்மத்தில் சனியோடு ராகுவும் அமர்ந்து ராகு சூரியனை
தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதால்
சனிக்கு பகைவீடு என்ற தோஷத்தை ராகு போக்கிவிடுகிறார். ஆனால் சனி ராகுவிற்கு
கட்டுப்பட்டவராகிறார். ஜாதகருக்கு ஜீவனம் ராகுவால் தடைபடாமல் இருக்க வேண்டுமானால்
ராகுவின் காரகத்தொழிலை செய்தாக வேண்டும்.
ஜாதகர்
கைபேசி விற்பனை நிறுவனம் ஒன்றில் பழுது நீக்கும் வேலை செய்துவந்தார். ராகு
சிம்மத்தில் அமைந்துள்ளதால் நிறுவனத்தில் முதலாளியைவிட ஜாதகரே முக்கிய நபராக
திகழ்ந்தார். ராகுவின் காரக தொழிலை செய்ததால் (ராகு - குற்றம் கண்டுபிடித்து அதை
நீக்குதல்) தொழிலில் ஜாதகர் சிறப்புற்றார். தற்போதைய திசா நாதன் சனி, சூரியனின்
வீட்டில் அமர்ந்ததால் பணி புரிந்த கடையிலிருந்து விலகி சொந்தமாக கைபேசி விற்பனை
& பழுது நீக்கும் நிறுவனம் தொடங்கி நடத்திவருகிறார். இதற்கு கடக்க ராசியில் சனியின் பூசம்-4ல் உச்சமான குருவும் ஒரு முக்கிய காரணம். சனி களத்திர ஸ்தானமான 7 க்கு விரையத்தில்
நின்று திசை நடத்துவதாலும் 6 ஆமதிபதி சூரியன் 7 ஆமதிபதியோடு இணைந்து ராகு பார்வை
பெறுவதாலும் பொருளாதார வளத்தை கொடுக்கும் இதே சனியும்-ராகுவும் குடும்ப வாழ்வில்
பாதிப்பை ஜாதகருக்கு தற்போது வழங்கி வருகின்றன. ஜாதகர் தற்போது மனைவியோடு
கருத்துவேறுபாடு கொண்டுள்ளார்.
மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம் அடுத்து.
தனுசு லக்ன ஜாதகத்தில் ராகு-லக்னதிலும் கேது தொடர்புகள் மற்றும்
களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்திலும்
அமைந்துள்ளது. சந்திரன்
விருட்சிக ராசியில் அனுஷம்-4 ல் அமைந்துள்ளது. ராகு-கேதுக்கள் தனித்த நிலையில்
அமைந்துள்ளது நன்மையே எனினும் 1-7 தொடர்பாவதால் அவைகளின் மூலம் சாதக பாதகங்கள் இரண்டையுமே அடைய
நேரிடும் என்பதை குறிக்கிறது. இந்த
ஜாதகியும் ராகு-கேதுக்கள் குறிக்கும் மென்பொருள்
துறையில் பணிபுரிந்து வருகிறார். 1992 ல் பிறந்த இந்த ஜாதகிக்கு தற்போது
திருமணம் ஏற்பாடாகி முடிவாகிய பின் ஜாதகியும் நிச்சயிக்கப்பட்ட வரனும் கைபேசியில்
தினமும் பேசிவந்தனர். ஜாதகிக்கு
சுக்கிர திசையில் சுய புக்தி நடக்கிறது. சுக்கிரன் ஐந்தாமிடத்தில் லக்ன
பாதகாதிபதி புதனுடன் இணைந்துள்ளார். புதன்
தகவல் தொடர்பின் காரக கிரகம் என்பதால்
தகவல் தொடர்பு மூலமாகவும் 1-7 ல்
நிற்கும் சர்ப்ப கிரகங்களால் நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் மூலமும் பாதகம் ஏற்பட
வேண்டும்.
சுக்கிரன் பாவத்தில் களத்திர
ஸ்தானத்திற்கு விரையத்தில் 6 ஆமிடத்தில் சூரியனுடன் ஆட்சி பெற்று
திசையையும் புக்தியையும் நடத்துகிறார். விருட்சிக
ராசிக்கு ஏழரை சனி இன்னும் முடியவில்லை. ஜாதகிக்கு தற்போது சுக்கிர திசை சுய
புக்தியில் ராகு அந்தரம் நடக்கிறது. 2 ஆமிடத்தில் நிற்கும் சனி 8 ஆமிடம் தொடர்பாகும்போது அவமானத்தை ஏற்படுத்தும். சனியின்
நட்சத்திரத்தில் அனுஷம்-4 ல் அவமான ஸ்தானாமான 8 ஆமதிபதி சந்திரன் நிற்கிறது. ராசிக்கு 2 ல் லக்னத்தில் சனி தற்போது
கோட்சாரத்தில் நிற்கிறது. இதனால் ஜாதகியோடு கைபேசி பேச்சுக்கள்
மூலம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிச்சயிக்கப்பட்ட வரன் திருமணத்தை நிறுத்தி
விட்டார். இதனால்
ஜாதகி பெருத்த அவமானமும் மன உழைச்சலும் அடைந்தார்.
4 ஆவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.
சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி
சூரியன் தகவல் பரிமாற்ற ஸ்தானமான 3 ஆமிடத்தில்
நீசம். வாகன
யோகங்களை குறிக்கும் சுக்கிரன் கன்னியில் நீசம். லக்னாதிபதி சூரியன் சுக்கிரனின்
வீட்டில் ராகுவோடு இணைந்து அமைந்ததால் ஜாதகர் வாகனத்துறையில் ஈடுபட்டுள்ளார். லக்னாதி சூரியனும், வாகன காரகன் சுக்கிரனும், சுக்கிரனின்
வீடும் பாதிக்கப்படிருப்பது இதற்கு சாதகமான அமைப்பல்ல. ஜாதகருக்கு வாகன ஸ்தானமான 4 க்கு விரையத்தில் 3 ல் நிற்கும் புதனின் திசை நடக்கிறது. புதன் தகவல் தொடர்ப்பு காரகன் என்பதால்
தனது தொழிலை விளம்பரம், பத்திரிகை, தகவல் தொடர்புகள் மூலம் விரிவுபடுத்த
முனைகிறார். திசா
நாதன் புதன்,நீச
சூரியன் மற்றும் ராகுவோடு இணைந்து நிற்பதால் அதீத கற்பனைகளும் பேச்சும் கொண்டவர். இதனால் இவரிடமிருந்து அழைப்பு வந்தாலே
இவர்களது தொடர்பாளர்கள் இவரை தவிர்க்கின்றனர். இதற்கு காரணம்
தகவல் தொடர்பு காரகனும் வாக்கு காரகனுமான புதன் நீச கிரக தொடர்பாகி ராகுவோடும் தொடர்பு பெற்ற நிலையில் நீச சுக்கிரனோடு
பரிவர்த்தனை பெற்றதேயாகும்.
எனவே கைபேசி, முகநூல் உள்ளிட்ட நவீன
மின்னணு சாதனங்களை குறிக்கும் ராகு கேதுக்கள்
மற்றும் தகவல் தொடர்பு காரகன் புதனின் நிலையை அறிந்து இவற்றை அளவோடு பயன்படுத்தி
வாழ்வில்
வளம் காண்பீர். இவை ஏற்படுத்தும் தாக்கம் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் என்பதையும்
கவனத்தில்கொள்ளவேண்டும்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில்
சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501.
No comments:
Post a Comment