ஜாதகத்தை
ஆய்வு செய்யும் சில ஜோதிடர்கள் ஜாதகப்படியான சில விளக்கங்களை வந்தவரிடம் கேட்டு
ஜாதகத்தை உறுதி செய்துகொண்டு பலன் சொல்வதை கவனித்திருக்கலாம். இது பொதுவாக
ஜாதகத்தின் உண்மைத்தன்மையை அறிய பயன்படுத்தப்படும் ஒரு யுக்திதான். சில ஜாதகங்கள்
உத்தேச ஜாதகங்களாகவும் சில லக்னம் மாறியோ அல்லது சந்தி லக்ன ஜாதகங்களாகவும்
அமையும்போது ஜோதிடர்களுக்கு பலன் சொல்வதில் தடுமாற்றங்கள் எழத்தான் செய்கின்றன.
அதற்காகவே மேற்கண்டவாறு சில கேள்விகளை ஜோதிடர்கள் கேட்பர். ஜோதிடர்களிடம்
அளிக்கபடும் ஜாதகங்களில் ஜாதக கணிதங்களுக்கேற்ப தவறுகளும் இருப்பது உண்டு. அவற்றை
எல்லாம் சரிசெய்துதான் ஜோதிடர்கள் பலன் சொல்ல வேண்டியிருக்கும். எனது ஜாதகத்தில்
நேரத்தவறு இருக்கலாம் அதை சரி செய்து தர இயலுமா என நேரடியாக கேட்போரும் உண்டு.
அப்படியானவர்களிடம் ஜாதக விபரங்களோடு அவர்கள் வாழ்வில் நடந்த திருமணம், வேலை
கிடைத்த நாள் போன்ற சில முக்கிய சம்பவங்களின் நாட்களை பெற்றுக்கொண்டு ஜாதகத்தை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி சில நேர
திருத்தங்களை செய்யலாம். இப்பதிவில் இன்று ஜனன நேரத்தை சரி செய்வது பற்றி
ஆராயவிருக்கிறோம். ஜனன நேரத்தை திருத்த பல முறைகள் உண்டு என்றாலும் நம்பகமான ஒரு
முறை என நான் கருதுவது பிரசன்ன ஜாதகத்தைக்கொண்டு சரி செய்வதே ஆகும்.
தனது
உறவுப்பெண்ணின் ஜாதகத்தை கடந்த வருடம் அளித்திருந்த ஒரு நண்பர் மீண்டும் சில
நாட்களுக்கு முன் அதே ஜாதகத்தை முன்னிட்டு சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
முன்னதாக அனுப்பியிருந்த பிறந்த நாளானது 23.08.91 என அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது பிறந்த நாள் 28.03.91 என குறிப்பிட்டு குறுஞ்செய்தி
அனுப்பியிருந்தார். இது போன்ற சூழ்நிலைகள் ஒரு ஜோதிடருக்கு விரக்தியை
ஏற்படுத்துபவையாகும். வருடம் ஒன்றுதான் ஆனால் பிறந்த நாள் மற்றும் மாதம் ஆகியவை மாறுபட்டிருந்தன.
23.08 மற்றும் 28.03 என்பது தட்டச்சுப்பிழையாக
இருக்கும் என கருதி இதில் எது சரியான பிறந்த தேதி என ஆய்வு செய்தேன். எனது “ஜோதிட
சாகர” WhatsApp குழுவிலும்
இதை ஆய்வுக்கு பதிவிட்டிருந்தேன்.
பெண்ணின் இரு வேறு ஜாதகங்கள்
பிறந்த நாள் A படி ஜாதகி பிறந்தது சூரியன் சிம்மத்தில் இருக்கும்
ஆவணி மாதமாகும். ஜாதகம் B படி
ஜாதகி பிறந்தது சூரியன் மீனத்தில் இருக்கும் பங்குனி மாதமாகும். மூன்றாவதாக மேலே
குறிப்பிட்டிருப்பது ஆய்வு நாளின் கோட்சார நிலையாகும். ஆய்வு நாளின் மாதம் சூரியன்
மீனத்தில் இருக்கும் பங்குனி மாதமாகும். இது பிறந்த நாள் B உடன் ஒத்துப்போகிறது.
இதனால் இரண்டாவதாக அளிக்கப்பட்ட ஜாதகம்-B தான் சரியானதாகும். எனவே ஜாதகியின்
பிறந்தநாள் 28.03.1991 தான் என கணித்தோம்.
பிற்பாடு இதை தொடர்புடைய நபர் உறுதி செய்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
எது சரியான பிறந்த லக்னம்?
இரண்டாவதாக
மற்றொரு பெண்ணின்
ஜாதகம் கீழே.
மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்த நேரத்திற்கான ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.
இதை ஜாமக்கோள் பிரசன்னம் மூலம் உறுதி செய்வோம் வாருங்கள்.
ஜாமக்கோள் பிரசன்னைத்தில் கும்ப உதயத்தில் உள்வட்டத்தில்
புதன் அமைந்துள்ளதால் புதனின் லக்னமே ஜாதகருடையது என்பது புலனாகிறது. உதயம் கன்னி
லக்னத்திற்கு 6/8 ஆக (சஷ்டாஷ்டகத்தில்)
அமைகிறது. எனவே கன்னி லக்னமல்ல. அதே சமயம் மிதுனத்திற்கு திரிகோணத்தில் அமைந்த
புதன் மிதுனத்தில் உள்ள ஜாம (வெளிவட்ட) சனியோடு
பரிவர்த்தனை ஆகிறார். மிதுன சனியோடு பரிவர்தனையாகும் புதன் உதயத்தையும்
பரிவர்த்தனை ஆக்குகிறார். எனவே உதயமும் மிதுனத்திற்கு செல்கிறது. ஜாம சனி
கும்பத்திற்கு பரிவர்த்தனையாகி வரும். உதயமும் உதய தொடர்புகளும் நமது ஐயப்பாட்டிற்கான
விடைகளைக்கொண்டிருக்கும். எனவே பரிவர்த்தனைக்குப்பிறகு மிதுனத்திற்கு செல்லும்
உதயம் ஜாதகியின் ஜனன லக்னம் மிதுனம் என்பதை உறுதி செய்கிறது. கும்பத்திற்கு பரிவர்த்தனையாகி
செல்லும் சனியும் மிதுனத்திற்கு பரிவர்த்தனையாகி வரும் புதனும் ஜனன ஜாதகத்தில்
அமைந்த நிலையிலேயே பிரசன்னத்திலும் அமைவதை கவனியுங்கள். இதுதான் ஜாமக்கோள்
பிரசன்னத்தின் உன்னதம். சாதாரண பிரசன்னத்தில் இந்த நுட்பம் வெளிப்படாது. எனவே
ஜாதகியின் லக்னம் மிதுனமே ஆகும். கடகம் அல்ல என உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
மிதுனம் இரட்டை ராசி என்பதால் பிறப்பு விபரங்களையும் இருவேறு சூழல்களை ஒப்பிடும்படி
பிரசன்னம் காட்டியது கண்டு அதிசயயித்தேன். இந்த
பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்திலும் (04.04.2021 – மதியம் 12:26 மணி) கோட்சார லக்னம் மிதுனத்தில் செல்வது
பிரம்மிக்க வைக்கிறது. எனது ஜோதிட ஆய்வுக்கான இப்பெருமைகள்
யாவும் எனது ஜோதிட ஆசான்களையே சாரும்.
எது சரியான பிறந்த
நட்சத்திரம்?
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நட்சத்திர சந்தி உள்ளது. இதனால் சில
கணிதங்களில் பெண்ணின் நட்சத்திரம் பூசம்-4
ஆம் பாதம் எனவும் சில கணிதங்களில் ஆயில்யம் முதல் பாதம் எனவும்
வருவதாக என்னிடம் கொடுக்கப்பட்டது. சில அயனாம்ச மாறுதல்களாலும், கணித
மாறுதல்களாலும் இரு நட்சத்திரங்களின் சந்தியில்
ஜனன கால சந்திரன் செல்லும்போதும் இந்நிலை ஏற்படும். இதனால் எந்த நட்சத்திரம்
கொண்டு ஜாதகிக்கு நட்சத்திர பொருத்தம் பார்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு எனை நாடி
வந்திருந்தனர்.
கீழே பெண்ணின் ஜாதகம்.
கொடுக்கப்பட்ட இந்த ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் 16.39
பாகையில் பூச நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் உள்ளதாகவே எனது கணினி மென்பொருள் காட்டியது.
ஆனால் சில நிமிட மாறுதல்களில் அது ஆயில்யம் முதல் பாதம் என காட்டுகிறது. எனவே வந்தவர்களின்
நிலை புரிந்தது. இதனால் பிரசன்னம் மூலம் இதை அறிய முயன்றேன்.
கீழே ஆய்வு நேரத்திற்கான பிரசன்ன ஜாதகம்.
கோட்சார சந்திரன் விருட்சிகத்தில் 2.43 பாகையில் கடகத்தின் திரிகோணத்தில் விசாகம்-4 ஆம் பாதத்தில் செல்கிறது. ஒரு பாதம் மாறினால் நட்சத்திரமும் மாறிவிடும். கேள்வி பூசத்தின் 4 ஆம் பாதமா? அல்லது ஆயில்யத்தின் முதல் பாதமா? என்பதே. விசாகம் குருவின் நட்சதிரமானாலும் நட்சத்திர பாதம்-4 தான். கோட்சார சந்திரன் கேட்டையில் இருந்தால் ஜனன நட்சத்திரம் ஆயில்யம் என கூறலாம். எனவே பாத அடிப்படையில் பார்க்கும்போது பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் பூசம்-4 தான் ஆயில்யம் அல்ல என்பதை கோட்சார சந்திரன் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. கோட்சார சந்திரன் ஆத்மார்த்தமான நம் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கண்ணாடி ஆகும்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501
No comments:
Post a Comment